ராகி கொழுக்கட்டை செய்வது எப்படி?
-
அக்டோபர் 25, 2020
-
in
சமையல்
-
0
-
3222
Ragi Kozhukattai Recipe in Tamil
ராகி கொழுக்கட்டை செய்வது எப்படி?
தேவையான உணவு பொருட்கள்
1. ராகி மாவு – 200 கிராம்
2. சிவப்பு அரிசி புட்டு மாவு – 200 கிராம்
3. பாசிப்பருப்பு – 1 கப்
4. தேங்காய் துருவியது – 1 கப்
5. வெல்லம் – 1 கப்
6. நெய்
How to Prepare Ragi Kozhukattai Recipe in Tamil?
ராகி கொழுக்கட்டை செய்முறை
- ராகி மாவை கடாயில் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.
- அதே அளவு சிவப்பு அரிசி மாவு எடுத்து உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- தண்ணீர் 2.5 கப் எடுத்து எண்ணெய் 1 ஸ்பூன் சேர்த்து கொதிக்க விடவும்.
- சிறிது சிறிதாக இந்த தண்ணீரைச் சேர்க்கவும், மாவை கலக்கவும்.
- மாவை ஆற விடவும்.
- இனிப்பு பூரணம் செய்ய, முதலில் வெல்லத்தை கொதிக்க விட்டு வடிகட்டவும்.
- பின் பாசிப்பருப்பை வேக வைக்கவும்.
- கடாயில் சிறிது நெய் சேர்த்து தேங்காயை வறுக்கவும்.
- இப்போது வெந்த பருப்பு, வடிகட்டிய வெல்லம் ஆகியவற்றை சேர்க்கவும்.
- சிறிது நேரத்தில் கட்டியானவுடன் பூரணம் தயார்.
- இப்போது கொழுக்கட்டை மாவை எடுத்து, 2 நிமிடம் கடாயில் என்னை ஊற்றி சூடாக்கவும்.
- இந்த செயல்முறை மாவின் பிசு பிசுப்பை நீக்குகிறது.
- இப்போது கொழுக்கட்டை மாவின் உள்ளே இனிப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
- இட்லி குக்கரில் 10 நிமிடங்கள் நீராவியில் வேக வைக்கவும்.
- சுவையான ராகி கொழுக்கட்டை தயார்.
Also, read