×
Sunday 29th of December 2024

திருமறு என்னும் ஸ்ரீவத்சம்


உள்ளடக்கம்

Srivatsa Symbol Meaning in Tamil

🛕 திருமறு என்னும் ஸ்ரீ வத்சம் என்பது ஸ்ரீ இலக்குமியைக் குறிக்கும் ஒரு குறியீடு எனப் பாவனோ உபநிடதம் (12.140) கூறுகிறது. இக்குறியீடு எட்டு மங்களகரமான குறியீடுகளில் ஒன்று எனச் சிற்ப செந்நூல் கூறுகிறது.

🛕 அந்த மங்களகரமானக் குறியீடு ஸ்ரீ மகாவிஷ்ணுவின் மார்பில் வலது புற (காம்பின்) ஸ்தன வட்டத்திற்கு மேல் அபின்னையாக அதாவது பிரிக்க முடியாதவளாகவும், சுயமாகவும், ஒரு மறுவாகவும் அதாவது அடையாளமாகவும் அல்லது மச்சமாகவும் ஸ்ரீ இலக்குமி தோன்றியதாகக் கூறப்படுவதுண்டு. அவ்விடமே மனம் உள்ள இடம் என யோக சாத்திர நூல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

🛕 அன்னை ஸ்ரீ இலக்குமியை மார்பில் தாங்கி மகிழ்பவர் என்பதன் அடிப்படையில் அன்னையை முன்னிருத்தி ஸ்ரீ மகாவிஷ்ணுவை, இலக்குமி நரசிம்மர், இலக்குமிபதி, ஸ்ரீமன் நாராயணன் என்று அழைக்கப்படுகிறார். அருகக் கடவுளுக்கும், ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்கும் “திருமறுமார்பன்” என்ற சிறப்புப் பெயருண்டு.

🛕 பழங்காலச் சிற்பங்களில் ஸ்ரீ வத்சத்தை முக்கோண வடிவமாகவும், அதன் நடுவில் மூன்று இதழ்கள் உடையதாகத் தமிழகச் சிற்பிகள் வடிவமைத்துக் காட்டுவர். அந்த வடிவத்தை “அரூபஇலக்குமி” எனக் குறிப்பிடுவர். அதனை 1000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஸ்ரீ மகாவிஷ்ணுவின் சிற்பங்களில் காணலாம். (படம்: திருச்சி மாவட்டம், இலால்குடி தாலுகா, ஆங்கரை பெருமாள் கோயில்)

🛕 மேலும் முக்கோண வடிவத்தில் அன்னை ஸ்ரீ இலக்குமி தாமரை மலர் மீது அமர்ந்த கோலத்தில், நான்கு கரங்களுடன் மலர்ந்த முகத்துடன் காட்சி அளிப்பதுண்டு. அவ்வாறு காட்சி அளிப்பதில் அன்னை தன் இரண்டு மேல்கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், இரண்டு கீழ் கரங்களில் பயப்படாதே நான் உனக்குத் துணையாக இருக்கிறேன் எனும் அபய முத்திரையுடனும், உனது தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்கிறேன் பெற்றுக்கொள் எனும் வரத முத்திரையுடனும் காட்சியளிப்பதாகக் கூறப்படுவதுண்டு எனத் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ், தமிழ்ச் செம்மல் மேட்டூர் அணை மா.பாண்டுரங்கன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

T.L.Subash Chandira Bose
T.L.Subash Chandira Bose
M.Pandurangan
M.Pandurangan

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • அக்டோபர் 23, 2024
ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (ஸ்ரீ போசல பாவா)
  • ஆகஸ்ட் 20, 2024
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி [கோகுலாஷ்டமி]
  • ஆகஸ்ட் 3, 2024
வெங்கடேஸ்வர சுவாமியின் தாடையில் கற்பூரம் பூசுவது ஏன்?