Ennai Kathirikai Puli Kulambu in Tamil
தேவையான உணவு பொருட்கள்
1. கத்தரிக்காய் – 1/4 கிலோ
2. சின்ன வெங்காயம் – 15
3. தக்காளி – 2
4. தேங்காய் – 1/2 மூடி (சிறியது)
5. பூண்டு – 10 பற்கள்
6. கடுகு – 1/2 தேக்கரண்டி
7. வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
8. புளிக்குழம்பு பொடி – 4 தேக்கரண்டி
9. புளி தண்ணீர் – 2 கப்
10. நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
11. கருவேப்பிலை – 1 கொத்து
12. உப்பு – தேவையான அளவு
How to Make Ennai Kathirikai Puli Kulambu in Tamil?
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி?
- பாதி வெங்காயத்தினை மட்டும் இரண்டாக வெட்டி கொள்ளவும். கத்தரிக்காய்களை மேலாக ஒரு கீறல் மற்றும் கீழ் பகுதியில் ஒரு கீறலாக கீறி கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி வெட்டாத வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கி கொள்ளவும். வதக்கியதை ஆறவிட்டு தேங்காயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
- கத்தரிக்காயில் லேசாக எண்ணெய் விட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து மைக்ரோவேவில் 4 நிமிடம் வைத்து எடுத்து கொள்ளவும். (பாத்திரத்தில் கூட வதக்கி கொள்ளவும்).
- வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் தாளிக்கவும். அடுத்து வெட்டி வைத்த வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.வதங்கியதும் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும்.
- அடுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும். இதனுடன் குழம்பு பொடி சேர்த்து கிளறவும். புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்
- குழம்பு கொதித்ததும் கத்தரிக்காய்களை சேர்த்து கொதிக்க விடவும்.
- தேவைப்பட்டால் எண்ணெய் மேலாக தெளித்து வெந்ததும் இறக்கவும். சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெடி.