×
Wednesday 27th of November 2024

சுவாமி தேசிகன் அருளிய அடைக்கலப்பத்து


Adaikala Pathu

அடைக்கல பத்து

Adaikalapathu Lyrics in Tamil

பத்தி முதலாமவற்றில் பதி எனக்கு கூடாமல்,
எத்திசையும் உழன்றோடி இளைத்துவிழும் காகம்போல்,
முத்தி தரும் நகரேழில் முக்கியமாம் கச்சிதன்னில்,
அத்திகிரி அருளாளற்கு அடைக்கலம் நான் புகுந்தேனே.
. 1

சடைமுடியன் சதுமுகனென் றிவர்முதலாந் தரமெல்லா
மடையவினைப் பயனாகி அழிந்துவிடும் படிகண்டு
கடிமலரால் பிரியாத கச்சிநக ரத்திகிரி
இடமுடைய வருளாள ரிணையடிக ளடைந்தேனே.. 2

தந்திரங்கள் வேரின்றித் தமதுவழி யழியாது
மந்திரங்கள் தம்மாலு மற்றுமுள வுரையாலு
மந்தரங்கண் டடிபணிவா ரனைவர்க்கு மருள்புரியுஞ்
சிந்துரவெற் பிறையவனார் சீலமல தறியேனே.. 3

காகமிரக் கதன்மன்னர் காதலிகத் திரபந்து
நாகமர னயன்முதலா நாகநக ரார்த்தமக்கும்
போகமுயர் வீடுபெறப் பொன்னருள்செய் தமைகண்டு
நாகமலை நாயகனார் நல்லடிப்போது அடைந்தேனே.. 4

உகக்குமவை யுகந்துகவா வனைத்துமொழிந் துறவுகுண
மிகத்துணிவு பெறவுணர்ந்து வியன்காவ லெனவாித்துச்
சகத்திலொரு புகலிலாத் தவமறிேயன் மதிட்கச்சி
நகர்கருணை நாதனைநல் லடைக்கலமா யடைந்தேனே.. 5

அளவுடையா ரடைந்தார்க்கு மதனுரையே கொண்டவர்க்கும்
வளவுரைதந் தவனருளே மன்னியமா தவத்தோர்க்குங்
களவொழிவா ரெமரென்ன விசைந்தவர்க்குங் காவலராந்
துளவமுடி யருள்வரதர் துவக்கிலெனை வைத்தேனே.. 6

உமதடிக ளடைகின்றே னென்றொருகா லுரைத்தவரை
அமையுமினி யென்பவர்போ லஞ்சலெனக் கரம்வைத்துந்
தமதனைத்து மவர்த்தமக்கு வழங்கியுந்தா மிகவிளங்கு
மமைவுடைய வருளாள ரடியிணையை யடைந்தேனே.. 7

திண்மைகுறை யாமைக்கும் நிறைகைக்குந் தீவினையா
லுண்மைமற வாமைக்கு முளமதியி லுகக்கைக்குந்
தண்மைகழி யாமைக்குந் தாிக்கைக்குந் தணிகைக்கும்
வண்மையுடை யருளாளர் வாசகங்கள் மறவேனே.. 8

சுாிதிநினை விவையறியுந் துணிவுடையார் தூமொழிகள்
பாிதிமதி யாசிாியர் பாசுரஞ்சேர்ந் தருக்கணங்கள்
கருதியொரு தெளிவாளாற் கலக்கமறுத் தத்திகிாிப்
பாிதிமதி நயனமுடை பரமனடி பணிந்தேனே.. 9

திருமகளுந் திருவடியுந் திருவருளுந் தெள்ளறிவு
மருமையிலா மையுமுறவு மளப்பாிய வடியரசுங்
கருமமழிப் பளிப்பமைப்புங் கலக்கமிலா வகைநின்ற
அருள் வரதர் நிலையிலக்கி லம்பெனநா னமிழ்ந்தேனே.. 10

ஆறுபயன் வேறில்லா வடியவர்க ளனைவர்க்கு
மாறுமதன் பயனுமிவை யொருகாலும் பலகாலு
மாறுபய னெனவேகண் டருளாள ரடியிணைமேற்
கூறியநற் குணவுரைக ளிவைபத்துங் கோதிலவே.. 11

கவி தர்கா சிம்ஹைய கல்யாணி குண ஷாலினே,
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நாம.

Also, read



3 thoughts on "சுவாமி தேசிகன் அருளிய அடைக்கலப்பத்து"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • அக்டோபர் 23, 2024
சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக்: ஒரு முழுமையான விளக்கம்
  • அக்டோபர் 22, 2024
அறுபடை முருகன் அருட்பாமாலை
  • அக்டோபர் 17, 2024
ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் [தமிழில்]