×
Saturday 28th of December 2024

காரண விநாயகர் திருக்கோவில், மத்தம்பாளையம்


Karana Vinayagar Temple History in Tamil

அருள்மிகு காரணவிநாயகர் திருக்கோவில், மத்தம்பாளையம்

மூலவர் காரணவிநாயகர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மத்தம்பாளையம்
மாவட்டம் கோயம்புத்தூர்

Mathampalayam Karana Vinayagar History

காரண விநாயகர் வரலாறு: காரணவிநாயகர் கோவில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. முன்னொரு காலத்தில் இவ்வூரைத் தாண்டியுள்ள மற்றொரு கிராம மக்கள் தங்கள் ஊரில் விநாயகர் கோவில் அமைக்க விரும்பி ஒரு சிலையை மாட்டு வண்டியில் எடுத்து வந்தனர். ஓரிடத்தில் வண்டியின் அச்சு முறியவே சிலையை இறக்கிவிட்டு, பழுது பார்த்தனர். மீண்டும் வண்டியில் சிலையைத் தூக்கி வைக்க முயன்ற போது அவர்களால் அசைக்கவே முடியவில்லை. அங்கேயே சிலையை வைத்து சிறு கோவிலும் கட்டினர்.

mathampalayam karana vinayagar

🛕 ஒருமுறை ஆங்கிலேயர்கள் அவ்வழியே ரோடு அமைப்பதற்காக கோவிலை அகற்றும்படி மக்களிடம் கூறினர். மக்கள் மறுக்கவே, தாங்களே கோவிலை அகற்ற ஏற்பாடு செய்தனர். அன்று இரவில் ஒரு ஆங்கில அதிகாரியின் கனவில் ஏராளாமான யானைகள் அவரை விரட்டுவது போல் கனவு வந்தது. இதனால் மனம் மாறிய அந்த அதிகாரி, கோவில் இருந்த இடத்தில் மட்டும் வளைவாக ரோடு அமைக்க ஏற்பாடு செய்தார். இப்போதும் இவ்விடத்தில் ரோடு வளைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

🛕 இந்த இடத்தில் ஏதோ காரணத்தால் விநாயகர் அமர்ந்த தால் இவரை காரண விநாயகர் என்றே அழைக்கின்றனர். மேலும் இப்பகுதி மக்கள் பசு, காளைகளுடன் விவசாயப் பணிகளை நடத்தி வந்தனர். கால்நடைகளின் விருத்திக்காகவும், நோயற்ற வாழ்வுக்காகவும் சிவனின் வாகனமான நந்தியை விநாயகரின் அருகில் வைத்தனர். கருவறையிலேயே விநாயகர் அருகில் நந்தி இருப்பது விசேஷ அம்சம். இங்கு காரணமுருகன், ஆஞ்சநேயர், கரிவரதராஜா பெருமாள் சன்னதிகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

mathampalayam karana vinayagar temple

Karana Vinayagar Temple Festival

திருவிழா: விநாயகர் சதுர்த்தி

பிரார்த்தனை: விவசாயிகள், விவசாயம் செழிக்க நந்தியுடன் இணைந்த விநாயகரைத் தரிசித்து செல்கின்றனர். இது தவிர புது வாகனங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன்: சிதறுகாய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Karana Vinayagar Temple Timings

🛕 காலை 8 மணி முதல் 6 மணி வரை கோவில் தொடர்ந்து திறந்திருக்கும்.

karana vinayagar temple mathampalayam

Karana Vinayagar Temple Address

🛕 Mettupalayam Road, Bilichi, Tamil Nadu 641104



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்