- டிசம்பர் 19, 2024
உள்ளடக்கம்
அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலங்கள் 207. இவை தவிர எழுகரை நாடு மற்றும் இந்தம்பலம் ஆகிய தலங்கள் இடம் அறிய முடியாத தலங்களாக உள்ளன. இங்கு தலங்கள் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு இங்கு தரப்பட்டுள்ளன.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சம்பந்தப் பெருமான் எலும்பைப் பெண்ணாக்கிய தலம். அம்பிகை மயில் வடிவில் இறைவனை வழிபட்டதால் மயிலாப்பூர் என்று அழைக்கப்படுகிறது. வெளிப் பிரகாரத்தில் முருகப்பெருமானுக்கு தனி சன்னதி உள்ளது. தனி கொடிமரமும் உள்ளது. வள்ளி, தெய்வானையுடன் குமரக்கடவுள் காட்சி தருகிறார். மூவர் தேவாரம் பெற்ற சிவத்தலம். சிவபெருமான் புற்று வடிவில் காட்சி தருகின்றார். அதனால் அவருக்கு புனுகு சாத்தி கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் இருந்து மூன்று நாட்கள் இறைவனை கவசம் இல்லாமல் தரிசனம் செய்ய முடியும். சுந்தரருக்கும் சங்கிலி நாச்சியாருக்கும் நடந்த திருமணத்திற்கு சிவபெருமான் மகிழ மரத்தடியில் வந்து சாட்சி சொன்ன தலம். உறுதிமொழியை மீறியதால் சுந்தரர் கண்பார்வை இழந்தார். முருகப்பெருமான் பாலசுப்ரமணியராக தனி சன்னதியில் காட்சி தருகிறார். பட்டினத்தார் முக்தி பெற்ற தலம். மாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் சிறப்பு வாய்ந்தது. தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலம். சிவபெருமான் சுயம்பு வடிவில் காட்சி அளிக்கிறார். காமதேனு பால் சுரந்து அபிஷேகம் செய்த தலம். பாம்பன் சுவாமிகள் சமாதி சற்றுத் தொலைவில் உள்ளது. இராமபிரானின் மகன்களான லவன், குசன் இருவரும் பூசித்த தலம். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். பரத்துவாஜ முனிவர் வலியன் என்னும் கருங்குருவியாக வந்து வழிபட்டமையால் திருவலிதாயம் என்று பெயர் பெற்றது. சுற்றுப் பிரகாரத்தில் முருகப்பெருமான் சன்னதி உள்ளது. மூலவரான சிவலிங்கத்திற்கு பின்புறம் சிவபார்வதியின் திருவுருவச்சிலை உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலம். வெளிப்பிரகாரத்தில் முருகப்பெருமான் சந்நிதி உள்ளது. முருகப்பெருமான் இருகரங்களுடன் தனியாக கிழக்கு நோக்கி காட்சி தருகின்றான். பங்குனி உத்திரப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குமரக்கடவுள் பாலசுப்ரமணியனாக, அபய கரத்துடன் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கின்றான். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சிவபெருமானின் ஐந்து சபைகளில் இது இரத்தின சபை. காரைக்காலம்மையாருக்கு சிவபெருமான் திருநடனக் காட்சி தந்து முக்தி அருளிய தலம். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாவதாகக் குறிப்பிடப்படுகிறது. திருப்புகழில் குன்றுதோறாடல் என்பது இத்தலத்தையும் குறிக்கும். இத்தலத்தில் முருகப்பெருமான் வள்ளியை மணம் புரிந்து அருளினார். இந்த மலை 400 அடி உயரம் உள்ளது. மொத்தம் 365 படிக்கட்டுகள் உள்ளது. இவை ஒரு வருடத்தின் மொத்த நாட்களைக் குறிக்கின்றது. மூலவர் தமது இடக்கரத்தை தொடைமீது வைத்து வலக்கரத்தில் வேலினை தாங்கி காட்சி அளிக்கிறார். இத்தலத்தில் ஆடிக்கிருத்திகை உற்சவமும், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ஆம் தேதி படி உற்சவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருக்கோயிலில் கந்த சஷ்டித் திருவிழாவில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. முருகப்பெருமான் குமரக்கடவுளாக எழுந்தருளிய தலம். எனவே குமரக்கோட்டம் என்று அழைக்கப்படுகிறது. ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கும், காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்கும் இடையில் சோமாஸ்கந்த மூர்த்தியாக காட்சி தருகின்றார். இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்த இலிங்கம் தேவசேனாதிபதீச்சரலிங்கம் என்ற பெயருடன் விளங்குகின்றது. கச்சியப்பர் இயற்றிய கந்தபுராணம் இந்த தலத்தில்தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது. வைகாசி விசாக பிரம்மோற்சவமும், கந்தர் சஷ்டிப் பெருவிழாவும் முக்கிய திருவிழாக்கள். இத்தலத்தில் முருகப்பெருமான் ஒருமுகமும், நான்கு கரங்களுடனும் காட்சி தருகின்றார். அவரது இருபுறமும் வள்ளிநாயகியும், தெய்வநாயகியும் தரிசனம் தருகின்றனர். முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராய் 6 அடி உயரத்தில் காட்சியளிக்கின்றார். இக்கோயிலில் தேவேந்திரனால் உருவாக்கப்பட்ட வஜ்ஜிர தீர்த்தம் பாபத்தைப் போக்கும் புனித தீர்த்தமாக உள்ளது. முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சுயம்பு மூர்த்தியாக கந்தசுவாமி என்ற பெயருடன் காட்சியளிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற சிவபெருமானின் தலமாகும். முருகப்பெருமானுக்குத் தனி சன்னதி உள்ளது. இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கின்றது. இங்கு முருகப்பெருமான் பாலசுப்ரமணிய சுவாமி என்ற பெயருடன் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு கிழக்கு முகமாகக் காட்சி தருகிறார். இப்பெருமானின் திருமார்பில் ருத்ராட்சமணி மாலைகளும், திருக்கரங்களில் நாகாபரணமும், திருச்செவிகளில் குண்டலங்களுடன், சடைமுடியும் கொண்டு காட்சி தருகிறார். இத்தலத்தில் மூலவராக உள்ள சிவபெருமான் அகத்தீஸ்வரர் என்னும் திருநாமத்துடனும், அம்பிகை அகிலாண்டேஸ்வரி என்னும் திருநாமத்துடனும் காட்சி தருகின்றனர். வியாக்ரபாதருக்கு நடராஜப்பெருமான் தனது நடனக்கோலத்தைக் காண்பித்தத் தலமாதலால் மேற்கண்ட பெயர்களால் வழங்கப்படுகிறது. அருணகிரிநாதர் தனது இரண்டு திருப்புகழ்ப் பாடல்களில் வடசிற்றம்பலம் என்று பாடுகிறார். மற்றொரு திருப்புகழ்ப் பாடலில் குறிப்பிடும் கோயில் மதுராந்தகம் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது. ஆகவே, இரண்டு தலங்களையும் சேர்த்து வணங்கி முருகப்பெருமானின் அருளைப் பெறலாம். முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கின்றான். தைப்பூசம், பங்குனி உத்தரம் போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இத்தலத்தில் முருகப்பெருமான் பிரம்மசாஸ்தாவாக ஒரு கையில் ருத்ராட்ச மாலையுடனும், மறுகையில் கமண்டலத்துடனும், வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். நாமக்கல்லுக்கு அருகே உள்ள “நைனாமலை” என்ற மலையே ஞானமலை என்றும் சிலர் கூறுவர். இவ்வூரில் தற்போது முருகன் கோயில் எதுவும் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு குளம் வெட்ட தோண்டியபோது முற்காலத்தில் கோயில் ஒன்று இருந்ததற்கான சில குறிப்புகள் இருந்ததாகக் கூறுகின்றனர். ஆனால் பாறைகள் அதிகம் இருந்ததால் மேற்கொண்டு அங்கு தோண்ட முடியவில்லை. இத்தலத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன், ஒருமுகமும், நான்கு கரங்களும் கொண்டு காட்சி தருகின்றார். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். இத்தலத்தில் சிவபெருமானுக்கு எதிரே உள்ள நந்தி எதிர்த்திசையில் திரும்பி உள்ளார். இங்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார். வள்ளி நாயகியார் அவதரித்த தலம். இந்த மலையில்தான் முருகப்பெருமான் வள்ளியை மணம் புரிந்தார். மலை மீது வள்ளி சுனை என்ற தீர்த்தம் உள்ளது. மலையில் சிறிது தூரம் சென்றால் வள்ளிமலை சுவாமிகள் ஆசிரமம் உள்ளது. மலை மேல் செல்ல 471 படிகள் உள்ளது. விரிஞ்சன் என்பது பிரமதேவனின் மற்றொரு பெயர். பிரம்மதேவனால் பூசிக்கப்பெற்ற சிவத்தலம். இத்தலத்தில் சிவபெருமான் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தின் உட்பொருளை ஓதி உணர்த்தியதால் திருவோத்தூர் என்று அழைக்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் தமது அருட்பாடலினால் ஆண் பனையை, பெண்பனையாக மாற்றிய தலம். கொடிமரத்தின் முன் நின்று ஒரே சமயத்தில் பஞ்சமூர்த்திகளையும் வணங்கும் அற்புத அமைப்பைக் கொண்ட தலம். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். பஞ்சபூதத் தலங்களில் நெருப்புத் தலமாகும். இத்தலத்தில் கிழக்குப் பக்கத்தில் உள்ள வல்லாள கோபுரத்தின் வடபுறத்தில் முருகப்பெருமான் “கம்பத்து இளையனார்” என்ற திருப்பெயருடன் காட்சி தருகிறார். இந்த கோபுரத்தின் மீது ஏறி உயிரை விடத் துணிந்த அருணகிரிநாதரை குமரக் கடவுள் தடுத்தாட்கொண்டார். “முத்தைத்தரு பத்தித் திருநகை” என்று அடிஎடுத்துக் கொடுத்து திருப்புகழைப் பாடச் செய்தார். வண்ணச்சரபம் தண்டாபாணி சுவாமிகள் பூசித்து வந்த வேல் மற்றும் சேவற் கொடி போன்றவற்றை முருகப்பெருமான் அணிந்து காட்சி தருகின்றார். இத்தலத்தில் முருகப்பெருமான் மயில்மீது அமர்ந்து ஒருமுகமும், நான்கு கரங்களுடனும் காட்சி தருகின்றார். இங்கு முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்திற்குப் பின் சூரபத்மன் முருகப்பெருமானிடம் தன்னை வாகனமாக ஏற்க வேண்டினான். அதற்கு முருகப்பெருமான், இந்தத் தலத்தில் மயில் வடிவில் தவம் புரியும்படி அருளினார். அதன்படி சூரபத்மன் இங்கு தவம் புரிந்து முருகப்பெருமானுக்கு மயிலாக மாறினான். அதனால் இத்தலம் மயிலம் என்று அழைக்கப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். மூலஸ்தான சிவலிங்கம் 3 முகங்களை உடையவர். வக்கிராசுரன் என்ற அரக்கனோடு திருமால் போர் புரிந்தபோது, சக்கரத்தை அசுரன் தன் பல்லில் பிடித்துக்கொள்ள திருமால் கூத்தாடி சக்கரத்தைத் திரும்பப் பெற்று அவனைக் கொன்ற தலம். அசுரன் இறந்தபோது அவன் உதிரம் பூமியில் படாதபடி தன் நாக்கை நீட்டி உறிஞ்சிய காளியின் உருவச்சிலை கோயிலில் உள்ளது. தேவாரப் பதிகம் பெற்ற சிவத்தலம். காமதேனு பூசித்து அருள் பெற்ற தலம். பிரகாரத்தில் ஒரு வட்டப் பாறை உள்ளது. இதனிடம் சென்று சத்தியப் பிரமாணம் செய்வது அக்கால வழக்கம். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சிவபெருமானின் அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்று. அந்தகாசுரனை அழித்த தலம். சிவபெருமானுக்கும், அம்பிகைக்கும் தனித்தனி கோயில்கள் அருகருகே அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சிவபெருமான் சுந்தரரை தடுத்தாட்கொண்ட தலம். தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க முருகப்பெருமான் மயில் மீது நடனம் புரிந்த தலம். சிவஞான போதம் அருளிய மெய்கண்ட தேவர் வாழ்ந்த தலம். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவதரித்த தலம். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சிவபெருமானின் அம்சமாகிய வயிரவர் பூசித்த தலம். இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் திருவுருவம் அழகு வாய்ந்தது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். அட்ட வீரட்டங்களில் ஒன்று சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்த தலம். திருநாவுக்கரசர் உழவாரத் தொண்டு புரிந்த தலம். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வழிபட்ட தலம். ஐந்து புலியூர் தலங்களுள் ஒன்று. திருநாவுக்கரசரை சமணர்கள் கல்லில் கட்டி கடலில் தள்ளிவிட, அவர் “சொற்றுணை வேதியன்” என்ற நமச்சிவாயப் பதிகம் பாடி கரையேறிய தலம். அவர் கரையேறிய இடம் “கரையேற விட்ட குப்பம்” என்று அழைக்கப்படுகிறது. அகத்தியர், உபமன்யு முனிவர், அக்கினி ஆகியோர் வழிபட்ட தலம். சாபத்தினால் முடமான கால் உள்ள முயலாக மாறிய மங்கணர் என்னும் முனிவர் சாபம் நீங்கப் பெற்ற தலம். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். திருமால் மகாபலிச் சக்கரவர்த்தியை அழித்த தோஷம் தீர இத்தலத்தில் வந்து வழிபட்டார். இத்தலத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். அகத்தியர் வழிபட்ட தலம். சுந்தரர் தன் மனைவி பரவையாருக்காகப் இறைவனிடம் பொன் வேண்டிப் பெற்று இங்குள்ள மணிமுத்தாறு நதியில் போட்டு இறைவன் அருளால் அவற்றை திருவாரூர் கோயில் குளத்தில் எடுத்தார். இத்தலத்தில் இறக்கும் உயிர்களின் வலது காதில் சிவபெருமான் பஞ்சாட்சர உபதேசம் செய்தருளுகிறார் என்பது ஐதீகம். இங்கு முருகப்பெருமான் ஆறுமுகனாக பன்னிரு கரங்களுடன், வள்ளி தெய்வானையுடன் மயில்மீது அமர்ந்து கிழக்கு திசை நோக்கி காட்சி தருகின்றார். இத்தலத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன், ஒருமுகமும், நான்கு கரங்களும் கொண்டு காட்சி தருகின்றார். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். கடம்ப மரங்கள் அதிகம் இருந்ததால் கடம்பூர் என்று அழைக்கப்படுகிறது. முருகப்பெருமான், இந்திரன், செவ்வாய் ஆகியோர் வழிபட்ட தலம். “என்கடன் பணி செய்து கிடப்பதே” என்று அப்பர் பாடிய தலம். மணிமுத்தாறு நதியும், நிவாநதியும் சேர்வதால் கூடலையாற்றூர் என்று அழைக்கப்படுகிறது. இங்கு முருகப்பெருமான் ஆறுமுகனாக பன்னிரு கரங்களுடன், வள்ளி தெய்வானையுடன் மயில்மீது அமர்ந்து கிழக்குதிசை நோக்கி காட்சி தருகின்றார். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சிவபெருமான் அர்ச்சுனனுக்கு வேடனாகக் காட்சி அளித்து பாசுபதாஸ்திரம் தந்த தலம். சிவபெருமான் வேடனாக வந்ததை அறியாமல் அர்ச்சுனன் அவரை வில்லால் அடித்ததால் லிங்கத்தின் தலையில் ஒரு பள்ளம் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். மூலஸ்தானத்தில் லிங்கத்தின் பின்புறம் சிவபெருமான் பார்வதியுடன் காட்சி அளிக்கிறார். பஞ்சபூதத் தலங்களுள் ஆகாயத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலம். சிவபெருமான் ஆனந்த தாண்டவ மூர்த்தியாக நடராசர் வடிவில் காட்சி தருகின்றார். சிறப்பு பல பெற்ற இத்தலத்தில் முருகப்பெருமான் அருள்புரிகின்றார். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். திருஞானசம்பந்தப் பெருமான் அவதரித்த தலம். அசுரர்கள் கொடுமை கண்டு அஞ்சி தேவர்கள் முருகப்பெருமான் அவதாரத்தை வேண்டிய தலம். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். பிரமன், சூரியன், சந்திரன் ஆகியோர் வழிபட்ட தலம். முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவபெருமான் நடனம் செய்தருளிய தலம். இங்கு முருகப்பெருமான் மேற்கு முகமாக சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். முருகப்பெருமான் சிவலிங்க வடிவில் காட்சித் தருவது இத்தலத்தில்தான். இத்தலம் ‘புள்ளிருக்கு வேளூர்’ என்றும் அழைக்கப்படும். இத்தலத்தில் சிவபெருமான் சகல நோய்களையும் தீர்ப்பவனாக வைத்தீஸ்வரன் என்ற பெயருடனும், உமாதேவியார் தையல் நாயகி என்ற பெயருடனும் காட்சியளிக்கின்றனர். இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். ஒன்பது நவக்கிரகத் தலங்களில் செவ்வாய்க்குரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது. இராமாயணத்தில் இராமபிரானுக்கு உதவி புரியும் ஜடாயு இத்தலத்தில் தான் மோட்சம் அடைந்தது. தல விருட்சம் வேப்ப மரம். வாகை மரம் இத்தலத்தின் தலவிருட்சமாக இருப்பதால் ‘வாகைமாநகர்’ என்று அழைக்கப்பட்டது. மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் அவர்கள் எழுதிய தலபுராணத்தில் இந்தத் தலத்தை ‘வாகைமாநகர்’ என்று குறிப்பிடுகிறார். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். பிரமன், பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட தலம். முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றான். பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி ஆகிய விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். காசிக்குச் சமமான ஆறு முக்தித் தலங்களில் ஒன்று. திருவெண்காடு, திருவிடைமருதூர், திருவையாறு, ஸ்ரீவாஞ்சியம், திருச்சாய்க்காடு ஆகியவை மற்றத் தலங்கள். அம்பிகை மயில் வடிவம் கொண்டு ஆடிய தலம். மயில் வடிவம் நீங்கி அம்பாள் செய்த பிரார்த்தனைக்கு இணங்கி சிவபெருமான் இத்தலத்தில் ஆடிய நடனம் கௌரி தாண்டவம் என்று பெயர். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். உத்தாலமரம் தலவிருட்சம் ஆதலால் அது மருவி ‘குத்தாலம்’ என்று ஆனது. காவிரி ஆற்றுக்கிடையே இருந்ததால் ‘திருத்துருத்தி’ என்று அழைக்கப்பட்டது. சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்தில் உள்ள குளத்தில் நீராடிய பின்னர் அவரது உடற்பிணி தீர்ந்தது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். கயிலாயத்தில் உமாதேவியார் பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது தான் வந்ததை கவனிக்காததால் சிவபெருமான் கோபமுற்று உமாதேவியாரை பசுவாகப் போகுமாறு சபித்தார். அவர் கோபத்தில் உதைத்த பந்து விழுந்த இடம் பந்தணைநல்லூர் என்று பெயர் பெற்றது. உமாதேவியார் பசு வடிவில் பூசித்த தலம். இத்தலத்தில் நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் காட்சி அளிக்கின்றனர். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். பசு வடிவில் உமாதேவி பூசித்ததால் ஆவடுதுறை என்று பெயர் பெற்றது. இத்தலத்தில் உள்ள ரிஷபம் பெரிய வடிவம் உடையது. இத்தலத்தில் பல அரச மரங்கள் உள்ளது. அதனால் “படர்ந்த அரசு வளர்ந்த ரிஷபம்” என்ற பழமொழி இங்கே வழக்கத்தில் உள்ளது. இது ஒரு மாடக்கோயில். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். இத்தலத்தில் சிவபெருமான், உமாதேவியாருடன் முருகப்பெருமான் காட்சி அளிக்கின்றார். சிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்று. மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் எமனை உதைத்த தலம். இத்தலத்தில் உள்ள காலசம்காரமூர்த்தி சிறப்பு பெற்றவர். அமாவாசையை பவுர்ணமி என்று கூறிய அபிராமி பட்டருக்காக உமாதேவியார் நிலவு காட்டிய தலம். அபிராமி பட்டர் பாடிய பாடல்கள் அபிராமி அந்தாதி எனப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலம். சிறப்பு மிக்க இத்தலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கின்றார். மூலவர் பாலமுருகனாக கிழக்கு நோக்கி தரிசனம் அளிக்கிறார். மூலவருக்குப் பின்புறம் லிங்கமும், முன்புறம் ஸ்படிக லிங்கமும் உள்ளன. தெய்வானைக்குத் தனி சன்னதி உள்ளது. குமரக்கடவுள் திருக்குரா மரநிழலில் எழுந்தருளியுள்ளார். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. புண்டரீக முனிவரைக் சிவபெருமான் காயத்தோடு ஆரோகணம் செய்து கொண்டமையால் காயாரோகணம் அல்லது காரோணம் என்ற பெயர் ஏற்பட்டது. சுந்தரர் இறைவனை வேண்டி பொன் பெற்ற தலம். அதிபத்த நாயனார் பிறந்த தலம். இத்தலத்தில்தான் உமாதேவியிடம் வேல் பெற்று திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்தார். எனவே இங்கு சிங்காரவேலனாகக் காட்சி தருகிறார். இத்தலத்தில் உற்சவருக்கே சிறப்பு. கந்தர் சஷ்டி பெருவிழாவின்போது முருகப் பெருமான் திருமேனியில் வியர்வை கசிய காட்சி தருகிறார். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். வலியன் என்ற கருங்குருவி வழிபட்டதால் வலிவலம் என்ற பெயர் பெற்றது. இத்தலம் ஒரு மாடக்கோயில். இத்திருக்கோயிலின் தலவிருட்சம் எட்டி மரம். எனவே, அப்பெயராலேயே ‘எட்டிகுடி’ என்று அழைக்கப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. வேதங்கள் பூசை தலமாதலால் ‘மறைக்காடு’ என்று பெயர் பெற்றது. இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவத்தைப் போக்கிக் கொள்ள இராமபிரான் இத்தலத்தில் உள்ள ஆதிசேது தீர்த்தத்தில் நீராடி, சிவபூசை செய்தார். வேதங்கள் பூசை செய்து மூடிச்சென்ற கதவுகளைத் திறக்கவும், பின்பு மூடவும் திருஞானசம்பந்தரும், அப்பரும் பாடிய தலம். மூலவருக்குப் பின்னால் சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகச் சக்தி வாய்ந்தவர். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். பாற்கடலில் இருந்து கிடைத்த அமிர்தத்தைத் தேவர்கள் பருகியபின் மீதியை வாயுதேவனிடம் கொடுக்க, அவர் அதை எடுத்துக் கொண்டு ஆகாய வழியாகச் செல்லும்போது அது இத்தலத்தில் விழுந்து லிங்கரூபமாகத் தோன்றியது. எனவே, இத்தலத்தில் சிவபெருமான் அமிர்தகடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான் தியாகராசர் என்ற பெயருடன் அருள் பாலிக்கின்றார். உமையம்மை கமலாம்பிகை என்ற பெயருடன் காட்சி தருகின்றார். கமலாலயம் என்ற மிகப்பெரிய குளம் உள்ளது. திருவாரூர் தேர் பெரியது. முருகப்பெருமான் இத்தலத்தில் காட்சி தருகின்றார். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. சலந்தரனைச் சிவபெருமான் வதம் செய்த தலம். விநாயகப் பெருமான் கஜமுகாசுரன் என்ற அசுரனை அழித்தபோது, அவன் உடம்பிலிருந்து வெளிப்பட்ட இரத்தம் அந்த இடம் முழுவதும் பரவியதால் செங்காடு என்று பெயர் பெற்றது. இங்கு விநாயகப் பெருமான் அத்தி மரத்தின்கீழ் பூசித்த சிவலிங்கம் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு முகமும், நான்கு கரங்களும், நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். அவரது இருபுறமும் வள்ளி, தெய்வானை இருவரும் காட்சி தருகின்றனர். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். கோட்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில். பிரமன் அன்னவடிவம் கொண்டு வழிபட்ட தலம். தெய்வானை முருகப் பெருமானை மணக்க விரும்பி தவம் புரிந்த இடம் இது. அதன்படி முருகப்பெருமான் தெய்வானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் புரிந்து அருளினார். மூலவர் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார். இத்தலத்தில் சிவபெருமான் திருவாஞ்சிநாதர் எனவும், இறைவி மங்களநாயகி எனவும் வணங்கப்படுகின்றனர். ஆறுமுகப்பெருமான் இத்தலத்தில் பன்னிரு கரங்களுடன் வள்ளி, தெய்வானை சமேதராய் மயில்மீது அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். வீழிச்செடிகள் நிறைந்திருந்த காரணத்தால் ‘வீழிமிழலை’ என்று பெயர் பெற்றது. திருமால் சக்கரம் பெற வேண்டி இங்குள்ள இறைவனை ஆயிரம் மலர்களால் பூஜை செய்யும்போது ஒரு மலர் குறைவாக இருப்பதைக் கண்டு தம் கண்ணையே பெயர்த்து மலராகச் சாத்தி வழிபட்டார். சிவபெருமான் காட்சி திருமாலுக்கு சக்கரத்தையும், கண்ணையும் அளித்தார். மூலவருக்குப் பின்புறம் இறைவன் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். பஞ்சம் வந்தபோது திருஞானசம்பந்தருக்கும், அப்பருக்கும் இறைவன் படிக்காசு தந்து அவர்கள் மூலமாகச் சிவனடியார்களுக்கு அன்னம் படைத்த தலம். இத்தலத்தில் உள்ள வெளவால் நத்தி மண்டபம் சிறந்த வேலைப்பாடுகள் கொண்டது. இத்தலத்தில் ஆறுமுகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் மயில் மீதமர்ந்து காட்சியளிக்கிறார். இத்திருக்கோயிலின் தலவிருட்சம் வன்னி மரமாகும். தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட முத்தரசசோழன் முருகப்பெருமானுக்கு கோயில் நிர்மாணிக்க விரும்பினான். ஒரு சிற்பியை அழைத்து சிலையை வடிக்க உத்தரவிட்டான். சிற்பி ஆறு திருமுகங்களுடன் மயில்மீது வள்ளி தெய்வானையுடன் அமர்ந்த கோலத்தில் சிலையை வடித்தான். அதன் அழகைக் கண்ட மன்னன் இதேபோல் வேறு யார்க்கும் செய்யக்கூடாது என்று எண்ணி அந்தச் சிற்பியின் கட்டை விரலை துண்டித்தான். சிற்பி இறைவனின் திருவருளால் எட்டிக்குடியில் இன்னொரு சிற்பத்தைச் செதுக்கினான். அதனால் மன்னன் கோபமடைந்து சிற்பியின் கண்களைக் குருடாக்குமாறு உத்தரவிட்டான். அந்த நிலையிலும் சிற்பி முருகப் பெருமானின் சிலையை வடித்தான். ஆறுமுகப் பெருமானின் கருணையினால் இழந்த கட்டை விரலையும், கண்கள் இரண்டையும் பெற்றான். எனவே இத்தலத்திற்கு ‘எண்கண்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். கருடன் தன் தாயை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தேவலோகத்திலிருந்து அமிர்தம் கொண்டு வந்து இத்தலத்தில் உள்ள ஒரு புற்றின்மீது வைக்க, புற்றுக்குள் இருந்த சிவபெருமான் அந்தக் குடத்தை உள்ளே இழுத்துக் கொண்டார். கருடன் குடத்தைக் காணாமல் அந்தப் புற்றைக் கிளறியபோது சிவபெருமான் அவருக்குக் காட்சியருளிய தலம். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். திருமால், பிரமன், இந்திரன், ஐராவதம், சூரியன், சந்திரன், அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலம். குங்குலியக்கலிய நாயனார் வழிபட்ட தலம். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். காசிக்கு ஒப்பான ஆறு தலங்களுள் ஒன்று. திருவெண்காடு, மயிலாடுதுறை, திருவையாறு, ஸ்ரீவாஞ்சியம், திருச்சாய்க்காடு ஆகியவை மற்றத் தலங்கள். இத்தலம் ‘மத்திய அர்ஜுனம்’ என்றும் ‘இடைமருது’ என்றும் வழங்கப்படுகிறது. அர்ஜுனம் என்பது மருத மரத்தின் மற்றொரு பெயர். வடக்கே ஸ்ரீசைலம் ‘தலைமருது’ என்றும், இத்தலம் ‘இடைமருது’ என்றும், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள திருப்புடைமருதூர் ‘கடைமருது’ என்றும் வழங்கப்படுகிறது. இத்தலத்தில் சரபேஸ்வரர் வழிபாடு சிறப்பு வாய்ந்தது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். நவக்கிரகத் தலங்களுள் ராகுவுக்கு உரிய தலமாக வணங்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள ராகு பகவான் சிலைக்கு ராகு காலத்தின்போது நடைபெறும் பாலாபிஷேகத்தில் பால் நீல நிறமாக மாறுகிறது. ஆதிசேஷன் பூசை செய்த தலம். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். ஒரு பிரளய காலத்தில் அமிர்த கும்பம் மிதந்து வந்தபோது இந்தத் தலத்தில் சிவபெருமான் கிராத வடிவங்கொண்டு அதனை மூழ்காமல் அருளினார். இத்தலம் சக்தி பீடங்களுள் ஒன்று. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக திருவிழா சிறப்பானது. இத்தலத்தை மையமாக வைத்து ஆண்டுதோறும் சப்தஸ்தானத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவிரி ஆகியவை மற்ற ஆறு தலங்களாகும். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். திருமால் வெள்ளைப் பன்றி வடிவம் கொண்டு சிவபெருமானை பூசித்த தலம். பிரமன் இத்தலத்து இறைவனைப் பூசித்து உலகங்களைப் படைக்கும் ஆற்றலைப் பெற்றான். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். இத்தலத்தில் சிவபெருமான் ஆமணக்குச் செடியின்கீழ்த் தோன்றியதால் கொட்டையூர் என்று பெயர் பெற்றது. ஏரண்ட முனிவருக்கு இறைவன் கோடிலிங்கமாகக் காட்சி அளித்த தலம். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காவதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்தலம் ‘திருவேரகம்’ என்றும் அழைக்கப்படுகிறது. முருகப்பெருமான் தம் தந்தையான சிவபெருமானுக்கே குருவாக இருந்து பிரணவ மந்திரத்தின் பொருள் கூறி விளக்கியதால் இத்தலம் சுவாமிமலை என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் முருகப்பெருமான் தன் வேலாயுதத்தால் தோற்றுவித்த தீர்த்தம் உள்ளது. இது வஜ்ஜிர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நன்னீராலேயே சுவாமிநாதனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். மூலவரைத் தரிசிக்க 60 படிகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். இந்தப் படிகள் அறுபது தமிழ் ஆண்டுகளைக் குறிக்கும். இங்கு முருகப்பெருமான் தமது வலக்கரத்தில் திருத்தண்டம் தாங்கி இடது கரத்தை இடுப்பில் அமர்த்தி சிரசில் ஊர்த்துவ சிகமுடியும், திருமார்பில் முப்புரிநூலும், உருத்திராட்சமும் அணிந்து குருநாதனாகக் காட்சி அளிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். இத்தலத்தில் இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கடல்நுரையினால் ஆன வெள்ளைப் பிள்ளையார் சிறப்பு வாய்ந்தவர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. பச்சைக் கற்பூரம் மட்டும் சாத்தப்படுகிறது. திருவிடைமருதூருக்கு உரிய பரிவாரத் தலங்களுள் இத்தலம் விநாயகருக்கு உரிய தலம். ஒரு காலத்தில் பூமிக்குள் புகுந்து சென்ற காவிரி நதியை மேலே வருமாறு செய்வதற்கு காவிரி உள்ளே செல்லும் பாதாளத்தில் ஏரண்ட முனிவர் இறங்கினார். உடனே பாதாளம் மூடி காவிரி மீண்டும் மேலெழுந்து வலமாக சென்றதால் இத்தலம் ‘திருவலஞ்சுழி’ என்று பெயர் பெற்றது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். இறைவனை அம்பிகை வழிபட்டு தழுவி முத்தமிட்ட தலம். அதனால் சத்திமுத்தம் என்று அழைக்கப்பட்டது. இத்திருக்கோலத்தை இன்றும் இத்தலத்தில் தரிசிக்கலாம். தமக்கு திருவடி தீட்சை அளிக்க வேண்டும் என்று அப்பர் பெருமான் வேண்ட, அவரை திருநல்லூர் தலத்திற்கு வருமாறு இறைவன் அருளிய தலம். அத்தலத்தில் அப்பருக்கு திருவடி தீட்சை கிடைத்தது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். இத்தலம் பழையாறை வடதளி என்றும் அழைக்கப்படும். வடதளி என்றால் ஆலமரத்தின் கீழுள்ள கோயில் எனப்படும். பழையாறை சோழர்களின் பழைய தலைநகரங்களில் ஒன்று. சமணர்கள் கோயிலாக மாற்றப்பட்ட சிவன் கோயிலை உண்ணாவிரதம் இருந்து திருநாவுக்கரசர் மீண்டும் வெளிப்படுத்திய தலம். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். வாலி வழிபட்டத் தலம். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். மகாவிஷ்ணு இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு சக்ராயுதம் பெற்றார். அதனால் ‘சக்கரப்பள்ளி’ என்று பெயர் பெற்றது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வழிபட்ட தலம். ஐந்து புலியூர் தலங்களுள் ஒன்று. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று. திருநாவுக்கரசருக்கு சிவபெருமான் கயிலாயக் காட்சி அளித்த தலம். திருவையாற்றுக்கு அருகில் உள்ள அந்தணக்குறிச்சி என்ற கிராமத்தில் பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நந்திதேவர் அவதரித்தார். சிவபெருமான் அவரை வரவழைத்து அபிஷேகம் செய்வித்து ‘அதிகாரநந்தி’ என்று பட்டம் சூட்டி அவரிடம் காவல் பொறுப்பை ஒப்படைத்தார். சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரத்தன்று திருமழபாடியில் நந்திதேவருக்குத் திருமணம் செய்து வைத்தார். இதையொட்டியே சப்தஸ்தானத் திருவிழா நடைபெறுகிறது. இறைவன் உமாதேவியாருடனும், நந்திகேஸ்வரர் அவரது துணைவியாருடனும் திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஆறு தலங்களுக்கும் சென்று வருவர். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று. இத்தலம் காவிரி நதிக்கும், குடமுருட்டிக்கும் இடையில் உள்ளதால் துருத்தி எனப்பட்டது. அப்பர் இங்கு திருமடம் அமைத்து உழவாரத் தொண்டு செய்தார். திருஞானசம்பந்தருக்காக நந்தி விலகிய தலம். திருஞானசம்பந்தர் வந்த பல்லக்கை அவர் அறியாவண்ணம் திருநாவுக்கரசர் தாங்கிய தலம். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று. சரஸ்வதி, காமதேனு, கௌதம முனிவர் ஆகியோர் வழிபட்ட தலம். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சிவபெருமானை வேண்டி அம்பிகை தவம் செய்த தலம். தனது தாயைக் கொன்ற பழிதீர பரசுராமர் வந்து வழிபட்ட தலம். கஜமுகாசுரனை அழித்துவிட்டு விநாயகர் ஆனந்த நடனம் ஆடிய தலம். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். அகத்தியர் வழிபட்ட தலம். மலைக்கோட்டையில் உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு செல்லும் வழியில் தாயுமான சுவாமி என்னும் பெயருடன் சிவபெருமான் விளங்குகின்றார். தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். முருகப்பெருமான் இத்தலத்தில் காட்சி அளிக்கின்றார். பஞ்சபூதத் தலங்களுள் அப்பு (நீர்) தலமாகும். சிவபெருமான் நீரின் நடுவே ஜம்புகேஸ்வரர் என்ற பெயருடன் காட்சி தருகின்றார். உமாதேவியார் அகிலாண்டேஸ்வரி என்ற பெயருடன் காட்சி தருகின்றார். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகின்றார். மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம் ஆகும். இத்தலத்தில் பாலசுப்ரமண்யர் நின்ற கோலத்தில் ஒருமுகம் நான்கு கரங்களுடன் உள்ளார். கோயில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இத்தலம் குமார வயலூர் என்றும் அழைக்கப்படுகிறது. கோயிலுக்கு முன்பாக குமாரத் தீர்த்தம் உள்ளது. தலவிருட்சம் வன்னி மரம். முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். திருவண்ணாமலையில் அருணகிரிப் பெருமானை தடுத்தாட்கொண்ட முருகப்பெருமான் அவரை வயலூருக்கு வரும்படி பணித்தார். முருகப்பெருமான் தனது வேலினால் உண்டாக்கிய ‘சக்தி தீர்த்தம்’ என்னும் திருக்குளத்தில் நீராடி கோயிலில் சென்று பொய்யாக்கணபதி முன் ‘கைத்தல நிறைகனி’ என்ற பாடலைப் பாடினார். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளும் இத்தலத்து முருகனால் ஆட்கொள்ளப்பட்டார். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சூரியன், சந்திரன், கன்வ மகரிஷி ஆகியோர் பூசித்த தலம். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். இந்திரன், குபேரன் ஆகியோர் வழிபட்ட தலம். முருகப்பெருமான் ஆறு திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுடனும் கிழக்கு முகமாகக் காட்சி அளிக்கிறார். தவமுனிவர்கள் விரவி அமர்ந்திருந்த காரணத்தால் விரவி மலை என்பது மருவி விராலி மலை என மாறியது. 177 படிகள் உள்ளது. அர்த்த ஜாம பூஜையின்போது நைவேத்தியத்துடன் சுருட்டும் வைத்துப் படைக்கப்படுகிறது. மாணிக்கவாசகரால் திருவாசகம் பாடப்பெற்றத் தலம். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். தேவாரப் பாடல் பெற்ற பாண்டி நாட்டுத் தலங்கள் பதினான்கும் இத்தலத்தில் இருப்பதாக ஐதீகம். எனவே, இக்கோயிலுக்குள் 14 சிவலிங்கங்கள் உள்ளன. லிங்கமும், நந்தியும் பெரிய உருவமாக உள்ளனர். நான்கு வேதங்களும் பூசித்த தலம். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். தேவர்களுக்கு சிவபெருமான் கடம்ப மரத்தில் காட்சி தந்த தலம். முருகப்பெருமான் பூசித்த தலம். சப்த கன்னியர்கள் பூசித்து அவர்களின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம். ஆதிசேஷன் பூசை செய்த தலம். கார்த்திகை மாத சோம வாரங்களில் ஒரே நாளில் காலையில் திருக்கடம்பந்துறை தலத்தையும், உச்சிக்கால வேளையில் திருவாட்போக்கி (இரத்தினகிரி) தலத்தையும், மாலையில் இத்தலத்தையும் தரிசனம் செய்வது சிறப்பு. தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான் சன்னதிக்கு அருகில் முருகப்பெருமான் காட்சி தருகின்றார். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். காமதேனு பூசை செய்ததால் இத்தலம் ‘ஆனிலை’ என்று அழைக்கப்படுகிறது. எறிபத்த நாயனார் பிறந்த தலம். புகழ்ச்சோழ நாயனார் ஆண்ட தலம். திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவர் பிறந்து முக்தியடைந்த தலம். தற்போது ஆறுநாட்டான்மலை என்று வழங்கப்படுகிறது. மலை மீது செல்ல 280 படிகள் உள்ளது. முருகப்பெருமான் நின்ற கோலத்தில் கிழக்குத் திசை நோக்கி காட்சி அளிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சிவபெருமான் வயதான அந்தணராக வந்து சுந்தரருக்கு பொன் தந்த தலம். இந்தத் தலத்தில் இரண்டு ஆறுகள் கூடுவதாலும், வெஞ்சன் என்ற அசுரன் பூசித்ததாலும் வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது. கோயில் முன்பு சற்றுப் பள்ளத்தில் இருந்தது. 1977 ஆம் ஆண்டு ஏற்பட்டப் புயலில் சிக்கி சிதிலமடைந்துவிட்டதால் இக்கோயில் தற்போதுள்ள நிலையில் புதியதாக கட்டப்பட்டது. இம்மலை பெரியதாகவும் செங்குத்தாகவும், சிவந்த நிறத்திலும் உள்ளதால் செங்கோடு என்று பெயர் பெற்றது. மலை உச்சியை அடைய 1200 படிகள் உள்ளது. மலையின் மீது ஆகாச கங்கை என்ற சுனை உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான் அர்த்தநாரிஸ்வரனாக காட்சியளிக்கிறார். முருகப்பெருமான் பாலமுருகனாக கையில் வேலேந்தி கிழக்கு முகமாகக் காட்சித் தருகிறார். இங்;கு முருகப்பெருமான் வலது கரத்தில் படைக்கலமும், இடது கரத்தில் உருமுத்திரையும் சேவல் கொடியுடனும் காட்சியளிக்கிறார் இத்திருக்கோயிலில் சிவபெருமான் அறப்பளீஸ்வரர் என்ற பெயருடனும், உமாதேவியார் தாயம்மாள் என்ற பெயருடனும் காட்சி தருகின்றனர். தேவார வைப்பு திருத்தலம். மலையடிவாரத்திலும், மலைமீதும் ஆலயங்கள் இருக்கின்றன. மலையில் ராமர் தீர்த்தம் என்ற நீர்வீழ்ச்சி உள்ளது. மலைமீது முருகப்பெருமான் பக்தர்களுக்குக் காட்சி தருகின்றார். முருகப்பெருமான் தண்டாயுதபாணி கோலத்தில் சென்னிநாதர் என்ற பெயருடன் காட்சி அளிக்கிறார். இம்மலை மீது செல்ல ஆயிரத்துக்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் உள்ளது. வள்ளி தெய்வானை சன்னதிகள் தனியே உள்ளன. இங்கு அகத்திய முனிவர் வழிபட்ட சுயம்பு லிங்கம் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். மகாவிஷ்ணுவும், பிரமனும் வழிபட்ட தலம். இருவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளது. இதனால் இத்தலம் திரிமூர்த்தித் தலம் என்றும் வழங்கப்படுகிறது. சுந்தரர் நமச்சிவாயப் பதிகம் பாடிய தலம். அகத்தியர் பிரதிஷ்டை செய்து பூசித்த சிவலிங்கம் கோயிலில் உள்ள வன்னி மரத்திற்கு அருகில் உள்ளது. முருகப்பெருமான் வள்ளி நாயகியுடன் சிவாசலபதி என்ற பெயருடன் காட்சி தருகின்றார். இச்சந்நிதியின் இடப்பாகத்தில் வள்ளியும், தெய்வானையும் உள்ள சந்நிதி உள்ளது. சிவன் மலை சிறிய குன்று. மலையில் ஏறுவதற்குப் படிக்கட்டுகள் உள்ளன. தல விருட்சம் கொட்டி மரம். பதினெட்டு சித்தர்களில் ஒருவராகிய சிவவாக்கியர் தவம் புரிந்த தலம். தற்போது வட்டமலை என்று அழைக்கப்படுகிறது. முருகப்பெருமான் முத்துக்குமரனாக மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றார். வள்ளி, தெய்வானையுடன் இணைந்து ஒரே சன்னதியில் உள்ளனர். முருகப்பெருமான் தண்டாயுதபாணி கோலத்தில் கிழக்கு முகமாக காட்சி தருகிறார். வள்ளி, தெய்வானை ஒரே சன்னதியில் உள்ளனர். மலை மீது செல்ல 158 படிகள் உள்ளன. இம்மலையிலேயே கொங்கண சித்தர் என்பவருக்கும் தனிக்கோயில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சுந்தரர் முதலை வாயிலிருந்து சிறுவனை மீட்டுக் கொடுத்த தலம். முருகப்பெருமான் முன்பக்கம் ஐந்து திருமுகங்களுடன் பின்புறம் ஒரு திருமுகத்துடன் பன்னிரு கரங்கள் கொண்டு வள்ளி தெய்வானை சமேதராக தென்திசை நோக்கி காட்சி தருகின்றான். முன்னே ஐந்து திருமுகங்களுடனும், பின்னே ஒரு திருமுகத்துடனும் காட்சி தருவது வேறு எங்கும் காணப்படாத அற்புதக் காட்சியாகும். புத்தி கோளாறு, செய்வினை போன்ற தீவினைகளால் பீடிக்கப் பெற்றோர் இத்திருக்கோயிலில் தங்கி நலம் பெற்றுச் செல்கின்றனர். இந்நடைமுறை திருச்சி மாவட்டத்திலுள்ள குணசீலம் பெருமாள் கோயிலிலும், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் கோயிலிலும் மட்டுமே உள்ளது. முருகப்பெருமான் ஆறுமுகங்களுடனும், பன்னிரு கரங்களுடனும் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து கிழக்கு நோக்கி காட்சி தருகின்றான். சிறிய குன்றின் மேல் கோயில் உள்ளது. தல விருட்சம் கருநொச்சி மரம். தைப்பூசத் தேர்த்திருவிழாவும், கந்தர் சஷ்டி விழாவும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படுகிறது. மலை மீது எழுந்தருளியிருப்பது பழனி ஆண்டவர். திருவாவினன்குடி பழநி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஆனால் இரண்டையும் சேர்த்து பழநி என்றே மக்கள் வழிபட்டு வருகின்றனர். மலை அடிவாரத்தின் வடகிழக்கில் முருகப் பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட சரவணப் பொய்கை என்ற தீர்த்தம் உள்ளது. இம்மலை சுமார் 450 அடி (135 மீ) உயரமுடையது. 769 படிகள் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் கோவணம் மட்டும் தரித்து தண்டாயுதபாணி சுவாமியாய் ஒரு கரத்தை இடுப்பில் ஊன்றியும் மற்றெhரு கரத்தில் திருத்தண்டினைத் தாங்கியும் மேற்கு நோக்கி நின்று காட்சியளிக்கின்றhர். இந்த சிலை நவ பாஷாணம் என்னும் 9 வகையான இயற்கை மூலிகைகளைக் கொண்டு போகர் என்னும் சித்தரால் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் முதல் தங்கரதம் இந்த கோயிலில் தான் உருவாக்கப்பட்டது. பங்குனி உத்திரப் பெருவிழா, தைப்பூசம் போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. “வராககிரி” என்று அழைக்கப்படும் இந்த மலை மீது முருகப்பெருமான் அருள்பாலிக்கின்றார். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சிவபெருமானின் ஐந்து நடன சபைகளுள் ஒன்றhகிய வெள்ளியம்பல சபை உள்ள தலம். வரகுண பாண்டியனுக்காக இறைவன் கால் மாறி ஆடிய தலம். சிவபெருமான் 64 திருவிளையாடல்களைச் செய்தருளிய தலம். மூர்த்தி நாயனார் விபூதி, ருத்திராட்சம், சடைமுடி ஆகிய மூன்றையும் தரித்து ஆட்சி செய்த தலம். அரிமர்த்தன பாண்டியனின் சபையில் மாணிக்கவாசகர் மந்திரியாக இருந்த தலம். கூன் பாண்டியனின் சபையில் குலச்சிறை நாயனார் மந்திரியாக இருந்த தலம். சம்பந்தர் சமண சமயத்தைத் தழுவிய கூன் பாண்டியனின் சுரநோயை ஞமந்திரமாவது நீறுஞ என்ற திருநீற்றுப் பதிகம் பாடி தீர்த்தருளியும், அவனுடைய கூனை நீக்கி சைவ ஒளியயைப் பரப்பிய தலம். திருநள்ளாற்றில் பாடிய “போகமார்த்த பூண்முலையாள்” என்ற பதிகம் எழுதியிருந்த ஏட்டைத் தீலியிட்டு அதை எரியாமல் எடுத்தும், “வாழ்க அந்தணர்” என்ற பாடலை எழுதிய ஏட்டை வைகையாற்றில் இட்டு நீரை எதிர்த்துச் செல்லும்படி செய்து சம்பந்தர் சமணர்களை வென்ற தலம். இத்தலத்தில் முதலில் அன்னை மீனாட்சியை தரிசித்து விட்டுத்தான் இறைவனை தரிசிக்க வேண்டும். இங்குள்ள பொற்றாமரைக் குளம் சிறப்பு வாய்ந்தது. சங்கப்புலவர்கள் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் சுவடியை இக்குளத்தில் போட, அந்தச் சுவடி சங்கப்பலகையில் மிதந்து வந்ததாக வரலாறு. திருமுருகாற்றுப்படையைப் பாடிய நக்கீரர் வாழ்ந்த தலம். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதலாவதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த மலை 1050 அடி உயரம் கொண்டது. மலை அடிவாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. 49 படிகள் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். இங்கு ஆறுமுகப்பெருமான் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டு வீற்றிருக்க இடதுபுறம் தெய்வானையும், வலதுபுறம் நாரதரும் அமர்ந்துள்ளவாறு காட்சி தருகின்றார். இத்தலத்தில்தான் முருகப்பெருமான் தேவேந்திரனின் விருப்பத்திற்கிணங்க தெய்வானையை பங்குனி உத்திர நன்னாளில் திருமணம் செய்து அருளினார். இந்த வைபவம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மலையின் உச்சியில் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கந்தர் பாஷா என்ற முகம்மதிய பெரியவரின் சமாதியும் மண்டபமும் உள்ளது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஆறாவதாகக் குறிப்பிடப்படுகிறது. மலையின் அடிவாரத்தில் புகழ்பெற்ற கள்ளழகர் கோயில் அமைந்துள்ளது. அழகர் கோயிலுக்கு முன்னே அமைந்துள்ள கருப்பண்ண சுவாமி சன்னதி பிரசித்தி பெற்றது. ஆடி 18ம் தேதி மட்டும் திறந்திருக்கும். மலையில் முருகப்பெருமான் எழுந்தருளி உள்ளார். அடிவாரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. அவ்வை மூதாட்டிக்கு நாவற் பழங்களை உதிர்த்துக் கொடுத்து அதன் மூலம் ஞானத் தத்துவத்தை உணர்த்திய தலம். மலையில் மேல் “நூபுர கங்கை” என்னும் தீர்த்தம் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு திருநடனக் காட்சி தந்து அருளினார். தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். முருகப்பெருமான் ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்து கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். வள்ளியும், தெய்வானையும் இருபுறங்களிலும் தனித்தனியே மயில் மீதமர்ந்து காட்சி தருகின்றனர். மலைஅடிவாரத்தில் ஒரு கோயில் உள்ளது. அது கீழ்க்கோயில் என்று அழைக்கப்படுகிறது. மலைமீது இருப்பது மலைக்கோயில் எனப்படுகிறது. 144 படிகள் உள்ளது. இங்கு மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட ஐந்து சிவலிங்கங்கள் உள்ளன. இத்திருக்கோயிலில் பங்குனி உத்திர விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். இத்தலத்தில் உள்ள பைரவர் யோகாசன நிலையில் உள்ளார். அர்த்த சாம பூசையில் பைரவருக்குத் தினமும் புனுகு சாத்தி சம்பா நைவேத்தியம், வடைமாலை நைவேத்தியம் ஆகியவை படைக்கப்படுகிறது. அர்த்த சாம பூசைக்கு மணியடித்து விட்டால் அதன்பிறகு பைரவர் சன்னதிக்கு அர்ச்சகர், பரிசாரகர், நைவேத்தியம் கொண்டு செல்பவர் ஆகிய மூன்று பேர் மட்டுமே செல்ல முடியும். மற்றவர்கள் செல்லக் கூடாது. நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ள தலம். உலகின் முதல் கோயில் என்று சொல்லப்படுகிறது. குடவரைக் கோயிலான இத்தலத்தில் விநாயகப் பெருமான் இரு கரங்களுடன் காட்சி தருகின்றார். சுற்றி வரும் பிரகாரத்தில் முருகப்பெருமான் காட்சி தருகின்றார். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சூரியன் நீலரத்தினத்தால் சிவலிங்கம் செய்து வழிபட்ட தலம். துர்வாச முனிவரின் சாபத்தால் ஆட்டுத்தலையும், யானையின் உடலும் பெற்ற ஒரு முனிவர் இத்தலத்தில் சிவபெருமானை வணங்கி சாபம் நீங்கப் பெற்ற தலம். இதனால் இத்தலம் ‘ஆடானை’ என்று அழைக்கப்படுகிறது. மாணிக்கவாசகரால் திருவாசகம் பாடப்பெற்றத் தலம். இத்தலத்தில் பச்சை மரகத நடராஜர் சிலை உள்ளது. வருடம் முழுவதும் சந்தனத்தால் காப்பு செய்யப்பட்டிருக்கும். மார்கழி மாதம் திருவாதிரை தினத்தன்றும், ஆனி மாதம் உத்தரத்தன்றும் சிலையின் சந்தனக் காப்பு அகற்றப்பட்டு இறைவன் காட்சி தருகிறார். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று. இராவணனைக் கொன்ற பாவம் நீங்க இராமன் சிவபூசை செய்வதற்கு கயிலாயத்திலிருந்து சிவலிங்கம் ஒன்றைக் கொண்டுவர அனுமனைப் பணித்தார். அனுமான் வரத் தாமதம் ஆனதால் குறித்த நேரத்தில் பூசை செய்வதற்காகச் சீதை மணலால் உருவாக்கிய லிங்கத்தை வைத்து இராமன் வழிபட்டார். பின்னர் அனுமான் கொண்டு வந்த லிங்கமும் இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்பாள் சன்னதியில் ஸ்ரீசக்கரம் உள்ளது. காசி யாத்திரை செல்பவர்கள் அங்கிருந்து கங்கா தீர்த்தம் கொண்டு வந்து இத்தலத்தில் உள்ள இராமநாதேஸ்வரருக்கு அபிஷேகம் செய்துதான் காசி யாத்திரையை முடிப்பார்கள். இத்தலத்தில் 36 தீர்த்தங்கள் உள்ளது. முதலில் அக்னி தீர்த்தம் எனப்படும் கோயிலுக்கு எதிரில் உள்ள கடலில் நீராடி பின்னர் இந்த 36 தீர்த்தங்களில் நீராடி இறைவனை தரிசிக்க வேண்டும். இத்தலத்தில் உள்ள சேதுமாதவர் சன்னதி சிறப்பு வாய்ந்தது. இக்கோயிலின் வெளிப்பிரகாரச்சுற்று புகழ் பெற்றது. பிரகாரங்களின் மொத்த நீளம் 3850 அடி. வெளிப்பிரகாரத்தில் 1200 தூண்கள் உள்ளது. அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது. இது ஒரு குகைக்கோயில். மலை கழுகு போன்ற வடிவம் கொண்டிருப்பதாலும், எப்போதும் கழுகுகள் இம்மலையைச் சுற்றிக் கொண்டிருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டது. முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடன், ஆறுத் திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்து கழுகாசல மூர்த்தி என்ற பெயருடன் காட்சி தருகிறார். வள்ளி, தெய்வானையர்கள் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவதாகக் குறிப்பிடப்படுகிறது. முருகப்பெருமான் சூரபத்மனையும் அவனைச் சார்ந்த அசுரர்களையும் வதம் செய்த இடம். இத்தலத்திற்கு திருச்சீரலைவாய் என்ற பெயரும் உண்டு. சூரபத்மனின் வதத்திற்குப் பிறகு சிவபூஜை செய்து வழிபட அபிஷேகத்திற்காக தன் வேலினால் “கந்த புஷ்கரணி” என்ற தீர்த்தத்தை தோற்றுவித்த இடம் சற்று தொலைவில் உள்ளது. அந்த இடம் தற்போது “நாழிக்கிணறு” என்று அழைக்கப்படுகிறது. திருக்கோயிலுக்கு செல்வதற்கு முன் கடலிலும், பின்னர் இந்தக் கிணற்றிலும் நீராட வேண்டும். இங்கு முருகப்பெருமான் தமது நான்கு திருக்கரங்களில் அபயம், வரதம், பூ, ஜெபமாலை தாங்கி கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். அவருக்குப் பின்னே பஞ்சலிங்கம் உள்ளது. அந்த லிங்கங்களை வழிபடுவதற்காகவே முருகப்பெருமான் கரத்தில் மலர் இருப்பதாகக் கூறுவர். இத்திருக்கோயிலில் விபூதிப் பிரசாதம் கையில் கொடுப்பதில்லை. பன்னீர் இலையில் தருகிறார்கள். குமரகுருபரர் ஐந்து வயது வரையில் ஊமையாகப் இருந்தவர். அவருடைய பெற்றேhர்கள் குழந்தையை இத்தலத்திற்குக் கொண்டு வந்து கிடத்தி தவமிருந்தனர். ஒருநாள் இரவில் முருகப்பெருமான் தோன்றி குழந்தையின் நாவில் வேலினால் எழுதி பேச வைத்தார். பேசத் தொடங்கிய குமரகுருபரர் முருகன் மீது “கந்தர் கலி வெண்பா” என்னும் பாடலை பாடினார். ஆதிசங்கரர் தம் நோய் நீங்க இங்கு “சுப்பிரமணிய புஜங்கம்” பாடினார். இங்கு வைகாசி விசாகம், கந்தர் சஷ்டி போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இலஞ்சி என்றால் மகிழமரம். முருகப்பெருமான் இங்கு மகிழ மரத்தின்கீழ் உள்ளார். தலவிருட்சம் மகிழ மரம். இத்தலம் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் ஒரு சன்னதியில் மூலவர் வள்ளி தெய்வானையுடன் வரதராஜ குமாரன் என்ற பெயருடன் காட்சியளிக்கிறார். மற்றெhரு சன்னதியில் சிவபெருமான் இருவாலுக நாயகர் என்ற பெயருடனும், உமாதேவியார் மதுரவாணி (குழல்வாய்மொழி) என்ற பெயருடன் காட்சியளிக்கிறhர்கள். இத்தலத்தில் வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, கந்தர் சஷ்டி மற்றும் மாசிப் பெருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சிவபெருமானின் ஐந்து சபைகளுள் ஒன்றhன சித்திர சபை உள்ள தலம். இத்தலத்தில் விஷ்ணு வடிவமாக இருந்த மூர்த்தியை அகத்திய முனிவர் சிவலிங்கமாக மாற்றிய தலம். இத்தலத்திற்கு அருகில் குற்றால நீர்வீழ்ச்சி உள்ளது. இது ஒரு குகைக்கோயில். மலையடிவாரத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். இந்த தலம் சிறிய மலை மீது உள்ளது. இந்த மலை சுமார் 400 அடிகள் (120 மீ.) உயரம் கொண்டது. முருகப்பெருமான் கிழக்கு நோக்கி காட்சியளிக்கின்றான். தல விருட்சம் புளிய மரம். திருச்செந்தூர் போன்று இத்தலத்திலும் விபூதிப் பிரசாதம் பன்னீர் இலையில் தரப்படுகிறது. இத்தலத்தில் சித்திரை வசந்த விழா, ஐப்பசிப் பெருவிழா மற்றும் கார்த்திகைத் தெப்பத்திருவிழா போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் என்ற தலமே அருணகிரிநாதர் பாடிய திருமலை என்றும் சிலர் கூறுவர். ஒருசமயம் முருகப்பெருமான், உமையம்மையுடன் கோபம் கொண்டு கயிலாய மலையிலிருந்து திருவேங்கட மலையில் வந்து தங்கினார் என்று கந்தபுராணம் கூறுகிறது. “திருவேங்கட மாமலை மேவிய பெருமாளே” என்று அருணகிரிநாதர் பாடுகின்றார். எனினும், திருப்பதி அடிவாரத்தில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் முருகப்பெருமான் சன்னதி உள்ளது. அவரையே அருணகிரிநாதரின் திருப்புகழைப் பாடி வணங்குவோம். பஞ்சபூதத் தலங்களுள் வாயுத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்றது. கண்ணப்ப நாயனார் வழிபட்ட தலம். சுற்றுப் பிரகாரத்தில் முருகப்பெருமான் அருள்புரிகின்றார். கர்ப்பகிரகத்தின் முன் திரையிடப்பட்டு அத்திரையில் வள்ளி, தெய்வானை சமேதராய் முருகப்பெருமான் உருவம் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. அந்த திரைச்சீலை இறைவனையே தரிசிக்க வேண்டும். பூஜைகளும் இந்தத் திரைச்சீலைக்குத்தான் நடத்தப்படுகிறது. சனிக்கிழமைத் தவிர மற்ற நாட்களில் பூஜை நடைபெறுகிறது.
சென்னை மாவட்டம்
1
மைலாப்பூர் – திருமயிலை
சென்னையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
2
திருவொற்றியூர்
சென்னைக்கு வடக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது
3
திருவான்மியூர்
சென்னையிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது.
4
கோசை நகர் (கோயம்பேடு)
சென்னைக்கு மேற்கே சுமார் 11 கி.மீ. தொலைவில் பூந்தமல்லி செல்லும் வழியில் உள்ளது. தற்போது கோயம்பேடு என்று அழைக்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம்
5
திருவலிதாயம் (பாடி)
சென்னையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது தற்போது பாடி என்று அழைக்கப்படுகிறது.
6
திருவேற்காடு
சென்னையிலிருந்து பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலையில் பூந்தமல்லிக்கு அருகில் உள்ளது. திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலிலிருந்து பிரியும் சாலையில் சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது.
7
வடதிருமுல்லைவாயில்
தற்போது ‘திருமுல்லைவாயில்’ என்று அழைக்கப்படுகிறது. சென்னைக்கு மேற்கே 16 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது.
8
பாக்கம்
சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் திருநின்றவூர் இரயில் நிலையத்துக்கு வடக்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
9
தச்சூர் (ஆண்டார்குப்பம்)
தற்போது ‘ஆண்டார்குப்பம்’ என்று அழைக்கப்படுகிறது. சென்னையிலிருந்து ரெட்ஹில்ஸ் வழியாக பொன்னெரி செல்லும் பாதையில் சுமார் 33 கி.மீ. தொலைவில் உள்ளது.
10
சிறுவை (சிறுவாபுரி)
சென்னையிலிருந்து பெரியபாளையம் செல்லும் வழியில் அகரம் என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். தற்போது சின்னம்பேடு என்றும் சிறுவரம்பேடு என்றும் அழைக்கப்படுகிறது.
11
பாகை (பாகசாலை)
தற்போது ‘பாகசாலை’ என்று அழைக்கப்படுகிறது. சென்னை – அரக்கோணம் இரயில் பாதையில் உள்ள மணவூர் இரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
12
திருவாலங்காடு
சென்னையிலிருந்து மேற்கே 57 கி.மீ. தொலைவில் உள்ளது. அரக்கோணத்திலிருந்தும் செல்லலாம்.
13
திருத்தணி
திருவள்ளூரிலிருந்து 1 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது. அரக்கோணத்திற்கு வடக்கில் சுமார் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திருத்தணி இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து நேரடிப் பேருந்து வசதி உள்ளது.
14
நெடியம் (நெடியமலை)
திருத்தணி அருகிலுள்ள பள்ளிப்பட்டிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது.
15
வெள்ளிகரம்
அரக்கோணத்துக்கு வடக்கே 33 கி.மீ. தொலைவில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு மேற்கே 18 கி.மீ. தொலைவில் உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம்
16
காஞ்சிபுரம்
சென்னையிலிருந்து சுமார் 75 கி.மீ. தொலைவில் உள்ளது.
17
மாடம்பாக்கம்
தாம்பரத்திற்குக் கிழக்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
18
கோடைநகர் (வல்லக்கோட்டை)
தற்போது வல்லக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
19
திருப்போரூர்
சென்னையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் மகாபலிபுரம் செல்லும் சாலையில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு ‘சமராபுரி’ என்னும் பெயரும் உண்டு.
20
திருக்கழுக்குன்றம்
செங்கல்பட்டுக்கு தென்கிழக்கே 9 மைல் தொலைவில் உள்ளது.
21
வேலூர் (இளையனார்வேலூர்)
தற்போது இளையனார்வேலூர் என்று அழைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்திற்கு செல்லும் வழியில் உள்ள வாலாஜாபாத் என்னும் இடத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
22
உத்திரமேரூர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 36 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. செங்கல்பட்டிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது.
23
விசுவை (விசூர்)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் என்ற இடத்திற்கு அருகில் இத்தலம் உள்ளது. உத்திரமேரூரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ள மானாம்பதி சென்று அங்கிருந்து விசூர் என்னும் கைகாட்டி பெயர்ப்பலகை பார்த்து இடப்புறமாகத் திரும்பி சுமார் 2 கி.மீ. செல்ல வேண்டும். தென்பாதி விசூர், விசூர், வடபாதி விசூர் என்று மூன்று ஊர்கள் தொடர்ந்து உள்ளதால் ‘விசூர்’ என்று தெளிவாக வழிகேட்டு செல்லவும்.
24
மதுராந்தகம்
தற்போது ‘பாண்டீஸ்வரர் கோயில்’ என்று அழைக்கப்படுகிறது. மதுராந்தகம் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
25
வடதிருச்சிற்றம்பலம் (புலிப்பரக்கோயி
செங்கற்பட்டிலிருந்து 22 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. படாளம் என்ற இடத்துக்கு அருகில் உள்ள புலிப்பரக்கோயில் என்ற தலமே வட திருச்சிற்றம்பலம் என்று அழைக்கப்படுகிறது.
26
வளவாபுரி (செய்யூர்)
தற்போது ‘செய்யூர்’ என்று அழைக்கப்படுகிறது. மதுராந்தகத்திற்குக் கிழக்கில் 24 கி.மீ. தொலைவில் உள்ளது. திண்டிவனத்திலிருந்தும் செல்லலாம்.
27
பேறைநகர் (பெரும்பேர் கண்டிகை)
சென்னையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள ‘பெரும்பேர் கண்டிகை’ என்னும் தலமே ‘பேறை நகர்’ என்று அழைக்கப்படுகிறது. சென்னையில் இருந்து திண்டிவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அச்சிறுப்பாக்கத்திற்கு அடுத்த தொழுப்பேடு என்ற புகைவண்டி நிலையத்திற்கு அருகில் உள்ளது. சிறிய மலைமீது இக்கோயில் அமைந்துள்ளது. மலைமீது செல்ல சுமார் 200படிகள் ஏறவேண்டும்.
வேலூர் மாவட்டம்
28
ஞானமலை (கோவிந்தசேரி)
வேலூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் என்ற இடத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள கோவிந்தசேரி என்ற இடத்தில் சிறிய குன்றின்மீது இத்தலம் உள்ளது. வேலூரிலிருந்து சோளிங்கர் செல்லும் வழியில் காவேரிப்பாக்கம் உள்ளது.
29
முள்வாய் (முள்வாய் பாளையம்)
தற்போது ‘முள்வாய் பாளையம்’ என்று அழைக்கப்படுகிறது. அரக்கோணம் அருகில் உள்ள கோணலம் என்னும் ஊரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவாலங்காட்டிலிருந்து 6 கி.மீ.
30
கரபுரம் (திருப்பாற்கடல்)
சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில் உள்ள காவேரிப்பாக்கம் என்னும் ஊரிலிருந்து 1 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.
31
வேப்பூர்
ஆற்காட்டுக்கு அருகில் பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது.
32
திருவல்லம்
வேலூருக்குக் கிழக்கே 12 கி.மீ. தொலைவில் உள்ளது வில்வநாதேஸ்வரர் கோவில்.
33
வள்ளிமலை
வேலூர் மாவட்டத்தில் திருவலம் என்ற தேவாரப் பாடல் பெற்ற தலத்திற்கு அருகில் அமைந்துள்ளது. திருவலம் இரயில் நிலையத்திலிருந்து வடதிசையில் 13 கி.மீ. தொலைவில் உள்ளது.
34
விரிஞ்சிபுரம்
வேலூரிலிருந்து மேற்கே 12 கி.மீ. தொலைவில் உள்ளது.
35
ஒடுக்கத்துச் செறிவாய் (ஒடுக்கத்தூர்)
வேலூரிலிருந்து 28 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
36
குறட்டி
வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம்
37
காமத்தூர் (காமக்கூர்)
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியிலிருந்து படவேடு செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
38
சோமநாதன் மடம் (18 புத்தூர்)
ஆரணி வட்டத்தில் உள்ளது. தற்போது ’12 புத்தூர்’ என்று வழங்கப்படுகிறது.
39
திருவோத்தூர் (செய்யாறு)
காஞ்சிபுரத்துக்கு தென்மேற்கே 30 கி.மீ. தொலைவில் உள்ளது. தற்போது செய்யாறு என்று அழைக்கப்படுகிறது.
40
தமனியப்பதி (பொன்னூர்)
இத்தலம் தற்போது ‘பொன்னூர்’ என்று அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது.
41
கனககிரி (தேவிகாபுரம்)
வடஆற்காடு மாவட்டம் போரூர் ரயில் நிலையத்துக்கு கிழக்கே 14 கி.மீ. தொலைவில் தேவிகாபுரத்தின் அருகே உள்ளது.
42
சோமீசர் கோயில் (போளூர்)
இத்தலம் தற்போது ‘போளூர்’ என்று அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலைக்கு மேற்கே சுமார் 33 கி.மீ. தொலைவில், பர்வதமலைக்கு அருகில் உள்ளது.
43
திருவண்ணாமலை
விழுப்புரத்திலிருந்து காட்பாடி செல்லும் இரயில் பாதையில் திருவண்ணாமலை இரயில் நிலையம் உள்ளது. சென்னையிலிருந்து நேரடிப் பேருந்து வசதி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம்
44
தேவனூர்
செஞ்சியிலிருந்து சேத்துப்பட்டு செல்லும் வழியில் சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ளது.
45
மயிலம்
திண்டிவனத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் பாண்டிச்சேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது. மயிலம் இரயில் நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ளது.
46
திருவக்கரை
வக்ரகாளி அம்மன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. மயிலம் இரயில் நிலையத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. திண்டிவனத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் பேருந்து பாதையில் உள்ளது.
47
திருவாமாத்தூர்
விழுப்புரத்திற்கு வடமேற்கில் 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
48
திருக்கோவலூர்
திருவெண்ணைநல்லூரிலிருந்து திருக்கோவலூர் செல்லும் வழியில் உள்ள கீழையூர் என்ற இடத்தில் இத்தலம் உள்ளது.
49
திருவெண்ணெய்நல்லூர்
விழுப்புரத்துக்கு மேற்கே 19 கி.மீ. தொலைவில் உள்ளது
50
திருத்துறையூர்
பண்ருட்டிக்கு வடமேற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. தற்போது திருத்தளூர் என்று வழங்கப்படுகிறது.
51
திருநாவலூர்
பண்ருட்டிக்கு மேற்கே 17 கி.மீ. தொலைவில் உள்ளது.
52
வடுகூர் (பாண்டிச்சேரி)
பாண்டிச்சேரிக்கு மேற்கே 18 கி.மீ. தொலைவில் உள்ளது. தற்போது ஆண்டார்கோயில் என்று வழங்கப்படுகிறது.
கடலூர் மாவட்டம்
53
திருவாமூர்
பண்ருட்டியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
54
திருவதிகை
பண்ருட்டி இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. கெடில நதியின் வடகரையில் உள்ளது.
55
திருப்பாதிரிப்புலியூர்
கடலூர் நகருக்கு அருகில் உள்ளது.
56
திருமாணிக்குழி
கடலூரில் உள்ள திருப்பாதிரிப்புலியூரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், திருவந்திபுரத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
57
அத்திப்பட்டு (வில்லுடையான்பட்டு)
தற்போது ‘வில்லுடையான்பட்டு’ என்று அழைக்கப்படுகிறது. நெய்வேலி புதுநகரின் உள்ளே அமைந்துள்ளது.
58
வேப்பஞ்சந்தி (வேப்பூர்)
சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் உளுந்தூர்ப்பேட்டைக்குத் தெற்கில் 24 கி.மீ. தொலைவில் உள்ளது. திட்டக்குடி இரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
59
விருத்தாசலம்
விருத்தாசலம் இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னை மற்றும் கடலூரில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
60
திருவரத்துறை
பெண்ணாகடம் இரயில் நிலையத்திற்குத் தெற்கே 5 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
61
யாழ்ப்பாணாயன்பட்டிணம் (இராசேந்திரப்பட்டினம்)
விருத்தாசலத்திற்குத் தெற்கே 11 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது, எருக்கத்தம்புலியூர் என்று அழைக்கப்பட்ட இத்தலம் தற்போது ‘இராசேந்திரப்பட்டினம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
62
கடம்பூர்
ஓமாம்புலியூருக்கு வடகிழக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து எய்யலூர் வழியாகக் காட்டுமன்னார்குடிக்குச் செல்லும் பேருந்தில் சென்று இத்தலத்தை அடையலாம்.
63
ஸ்ரீமுஷ்ணம்
சிதம்பரத்துக்கு தென்கிழக்கே 36 கி.மீ. தொலைவில் உள்ளது. கடலூரில் இருந்தும் செல்லலாம்.
64
திருக்கூடலையாற்றூர்
விருத்தாசலத்திலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள வளையமாதேவி என்னும் இடத்திற்குத் தெற்கே 3 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சிதம்பரத்திலிருந்து ஸ்ரீமுஷ்ணம் செல்லும் பாதையில் 29 கி.மீ. தொலைவில் உள்ளது.
65
திருவேட்களம்
சிதம்பரத்திற்கு கிழக்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது.
66
திருநெல்வாயில் (சிவபுரி)
சிதம்பரத்திற்கு தென்கிழக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில், சிவபுரிக்கு அருகில் உள்ளது.
67
சிதம்பரம்
சென்னையிலிருந்து மாயவரம் செல்லும் வழியில் உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம்
68
சீர்காழி
சிதம்பரத்திலிருந்து மாயவரம் செல்லும் வழியில் சீர்காழி சட்டைநாதர் திருத்தலம் உள்ளது.
69
மாதானை
சீர்காழியில் இருந்து திருமுல்லைவாயில் செல்லும் பாதையில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
70
திருமயேந்திரம் (திருமகேந்திரப்பள்ளி)
தற்போது ‘திருமகேந்திரப்பள்ளி’ உன்று அழைக்கப்படுகிறது. கொள்ளிடம் இரயில் நிலையத்துக்குக் கிழக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
71
வைத்தீஸ்வரன் கோயில்
சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் சீர்காழிக்கு அடுத்து அமைந்துள்ளது. மாயவரத்திலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது.
72
வாகைமாநகர் (திருவாளபுத்தூர்)
தற்போது ‘திருவாளப்புத்தூர்’ என்றும், ‘திருவாளொலிபுத்தூர்’ என்றும் அழைக்கப்படுகிறது. வைத்தீஸ்வரன்கோயிலுக்கு மேற்கே 8 கி. மீ. தொலைவில் திருப்புன்கூர் வழியாகச் சென்று அடையலாம்.
73
திருப்பழமன்னிபடிக்கரை (இலுப்பைப்ப
தற்போது இலுப்பைப்பட்டு என்று அழைக்கப்படுகிறது. வைத்தீஸ்வரன்கோயிலுக்கு மேற்கே 13 கி.மீ. தொலைவில் உள்ளது.
74
கரியவனகர் (கொண்டல்)
சீர்காழியிலிருந்து மேற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது. தற்போது ‘கொண்டல்’ என்று அழைக்கப்படுகிறது.
75
சிகண்டியூர் (மயிலாடுதுறை)
மயிலாடுதுறை என்றும் அழைக்கப்படுகிறது. சென்னையிலிருந்து கும்பகோணம் செல்லும் மார்க்கத்தில் உள்ளது.
76
திருத்துருத்தி (குத்தாலம்)
தற்போது ‘குத்தாலம்’ என்று அழைக்கப்படுகிறது. மாயவரத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் இரயில் பாதையில் மாயவரத்துக்கு தென்கிழக்கே சுமார் 9 கி. மீ. தொலைவில் உள்ளது.
77
பந்தணைநல்லூர்
மாயவரத்துக்கு அருகில் உள்ள குத்தாலத்துக்கு வடமேற்கே 10 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. திருவிடைமருதூரிலிருந்து கஞ்சனூர் வழியாகவும் செல்லாம்.
78
திருவாவடுதுறை
மாயவரத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் இரயில் பாதையில் உள்ள நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்திற்கு கிழக்கே 2.5 கி. மீ. தொலைவில் உள்ளது.
79
வழுவூர்
மயிலாடுதுறைக்குத் தெற்கில் உள்ள இலந்தங்குடி இரயில் நிலையத்திற்கு மேற்கே அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
80
ஆக்கூர் (தான்தோன்றி)
மாயவரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் தரங்கம்பாடிக்கு செல்லும் வழியில் உள்ளது. திருக்கடவூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
81
திருக்கடவூர்
மயிலாடுதுறையிலிருந்து தென்கிழக்கே சுமார் 21 கி.மீ. தொலைவில் தரங்கம்பாடி செல்லும் வழியில் உள்ளது.
82
திருவிடைக்கழி
மாயவரத்திலிருந்து தரங்கம்பாடி செல்லும் வழியில் திருக்கடையூரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
83
திருநள்ளாறு (பாண்டிச்சேரி)
காரைக்காலில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. நவக்கிரகத் தலங்களுள் சனீஸ்வரனுக்கு உரிய தலம். இங்கு உள்ள நள தீர்த்தத்தில் நீராடி இறைவனை பூசித்ததால் நளமன்னனை பற்றிய சனி விலகிய தலம். சனிப்பெயர்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
84
நாகப்பட்டினம்
திருவாரூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது.
85
சிக்கல்
நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
86
திருவலிவலம்
திருவாரூருக்கு அருகில் உள்ள மாவூர் ரோடு இரயில் நிலையத்திலிருந்து 9 கி. மீ. தொலைவில் உள்ளது.
87
எட்டுக்குடி
திருத்துறைப்பூண்டியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பாதையில் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
88
வேதாரண்யம்
திருத்துறைப்பூண்டிக்கு தென்கிழக்கே 35 கி. மீ. தொலைவில் உள்ளது.
89
கோடிக்குழகர் (கோடியக்கரை)
தற்போது ‘கோடியக்கரை’ என்று அழைக்கப்படுகிறது. வேதாரண்யத்திலிருந்து சுமார் 10 கி. மீ. தொலைவில் உள்ளது.
திருவாரூர் மாவட்டம்
90
திருவாரூர்
நாகப்பட்டினத்துக்கு மேற்கே 21 கி.மீ. தொலைவில் உள்ளது.
91
திருவிற்குடி
திருவையாறுக்கு வடக்கே உள்ள திருவிற்குடி இரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
92
திருச்செங்காட்டான்குடி
நன்னிலத்துக்கு தென்கிழக்கே 9 கி.மீ. தொலைவில் உள்ளது.
93
இஞ்சிக்குடி
இத்தலம் திருவாரூருக்கு அருகில் உள்ள பேரளத்திற்குத் தெற்கே ஒரு கிலோ மீட்டத் தொலைவில் உள்ளது.
94
திருஅம்பர் மாகாளம்
பேராளம் இரயில் நிலையத்திற்கு தென்கிழக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சோமாசிமாற நாயனார் சோமயாகம் செய்த தலம். சுந்தரர் வேண்டுகோளுக்கு இணங்க சோமாசிமாற நாயனாரின் யாகத்திற்கு திருவாரூர் தியாகராசப் பெருமான் வெட்டியான் வேடத்தில் வந்த தலம்.
95
திருஅம்பர்
பேராளம் இரயில் நிலையத்திற்கு அடுத்துள்ள பூந்தோட்டம் இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
96
கந்தன்குடி
மாயவரத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் உள்ளது. பேராளம் என்ற ஊருக்கு கிழக்கே சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
97
ஸ்ரீவாஞ்சியம்
திருவாஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணத்திற்கு தென்கிழக்கே திருவாரூர் செல்லும் வழியில் 24 கி.மீ. தொலைவில் உள்ளது. குடவாசலிலிருந்து நன்னிலம் செல்லும் பேருந்து இத்தலம் வழியே செல்கிறது.
98
கீரனூர்
மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருப்பறியலூருக்கு அருகில் இத்தலம் உள்ளது.
99
திருவீழிமிழலை
மாயவரத்துக்கு அருகில் உள்ள குத்தாலம் இரயில் நிலையத்திற்குத் தெற்கே சுமார் 10 கி. மீ. தொலைவில் உள்ளது.
100
கூந்தளூர்
கும்பகோணத்திற்கு தென்கிழக்கே 11 கி. மீ. தொலைவில் அரிசிலாற்றின் கரையில் அமைந்துள்ளது.
101
திலதைப்பதி (செதலப்பதி)
திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேராளத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். இராமபிரானும், இலட்சுமணனும் தங்கள் தந்தை தசரதனுக்கும், சடாயுவுக்கும் திலதர்ப்பணம் செய்த தலம். திலம் என்றால் எள் என்று பொருள். ஆகையால் பிதுர்களுக்குச் செய்ய வேண்டிய சிரார்த்தம், தர்ப்பணம் முதலிய கடமைகளைச் செய்வதற்கு உரிய தலம்.
102
திரியம்பகபுரம் (மதுரமாணிக்கம்)
தற்போது இவ்வூர் ‘மதுரமாணிக்கம்’ என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணம் – திருவாரூர் சாலையில் உள்ள பெரும்பண்ணையூர் என்னும் ஊருக்கு வடக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆனால் இங்குள்ள சிவன் கோயிலில் முருகன் சன்னதி இல்லை. இக்கோயிலில் இருந்த முருகன் சிலை குடவாசல் – கொரடாச்சேரி சாலையில் உள்ள அமுதீஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
103
எண்கண்
திருவாரூரிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது.
104
திருக்குடவாயில்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கொறடாச்சேரி இரயில் நிலையத்தில் இருந்து வடக்கே 10 கி. மீ. தொலைவில் உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம்
105
திருப்பனந்தாள்
மாயவரத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் இரயில் பாதையில் உள்ள ஆடுதுறையில் இருந்து 10 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.
106
மருத்துவக்குடி
இக்கோயில் ஆடுதுறையில் இருந்து திருநீலக்குடி செல்லும் வழியில் ஆடுதுறைக்கு அருகில் உள்ளது.
107
திருவிடைமருதூர்
கும்பகோணத்துக்கு வடகிழக்கே 8 கி. மீ. தொலைவில் உள்ளது.
108
திருபுவனம்
கும்பகோணத்திலிருந்து சுமார் 6 கி. மீ. தொலைவில் உள்ளது.
109
திருநாகேஸ்வரம்
கும்பகோணத்துக்கு கிழக்கே 6 கி. மீ. தொலைவில் உன்ளது. கும்பகோணத்துக்கு முந்தைய இரயில் நிலையம் திருநாகேஸ்வரம்.
110
கும்பகோணம்
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து பேருந்து சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.
111
பெரியமடம் (கும்பகோணம்)
கும்பகோணம் மகாமகக் குளத்திற்கு வடகரையில் உள்ள வீரசைவ மடம்.
112
சிவபுரம்
கும்பகோணத்துக்கு தென்கிழக்கே 5 கி. மீ. தொலைவில் உள்ளது.
113
கொட்டையூர்
கும்பகோணத்துக்கு மேற்கே 3 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.
114
சுவாமிமலை
கும்பகோணத்திற்கு மேற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
115
திருவலஞ்சுழி
கும்பகோணத்துக்கு மேற்கே 6 கி. மீ. தொலைவில் சுவாமிமலைக்கு செல்லும் வழியில் உள்ளது.
116
திருச்சத்திமுற்றம்
கும்பகோணத்திற்கு தென்மேற்கே 6 கி. மீ. தொலைவிலும், தாராசுரத்திலிருந்து 3 கி. மீ. தொலைவிலும் உள்ளது. பட்டீஸ்வரம் சிவன் கோயிலுக்கு எதிர்ச்சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம்.
117
பழையாறை
பட்டீஸ்வரத்துக்கு கிழக்கே உள்ளது. கும்பகோணத்திலிருந்து செல்லலாம்
118
திருநல்லூர்
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சுந்தரபெருமாள் கோயில் இரயில் நிலையத்திற்கு தெற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் வாழைப்பழக்கடை என்ற இடத்தில் வலங்கைமான் செல்லும் சாலை பிரியும் இடத்தில் இத்தலம் உள்ளது.
119
வடகுரங்காடுதுறை
திருவையாறுக்கு 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
120
திருச்சக்கரப்பள்ளி
தற்போது ‘அய்யம்பேட்டை’ என்று அழைக்கப்படுகிறது. தஞ்சாவூருக்கு அருகில் உள்ள அய்யம்பேட்டை இரயில் நிலையத்திற்கு மேற்கே 1 கி. மீ. தொலைவில் உள்ளது.
121
காவளூர்
அய்யம்பேட்டையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் திருக்கருகாவூருக்கு அருகில் அமைந்துள்ளது.
122
பெரும்புலியூர்
திருவையாறுக்கு வடமேற்கே 4 கி. மீ. தொலைவில் உள்ளது.
123
திருவையாறு
தஞ்சாவூருக்கு வடக்கே 11 கி. மீ. தொலைவில் உள்ளது.
124
ஏழு திருப்பதி (சப்தஸ்தான தலங்கள்)
இது திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) மற்றும் திருவையாறு என்னும் 7 கோயில்களை இணைத்துக் கூறப்படுகிறது. அதனால் சப்தஸ்தானத் தலங்கள் என்று அழைக்கப்படுகிறது.
125
திருப்பூந்துருத்தி
தஞ்சாவூருக்கு வடக்கே 10 கி. மீ. தொலைவில் உள்ள திருக்கண்டியூரிலிருந்து மேற்கே 3 கி. மீ. தொலைவில் உள்ளது.
126
திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்)
திருவையாறுக்கு கிழக்கே 1.5 கி. மீ. தொலைவில் உள்ளது.
127
தஞ்சாவூர்
இத்தலம் தஞ்சாவூரில் அமைந்துள்ளது. இத்தலம் ஒரு சிவத்தலமாகும்.
பெரம்பலூர் மாவட்டம்
128
வாலிகொண்டபுரம்
திருச்சிக்கு வடக்கே 60 கி. மீ. தொலைவில் பெரம்பலூருக்கு அருகில் உள்ளது.
அரியலூர் மாவட்டம்
129
கீழப் பழுவூர்
திருவையாறிலிருந்து 16 கி. மீ. தொலைவிலும், அரியலூர் இரயில் நிலையத்திலிருந்து 11 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
திருச்சி மாவட்டம்
130
திருநெடுங்களம்
திருச்சியை அடுத்துள்ள திருவெறும்பூர் இரயில் நிலையத்திலிருந்து 11.5 கி. மீ. தொலைவில் உள்ளது.
131
திருச்சிராப்பள்ளி
சென்னையிலிருந்து மதுரை செல்லும் வழியில் உள்ள முக்கிய நகராகும்.
132
திருவானைக்கா
திருச்சிக்கு அருகில் உள்ளது.
133
திருக்கற்குடி (உய்யகொண்டான் மலை)
திருச்சிக்கு மேற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. தற்போது ‘உய்யக்கொண்டான் மலை’ என்று அழைக்கப்படுகிறது. வயலூருக்குச் செல்லும் வழியில் உள்ளது.
134
பெருங்குடி
திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் வழியில் சோமரசம்பேட்டையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
135
வயலூர்
திருச்சிக்கு மேற்கே 8 கி. மீ. தொலைவில் உள்ளது.
136
திருத்தவத்துறை (லால்குடி)
தற்போது லால்குடி என்று அழைக்கப்படுகிறது. திருச்சிக்கு அருகில் உள்ளது.
137
பூவாளூர்
லால்குடிக்கு வடக்கில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
138
திருமாந்துறை
திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடி இரயில் நிலையத்திற்கு மேற்கே 5 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.
139
திருப்பராய்த்துறை
திருச்சிக்கு அருகிலுள்ள எலமனூரிலிருந்து சுமார் 3 கி. மீ. தொலைவில் உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம்
140
விராலிமலை
திருச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் மதுரை செல்லும் வழியில் உள்ளது.
141
திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயி
அறந்தாங்கி இரயில் நிலையத்திலிருந்து 11 கி. மீ. தொலைவில் உள்ளது. ஆவுடையார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
142
திருப்புனவாயில்
அறந்தாங்கியிலிருந்து 48 கி. மீ. தொலைவில் உள்ளது.
கரூர் மாவட்டம்
143
தென்கடம்பந்துறை (குளித்தலை)
திருச்சியிலிருந்து 31 கி. மீ. தொலைவில் குளித்தலை உள்ளது. அங்கிருந்து 1.5 கி. மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
144
ரத்தினகிரி (திருவாட்போக்கி)
திருச்சி மாவட்டத்தில் குளித்தலைக்குத் தெற்கே சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவாட்போக்கி, ஐயர் மலை என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
145
கருவூர் (கரூர்)
தற்போது கரூர் என்று அழைக்கப்படுகிறது.
146
நெருவூர் (நெரூர்)
கரூருக்கு அருகில் உள்ளது.
147
புகழிமலை (வேலாயுதம்பாளையம்)
கரூரிலிருந்து பரமத்தி வேலூர், சேலம், நாமக்கல் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளில் செல்லலாம். நகரப் பேருந்தில் சென்று வேலாயுதம்பாளையத்தில் இறங்கி அங்கிருந்து செல்ல வேண்டும்.
148
திருவெஞ்சமாக்கூடல்
கரூருக்குத் தென்கிழக்கே 24 கி. மீ. தொலைவில் உள்ளது.
நாமக்கல் மாவட்டம்
149
இராஜபுரம் (ராசிபுரம்)
இது சேலத்திலிருந்து 30 கி. மீ. தொலைவில் உள்ளது. தற்போது ராசிபுரம் என்று அழைக்கப்படுகிறது.
150
அலைவாய்மலை
தற்போது அலைவாய்பட்டி என்று அழைக்கப்படுகிறது. ராசிபுரத்திற்கு தெற்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
151
திருச்செங்கோடு
ஈரோடு அருகில் உள்ள சங்ககிரி துர்க்கம் இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
152
கொல்லிமலை
நாமக்கல்லுக்கு சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. சேந்தமங்கலம், இராசிபுரம் போன்ற ஊர்களிலிருந்தும் பேருந்து வசதி உண்டு.
சேலம் மாவட்டம்
153
சேலம்
சேலம் நகரின் மத்தியில் அமைந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம்
154
தீர்த்தமலை
மொரப்பூர் இரயில் நிலையத்துக்கு வடகிழக்கே சுமார் 26 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஈரோடு மாவட்டம்
155
பவானி
ஈரோட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
156
விஜயமங்கலம்
ஈரோடு – திருப்பூர் இரயில் பாதையில் உள்ள விஜயமங்கலம் இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
157
சென்னிமலை
ஈரோட்டிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
158
திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)
தற்போது கொடுமுடி என்று அழைக்கப்படுகிறது. ஈ.ரோட்டில் இருந்து செல்லலாம். இரயில் நிலையம் உள்ளது.
159
பட்டாலியூர் (சிவன் மலை)
கோவை மாவட்டத்தில் காங்கேயத்திலிருந்து திருப்பூர் செல்லும் சாலையில் சுமார் 5 கி. மீ. தொலைவில் உள்ளது. பட்டாலியூர் என்றும் அழைக்கப்படும்.
160
சிங்கை (காங்கேயம்)
தற்போது காங்கேயம் என்று அழைக்கப்படுகிறது. ஈரோட்டிலிருந்து திருப்பூர் செல்லும் சாலையில் ஊத்துக்குளியிலிருந்து சுமார் 29 கி. மீ. தொலைவில் உள்ளது.
161
கன்னபுரம்
தாராபுரம் தாலுகாவில் உள்ள வெள்ளக்குளம் என்னும் ஊருக்கருகில் அமைந்துள்ளது. கரூரில் இருந்து காங்கேயம் செல்லும் பேருந்தில் சென்றால் இவ்வூரை அடையலாம்.
162
கொங்கணகிரி (வட்டமலை)
காங்கேயத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
163
ஊதிமலை
கோயம்புத்தூரிலிருந்து பழநி செல்லும் வழியில் அமைந்துள்ளது. தாராபுரத்திலிந்தும் செல்லலாம்.
கோயம்புத்தூர் மாவட்டம்
164
அவினாசி
திருப்பூரிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் வழியில் 13 கி. மீ. தொலைவில் உள்ளது.
165
திருமுருகன்பூண்டி
அவிநாசியில் இருந்து 5 கி. மீ. தொலைவில் உள்ளது. திருப்பூரிலிருந்து 8 கி. மீ. தொலைவில் உள்ளது.
166
குருடிமலை
கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள சின்னதடாகம் என்ற இடத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. விஷ்ணு கோயிலான இத்தலம் பல வருடங்களுக்கு முன் முருகன் கோயிலாக இருந்ததாக அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். அங்குள்ள சில கல்வெட்டுக்கள் இதை உறுதிபடுத்துவதாக உள்ளது.
167
மருதமலை
கோயம்புத்தூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
168
பேரூர்
கோயம்புத்தூர் இரயில் நிலையத்திலிருந்து சுமார் 5 கி. மீ. தொலைவில் உள்ளது. இந்தத் தலம் ஒரு சிவத்தலமாகும்.
169
தென்சேரிகிரி
தற்போது செஞ்சேரிமலை என்று அழைக்கப்படுகிறது. பல்லடத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் வழியில் 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம்
170
திருவாவினன்குடி
திண்டுக்கல் மாவட்டத்தில் கோயம்புத்தூர் செல்லும் பாதையில் சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ளது. இது பழநி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படுகிறது. திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடும் படை வீடான திருவாவினன்குடி இதுவேயாகும்.
171
பழனி (திருப்புகழ் 110: அவனிதனிலே பிறந்து)
திண்டுக்கல் மாவட்டத்தில் கோயம்புத்தூர் செல்லும் பாதையில் சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ளது.
172
பூம்பறை
கொடைக்கானலுக்கு மேற்கில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது.
தேனி மாவட்டம்
173
குளந்தை நகர் (பெரியகுளம்)
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
மதுரை மாவட்டம்
174
மதுரை
தமிழ்நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் பேருந்து சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. முக்கிய இரயில்வே சந்திப்பு உள்ளது.
175
திருப்பரங்குன்றம்
மதுரையில் இருந்து தெற்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது.
176
அத்திக்கரை
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளதாகத் தெரிகிறது. இத்தலத்தைப் பற்றிய குறிப்பு எதுவும் கிடைக்கப் பெறவில்லை.
177
தனிச்சயம்
மதுரைக்கு மேற்கே சோழவந்தான் வட்டத்தில் உள்ளது.
178
பழமுதிர்ச்சோலை
மதுரைக்கு வடக்கில் சுமார் 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம்
179
கொடுங்குன்றம் (பிரான் மலை)
தற்போது பிரான்மலை என்று அழைக்கப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புத்தூருக்கு வடக்கே சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது. சிவங்கையில் இருந்து சுமார் 33 கி.மீ. தொலைவில் உள்ளது.
180
குன்றக்குடி
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கு திசையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
181
திருப்புத்தூர்
காரைக்குடியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், அறந்தாங்கியிலிருந்து 43 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
182
விநாயகமலை (பிள்ளையார்ப்பட்டி)
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புத்தூருக்குக் கிழக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம்
183
திருவாடனை
காளையார் கோயிலிலிருந்து 34 கி. மீ. தொலைவிலும், பரமக்குடியிலிருந்து 51 கி. மீ. தொலைவிலும் உள்ளது.
184
உத்தரகோசமங்கை
இராமநாதபுரத்துக்கு அருகில் உள்ளது.
185
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவில்
மதுரைக்குத் தென்கிழக்கே 160 கி. மீ. தொலைவில் உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் பாலத்தைக் கடந்து செல்ல வேண்டும்.
விருதுநகர் மாவட்டம்
186
சென்குன்றாபுரம்
விருதுநகரிலிருந்து வத்திராயிருப்பு செல்லும் வழியில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம்
187
கழுகுமலை
கோயில்பட்டிக்கு மேற்கே 18 கி.மீ. தொலைவில் உள்ளது.
188
திருச்செந்தூர்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து சுமார் 56 கி.மீ. தொலைவில் உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம்
189
ஆய்க்குடி
தென்காசியிலிருந்து வடகிழக்கே 8 கி. மீ. தொலைவில் உள்ளது.
190
இலஞ்சி
இத்தலம் குற்றாலத்திற்கு தெற்கே 2.5 கி. மீ. தொலைவில் உள்ளது. தென்காசியில் இருந்து 5 கி. மீ. தொலைவில் உள்ளது.
191
குற்றாலம்
தென்காசிக்கு மேற்கே 6 கி. மீ. தொலைவில் உள்ளது.
192
பொதிகைமலை (பாபநாசம்)
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. தற்போது பாபநாசம் என்று அழைக்கப்படுகிறது.
193
ஸ்ரீபுருஷமங்கை (நாங்குநேரி)
திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் 36 கி. மீ. தொலைவில் உள்ளது. தற்போது நாங்குநேரி என்று அழைக்கப்படுகிறது.
194
வள்ளியூர்
நாகர்கோவில் அருகில் உள்ளது.
கேரளா
195
கொடும்பை (கொடும்பு)
பாலக்காட்டிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
கர்நாடகா
196
நிம்பபுரம்
ஹம்பிக்கு அருகில் உள்ளதாக கருதப்படுகிறது.
ஆந்திரப் பிரதேசம்
197
வட விஜயபுரம் (விஜயவாடா)
ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா மாவட்டத்தில் கொத்தப்பேட்டை வட்டத்தில் உள்ள இந்திர சைலாத்திரி என்ற மலை உள்ளது, இத்தலமே அருணகிரிநாதர் குறிப்பிடும் வடவிஜயபுரம் தலம். 236 படிகள் கொண்ட இந்த மலைமீது முருகப்பெருமான் ஒரு முகமும், இரண்டு கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகின்றார்.
198
திருமலை (ஸ்ரீசைலம்)
செங்கோட்டையிலிருந்து வடமேற்கில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
199
திருவேங்கடம் (திருப்பதி)
சென்னையிலிருந்து சுமார் 145 கி.மீ. தொலைவில் உள்ளது.
200
காளஹஸ்தி
ஆந்திர மாநிலத்தில் உள்ளது. சென்னையிலிருந்தும், திருப்பதியிலிருந்தும் செல்லலாம்.
வட இந்தியா
201
திருக்கயிலாயம்
இமயமலைச் சாரலில் உள்ளது. கயிலாய மலையே சிவபெருமானாகவும், மானசரோவமே அம்பிகையாவும் வணங்கப்படுகின்றனர். இவர்களுடன் விநாயகப் பெருமான், முருகக் கடவுள் உள்ளிட்ட அனைவரும் அருவுருவாக இருப்பதாக வணங்கப்படுகிறது.
202
மாயாபுரி (ஹரித்துவார்)
தற்போது ஹரித்துவார் என்று அழைக்கப்படுகிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. முருகப்பெருமான் கோயில் பற்றிய தகவல் எதுவும் அறியப்படவில்லை.
203
வயிரவிவனம்
இத்தலம் பஞ்சாப் மாநிலத்தில் ஸரஸ்வதி நதிக்கரையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தலத்தைப் பற்றி வேறு குறிப்பு எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
204
காசி
உத்திரப் பிரதேச மாநிலத்தில் கங்கை நதிக்கரையில் உள்ளது முக்தித் தரும் தலங்களில் ஒன்று. கங்கைக் கரையில் உள்ள கேதார் கட்டத்தில் உள்ள கேதார்நாத் கோயில் உள்ள முருகப்பெருமான் அருள்புரிகின்றார்.
இலங்கை
205
திருக்கோணமலை
இத்தலம் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் அமைந்துள்ளது. திரிகோணமலை என்றும் அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற தலமாகும்.
206
அருகோணமலை (நகுலேஸ்வரம் – கீரி
யாழ்ப்பாணம் வட்டம் காங்கேசன் துறையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
207
கதிர்காமம்
இத்தலம் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் அமைந்துள்ளது. கொழும்பு நகரத்திலிருந்து சுமார் 270 கி.மீ. தொலைவில் உள்ளது. திசுமாராம் என்னும் நகரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. கதிர்காமம் ஒரு சிற்றூராகும். மாணிக்க கங்கையாற்றின் கரையில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் ஆலயம் உள்ளது.
குறிப்பு: கடந்த 10 ஆண்டுகளில் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தனியாக குறிப்பிடப்படவில்லை.