- மே 18, 2022
உள்ளடக்கம்
கப் அரிசி – 3/4 கப் சீரகம் – 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி – 1 அங்குலம் (துருவியது) கறி வேப்பிலை – 8-9 பச்சை மிளகாய் – 5-6 கீறியது கொத்தமல்லி இலைகள் – 1/2 கப் (நறுக்கியது) நுனிக்கிய மிளகுத்தூள் – 3/4 டேபிள் ஸ்பூன் முந்திரி பருப்பு – 8-10 (உடைத்தது ) மஞ்சள் தூள் – 3/4 டேபிள் ஸ்பூன் உப்பு – 3/4 டேபிள் ஸ்பூன் நெய் – 11/4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 6 கப் +1 கப்
ஒரு பிரஷ்ஷர் குக்கரில் அரசியை எடுத்து கொள்ளவும், பாசிப்பருப்பை மிதமான தீயில் 3 நிமிடங்கள் வறுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் 6 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்; நன்றாக கலந்து மூடியால் மூடி விட வேண்டும்.
4-5 விசில் வரும் வரை வேக வைக்கவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். நன்றாக உருகும் வரை காத்திருக்க வேண்டும்; அதனுடன் சீரகம் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும். இப்பொழுது துருவிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சேர்க்கவும் நன்றாக கிளறவும்.
பிறகு அதனுடன் பொடித்த மிளகு மற்றும் முந்திரி பருப்பு போன்றவற்றை சேர்க்கவும்; கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். சமைத்த சாதம் மற்றும் பாசிப்பருப்பு கலவையை இதனுடன் சேர்க்கவும்.
பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி எல்லாம் நன்றாக கலக்கும் வரை கிளறவும். இதை ஒரு 5 நிமிடங்கள் வரை சமைக்க வேண்டும். பிறகு கொத்தமல்லி இலைகளை தூவி கிளறவும்; பிறகு கொஞ்சம் உப்பு சேர்த்து கிளறிக் கொள்ளவும், பிறகு பொங்கலை ஒரு பெளலிற்கு மாற்றி விடவும். சுடச்சுட சூடான வெண் பொங்கல் ரெடி பரிமாறவும்.
குறிப்பு:
நன்றாக அரிசியை கழுவி பயன்படுத்தவும், மிளகை முழுதாகவோ அல்லது நுனிக்கியோ பயன்படுத்தலாம்; நெய் சேர்க்கும் போது இதன் சுவை இன்னும் அதிகரிக்கும். போதுமான தண்ணீர் சேர்ப்பது வெண் பொங்கல் சரியான பதத்திற்கு வர உதவும். தேங்காய் சட்னி, சாம்பார் மற்றும் வடையுடன் பரிமாறி சுவைத்தால் சூப்பராக இருக்கும்.