- மே 18, 2022
உள்ளடக்கம்
தேவையான பொருட்கள்
கேரட் – 4
பால் – 2 மேஜைக் கரண்டி
கண்டென்ஸ்டுமில்க் – 2 மேஜைக் கரண்டி
நெய் – 1/2 கோப்பை
ஏலக்காய் – 4
சர்க்கரை – 2 கோப்பை
வறுத்த முந்திரி – 10
1. கேரட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும்.
2. துருவிய கேரட்டை பாலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
3. அகன்ற பாத்திரத்தில் நெய், அரைத்த கேரட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை போட்டு வேக விடவும். வேகும் போது நன்கு கிளறி விடவும்.
4. நன்கு பதமாக வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி சேர்க்கவும்.
தேவையான பொருட்கள்
கடலைமாவு – 1/2 கோப்பை
சர்க்கரை – 1 கோப்பை
நெய் – 1 கோப்பை
முந்திரி – 5
கேசரி பவுடர் – 2 சிட்டிகை
ஏலக்காய்த்தூள் – 1/4 தேக்கரண்டி
1. கடலைமாவை கட்டியில்லாமல் சலித்துக் கொள்ளவும். 2. அடுப்பில் வாணலியை வைத்து கடலை மாவைப் போட்டு அதில் 2 தேக்கரண்டி நெய் விட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
3. தனியே1 1/2 கோப்பை தண்ணீரில் கேசரிபவுடர் சேர்த்து, அடுப்பில் இருக்கும் கடலை மாவில் கொஞ்சம் கொஞ்மாக ஊற்றி கட்டியில்லாமல் கிளறவும்.
4. கடலை மாவு முக்கால் பதம் வெந்ததும் சர்ககரையைச் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
5. பிறகு ஏலக்காய்த் தூள் சேர்த்து, அடுப்பின் தணலை குறைவாக வைத்து, அடிபிடிக்காமல் கிளறி விடவும்.
6. பாத்திரத்தில் ஒட்டாமல், அல்வா பதம் வரும்போது மிதமுள்ள நெய்யை ஊற்றி கிளறி, வறுத்த முந்திரியைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் – 2
பால் – 2 மேஜைக் கரண்டி
கண்டென்ஸ்டுமில்க் – 2 மேஜைக் கரண்டி
நெய் – 1/2 கோப்பை
ஏலக்காய் – 4
உலர்ந்த திராட்சை – 5
சர்க்கரை – 1 1/2 கோப்பை
வறுத்த முந்திரி – 10
1. பீட்ரூட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும்.
2. துருவிய பீட்ரூட்டை பாலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
3. அகன்ற பாத்திரத்தில் நெய், அரைத்த பீட்ரூட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை போட்டு வேக விடவும். வேகும் போது நன்கு கிளறி விடவும்.
4. நன்கு பதமாக வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும்.
தேவையான பொருட்கள்
சோளமாவு – ஒரு கோப்பை
சர்க்கரை – 2 கோப்பை
பால் – 3 கோப்பை
ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை
கேசரி கலர் – 2 சிட்டிகை
முந்திரி – 25 கிராம்
திராட்சை – 25 கிராம்
நெய் – 100 கிராம்
1. ஒரு அகன்ற பாத்திரத்தில் பால், சர்க்கரை, சோளமாவு சேர்த்து நன்றாக கட்டி விழாமல் கலக்கவும்.
2. அதனுடன் கேசரி கலர் சேர்த்து கலக்கவும்.
3. முந்திரி, திராட்சையை சிறிது நெய் விட்டு தனியே பொன்நிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
4. வாணலியில் சோளமாவுக் கலவையைக் கொட்டி அடுப்பில் வைத்து அடிபிடிக்காமல் கிளறவும்.
5. கலவை திரண்டு கெட்டியாக வரும்போது ஏலக்காய் பொடியைச் சேர்க்கவும்.
6. பின்னர் இக்கலவையுடன் சிறிது சிறிதாக நெய் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
7. ஊற்றிய நெய் மேலே திரண்டு வரும் போது வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
8. ஒரு தட்டில் நெய் தடவி, அடுப்பிலிருந்து இறக்கிய கலவையை அதில் கொட்டி, ஆறியபின் வேண்டிய வடிவில் துண்டுகளாக்கவும்.
தேவையான பொருட்கள்
மில்க் பிரட் – 10 துண்டுகள்
பாதாம் – 15
முந்திரி – 15
ஏலக்காய் – 5
நெய் – அரை கப்
பால் – 1/2 லிட்டர்
சர்க்கரை – 1 கப்
1. பிரட் துண்டுகளின் ஓரங்களில் வெட்டி விட்டு நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
2. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் நெய்யை ஊற்றி காய்ந்ததும், பாதாம் மற்றும் முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து உதிர்த்த பிரட் துண்டுகளை நெய்யில் போட்டு, பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
4. பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, கொதிக்க விடவும்.
5. பாலானது நன்கு கொதிக்கும் போது அதில் சர்க்கரையை போடவும். சர்க்கரை கரையும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.
6. பொன்னிறமாக வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் பாதாமில் 4 துண்டுகளை தனியாக எடுத்து வைத்து விட்டு, மீதமுள்ளவற்றை சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
7. அரைத்த பேஸ்ட்டை கொதிக்கும் பாலில் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
8. பின்பு வறுத்து வைத்துள்ள பிரட் தூளை நெய்யுடன் பாலில் சேர்த்து, தீயை குறைவிலேயே வைத்து, 10 நிமிடம் வேக வைக்கவும். கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
9. இதற்குள் பாலானது வற்றி, அல்வா போன்று வந்துவிடும். இப்போது ஓரங்களில் நெய் விட ஆரம்பிக்கும்.
10. பின்னர் இதன் மேல் பாதாம் மற்றும் முந்திரியால் அலங்கரிக்கவும். இப்போது சுவையான பிரட் அல்வா ரெடி!!!
11. இதனை சூடாகவோ அல்லது குளிர்ச்சியுடனோ சாப்பிடலாம்.