- நவம்பர் 24, 2024
உள்ளடக்கம்
தமிழ்க் கடவுளான முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச நாளாக உலகெங்கும் உள்ள தமிழர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. “தை மாதத்தில் வரும் முதல் பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் சேர்ந்த நாளில்” முருகனுக்கு விழா எடுக்கப்படுகிறது. உலகெங்குமுள்ள முருகப் பெருமானின் திருத்தலங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் பூஜைகளும் நடத்தப்படும்.
தைப்பூசத் திருவிழா: வெவ்வேறு இடத்திலுள்ள மக்களால் வெவ்வேறு விதமாக தைப்பூசம் திருவிழாவாக அனுஷ்டிக்கப்படுகின்றது. தைப்பூச நாளைப் பற்றிய சில சுவாரசிய தகவல்கள்:
தைப்பூச விரதம்: தைப்பூச நாளில் விரதமிருந்து முருகனை தரிசனம் செய்தால் வேண்டியன அனைத்தும் நிறைவேறும்! மேலும் முருகப்பெருமானின் திருவருளைப் பெறலாம். தைப்பூசத்தன்று விரதமிருப்பது எப்படியென்று பார்க்கலாம்:
தைப்பூசத்திற்கு முதல்நாள், வீட்டை சுத்தம் செய்து வைக்கவேண்டும். தைப்பூசம் அன்று காலையில் எழுந்து நீராடிவிட்டு முருகனின் படத்திற்கு மலர்மாலை அணிந்து வழிபட வேண்டும். முருகன் அவதரித்த நாள் என்பதால், கோவில்களில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறும். மேலும், அனைத்து கோவில்களிலும் சிறப்பு அன்னதானம் வழங்கப்படும். விரதமிருப்பவர்கள் அன்னதானத்திற்கு காணிக்கையாக பணம் அல்லது அரிசி மற்றும் அன்னதானத்திற்குத் தேவையான பொருட்களும் கொடுப்பர்.
தைப்பூசத்தின் முக்கிய அம்சமாக மக்கள் முருகப்பெருமானை வேண்டி பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் (சர்க்கரை காவடி, தீர்த்தக் காவடி, பறவைக் காவடி, மயில் காவடி, பால் காவடி, மச்சக்காவடி) போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவர்.
“முருகப்பெருமான் அருள் மற்றும் ஆசியுடன்
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்.
இனிய தைப்பூசம் வாழ்த்துக்கள்.”
“வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
வீர வேல் முருகனுக்கு அரோகரா.
தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள்.”
“வேல் உண்டு வினை இல்லை.
வினை தீர்க்க நீ உண்டு பயம் இல்லை.
தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள்.”
“வேல் உண்டு வினை இல்லை!
மயில் உண்டு பயம் இல்லை!
குகன் உண்டு குறை இல்லை!
கந்தன் உண்டு கவலை இல்லை!
தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள்.”
“யாமிருக்க பயமேன்?
அனைவருக்கும் இனிய
தைப்பூசம் வாழ்த்துக்கள்!”
“தைப்பூச தினத்தன்று உங்கள்
ஆசை கனவு எண்ணங்களை
நினைத்து வழிபட்டிட அனைத்தும் ஈடேறும்.
இனிய தைப்பூசம் வாழ்த்துக்கள்!”
Also read,