×
Wednesday 27th of November 2024

மகாவிஷ்ணுவைக் குறிக்கும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு


Rock art (Petro-glyph) denoting Lord Vishnu and his Incarnations

🛕 அண்மையில் தருமபுரி மாவட்டம் அனுமந்தபுரம் அருகில் அமைந்துள்ள சிறிய மலைக்குன்றுகளில் கோட்டுருவ பாறை ஓவியங்கள் பொறிக்கப்பட்டுள்ளதை தொல்லியல் ஆய்வாளார்களாகிய சதானந்தம் கிருட்டிணகுமார், எஸ். குமரன், டி.சிவராஜ்; ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.

🛕 ஒரு மலைக்குன்றின் வலதுபுறத்தில் சங்கு, சக்கரம் ஆகிய இரண்டு குறியீடுகளும் இடதுபுறத்தில் கமண்டலம், குடை, கயிறு கட்டப்பட்டதொரு குச்சி ஆகிய மூன்று குறியீடுகளும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த மலைக்குன்றிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு மலைக்குன்றில் சூரியன், பிறைச் சந்திரன், ஏர்கலப்பை, பரசு என்னும் கோடாரி ஆகிய நான்கு குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளன என சதானந்தம் கிருட்டிணகுமார் குறிப்பிட்டுள்ளார். இந்த பாறை ஓவியங்களை பற்றி ஆய்வு செய்த திருச்சியை சேர்ந்த தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ள செய்தியாவது,

🛕 இந்த கோட்டுருவ பாறை ஓவியங்கள் மிகவும் அரிதான ஒரு கண்டுபிடிப்பு எனவும் இவற்றில் மகாவிட்ணுவைக் குறிக்கும் சங்கு, சக்கரம் ஆகிய இரண்டு குறியீடுகளும், அவரது பத்து அவதாரங்களில் ஐந்தாவது அவதாரமான வாமனரை குறிக்கும் குடை, குச்சி, கமண்டலம் ஆகிய மூன்று குறியீடுகளும், ஆறாவது அவதாரமான பரசுராமரை குறிக்கும் பரசு என்னும் கோடாரி குறியீடும், எட்டாவது அவதாரமாகக் கருதப்படும் கிருட்டிண பரமாத்மாவின் மூத்த சகோதரரான பலராமரைக் குறிக்கும் ஏர்கலப்பை குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளன.

🛕 இவற்றில் குறிப்பாகச் “சந்திராதித்தன்” என்பதைக் குறிக்கும் சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு குறியீடுகளின் அடிப்படையில் 16-ம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆட்சிபுரிந்த நாயக்கார் மன்னர்களின் காலத்தில் தருமபுரி மாவட்டம், அனுமந்தபுரம் அருகில் அமைந்துள்ள ஒரு மகாவிட்டுணு அல்லது பெருமாள் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட ஒரு நிலப்பரப்பின் எல்லையைக் குறிப்பிடுவதாகக் கருதலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Also, read

Our Sincere Thanks to: 🙏 T.L.Subash Chandira Bose 🙏

T.L.Subash Chandira Bose
T.L.Subash Chandira Bose

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • அக்டோபர் 23, 2024
ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (ஸ்ரீ போசல பாவா)
  • ஆகஸ்ட் 20, 2024
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி [கோகுலாஷ்டமி]
  • ஆகஸ்ட் 3, 2024
வெங்கடேஸ்வர சுவாமியின் தாடையில் கற்பூரம் பூசுவது ஏன்?