- அக்டோபர் 23, 2024
உள்ளடக்கம்
லக்ஷ்மீ அஷ்டோத்தரம் கொண்டு அர்ச்சனை செய்பவர்க்கு லக்ஷ்மீ கடாக்ஷம் உண்டாகும், ஐஸ்வர்யம் பெருகும்.
ஓம் ப்ரக்ருத்யை நம꞉ ।
ஓம் விக்ருத்யை நம꞉ ।
ஓம் வித்³யாயை நம꞉ ।
ஓம் ஸர்வபூ⁴தஹிதப்ரதா³யை நம꞉ ।
ஓம் ஶ்ரத்³தா⁴யை நம꞉ ।
ஓம் விபூ⁴த்யை நம꞉ ।
ஓம் ஸுரப்⁴யை நம꞉ ।
ஓம் பரமாத்மிகாயை நம꞉ ।
ஓம் வாசே நம꞉ । 9
ஓம் பத்³மாலயாயை நம꞉ ।
ஓம் பத்³மாயை நம꞉ ।
ஓம் ஶுசயே நம꞉ ।
ஓம் ஸ்வாஹாயை நம꞉ ।
ஓம் ஸ்வதா⁴யை நம꞉ ।
ஓம் ஸுதா⁴யை நம꞉ ।
ஓம் த⁴ந்யாயை நம꞉ ।
ஓம் ஹிரண்மய்யை நம꞉ ।
ஓம் லக்ஷ்ம்யை நம꞉ । 18
ஓம் நித்யபுஷ்டாயை நம꞉ ।
ஓம் விபா⁴வர்யை நம꞉ ।
ஓம் அதி³த்யை நம꞉ ।
ஓம் தி³த்யை நம꞉ ।
ஓம் தீ³ப்தாயை நம꞉ ।
ஓம் வஸுதா⁴யை நம꞉ ।
ஓம் வஸுதா⁴ரிண்யை நம꞉ ।
ஓம் கமலாயை நம꞉ ।
ஓம் காந்தாயை நம꞉ । 27
ஓம் காமாயை நம꞉ ।
ஓம் க்ஷீரோத⁴ஸம்ப⁴வாயை நம꞉ ।
ஓம் அநுக்³ரஹபராயை நம꞉ ।
ஓம் பு³த்³த⁴யே நம꞉ ।
ஓம் அநகா⁴யை நம꞉ ।
ஓம் ஹரிவல்லபா⁴யை நம꞉ ।
ஓம் அஶோகாயை நம꞉ ।
ஓம் அம்ருதாயை நம꞉ ।
ஓம் தீ³ப்தாயை நம꞉ । 36
ஓம் லோகஶோகவிநாஶிந்யை நம꞉ ।
ஓம் த⁴ர்மநிலயாயை நம꞉ ।
ஓம் கருணாயை நம꞉ ।
ஓம் லோகமாத்ரே நம꞉ ।
ஓம் பத்³மப்ரியாயை நம꞉ ।
ஓம் பத்³மஹஸ்தாயை நம꞉ ।
ஓம் பத்³மாக்ஷ்யை நம꞉ ।
ஓம் பத்³மஸுந்த³ர்யை நம꞉ ।
ஓம் பத்³மோத்³ப⁴வாயை நம꞉ । 45
ஓம் பத்³மமுக்²யை நம꞉ ।
ஓம் பத்³மநாப⁴ப்ரியாயை நம꞉ ।
ஓம் ரமாயை நம꞉ ।
ஓம் பத்³மமாலாத⁴ராயை நம꞉ ।
ஓம் தே³வ்யை நம꞉ ।
ஓம் பத்³மிந்யை நம꞉ ।
ஓம் பத்³மக³ந்தி⁴ந்யை நம꞉ ।
ஓம் புண்யக³ந்தா⁴யை நம꞉ ।
ஓம் ஸுப்ரஸந்நாயை நம꞉ । 54
ஓம் ப்ரஸாதா³பி⁴முக்²யை நம꞉ ।
ஓம் ப்ரபா⁴யை நம꞉ ।
ஓம் சந்த்³ரவத³நாயை நம꞉ ।
ஓம் சந்த்³ராயை நம꞉ ।
ஓம் சந்த்³ரஸஹோத³ர்யை நம꞉ ।
ஓம் சதுர்பு⁴ஜாயை நம꞉ ।
ஓம் சந்த்³ரரூபாயை நம꞉ ।
ஓம் இந்தி³ராயை நம꞉ ।
ஓம் இந்து³ஶீதலாயை நம꞉ । 63
ஓம் ஆஹ்லாத³ஜநந்யை நம꞉ ।
ஓம் புஷ்ட்யை நம꞉ ।
ஓம் ஶிவாயை நம꞉ ।
ஓம் ஶிவகர்யை நம꞉ ।
ஓம் ஸத்யை நம꞉ ।
ஓம் விமலாயை நம꞉ ।
ஓம் விஶ்வஜநந்யை நம꞉ ।
ஓம் துஷ்ட்யை நம꞉ ।
ஓம் தா³ரித்³ர்யநாஶிந்யை நம꞉ । 72
ஓம் ப்ரீதிபுஷ்கரிண்யை நம꞉ ।
ஓம் ஶாந்தாயை நம꞉ ।
ஓம் ஶுக்லமால்யாம்ப³ராயை நம꞉ ।
ஓம் ஶ்ரியை நம꞉ ।
ஓம் பா⁴ஸ்கர்யை நம꞉ ।
ஓம் பி³ல்வநிலயாயை நம꞉ ।
ஓம் வராரோஹாயை நம꞉ ।
ஓம் யஶஸ்விந்யை நம꞉ ।
ஓம் வஸுந்த⁴ராயை நம꞉ । 81
ஓம் உதா³ராங்கா³யை நம꞉ ।
ஓம் ஹரிண்யை நம꞉ ।
ஓம் ஹேமமாலிந்யை நம꞉ ।
ஓம் த⁴நதா⁴ந்யகர்யை நம꞉ ।
ஓம் ஸித்³த⁴யே நம꞉ ।
ஓம் ஸ்த்ரைணஸௌம்யாயை நம꞉ ।
ஓம் ஶுப⁴ப்ரதா³யை நம꞉ ।
ஓம் ந்ருபவேஶ்மக³தாநந்தா³யை நம꞉ ।
ஓம் வரலக்ஷ்ம்யை நம꞉ । 90
ஓம் வஸுப்ரதா³யை நம꞉ ।
ஓம் ஶுபா⁴யை நம꞉ ।
ஓம் ஹிரண்யப்ராகாராயை நம꞉ ।
ஓம் ஸமுத்³ரதநயாயை நம꞉ ।
ஓம் ஜயாயை நம꞉ ।
ஓம் மங்க³லா தே³வ்யை நம꞉ ।
ஓம் விஷ்ணுவக்ஷ꞉ஸ்த²லஸ்தி²தாயை நம꞉ ।
ஓம் விஷ்ணுபத்ந்யை நம꞉ ।
ஓம் ப்ரஸந்நாக்ஷ்யை நம꞉ । 99
ஓம் நாராயணஸமாஶ்ரிதாயை நம꞉ ।
ஓம் தா³ரித்³ர்யத்⁴வம்ஸிந்யை நம꞉ ।
ஓம் தே³வ்யை நம꞉ ।
ஓம் ஸர்வோபத்³ரவவாரிண்யை நம꞉ ।
ஓம் நவது³ர்கா³யை நம꞉ ।
ஓம் மஹாகால்யை நம꞉ ।
ஓம் ப்³ரஹ்மாவிஷ்ணுஶிவாத்மிகாயை நம꞉ ।
ஓம் த்ரிகாலஜ்ஞாநஸம்பந்நாயை நம꞉ ।
ஓம் பு⁴வநேஶ்வர்யை நம꞉ । 108 |
இதி ஸ்ரீ லக்ஷ்மீ அஷ்டோத்ரம் ||
Also, read
தமிழில் ஒரு பழமொழி உண்டு – “எழுதினவன் ஏட்டை கெடுத்தான்”. இது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ லக்ஷ்மீ அஷ்டோத்தர சத நாமாவளிக்கு பொருந்துகிறது. முதல் நபர் செய்த தவறை நம்மில் பலரும் தொடர்ந்து கொண்டே இருக்கிறோம்.
இந்த கட்டுரையைப் படித்துவிட்டு முதல் வேலையாக உங்கள் புத்தகங்களில் திருத்தம் செய்து கொள்ளுங்கள்.
எந்த ஒரு அஷ்டோத்தரமோ ஸஹஸ்ரநாமமோ முதலில் ஸ்தோத்ர வடிவில் ச்லோகங்களாகவே இருக்கும் – பின்னர் இதனை நாமாக்களாக அர்ச்சனைக்காக பிரிப்பது வழக்கம்.
அதே போல லக்ஷ்மீ அஷ்டோத்தர சத நாமாவளி –
ப்ரக்ருதீம் விக்ருதீம் வித்யாம் ஸர்வபூதஹிதப்ரதாம்… என்று துவங்குகிறது.
இதனை,
ஓம் ப்ரக்ருத்யை நம:
ஓம் விக்ருத்யை நம:
ஓம் ஸர்வ பூதஹித ப்ரதாயை நம:
என்று பிரிக்கிறோம்.
இனி முக்கியமான பகுதிக்கு வருவோம்.
லக்ஷ்மீ அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரத்தின் மூன்றாவது ச்லோகம் :
அதிதிம் ச திதிம் தீப்தாம் வசுதாம் வசுதாரிணீம்
நமாமி கமலாம் காந்தாம் காமாக்ஷீம் க்ரோதசம்பவாம்
இதனை ,
ஓம் அதித்யை நம:
ஓம் தித்யை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் வசுதாயை நம:
ஓம் வசுதாரிண்யை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் க்ரோத ஸம்பவாயை நம:
என்றே 90% புத்தகங்கள் காட்டுகிறது.
கமலா – தாமரையில் வீற்றிருக்கும் மஹாலக்ஷ்மீ
காந்தா -(விஷ்ணுவின்) மனைவி
காமாக்ஷி – அழகிய கண்களை உடையவள்
இது வரை சரி; அடுத்த நாமா –
க்ரோத ஸம்பவாயை – கோபத்தோடு உதித்தவள் அல்லது கோபத்தினால் உதித்தவள்.
இது சரியாக பொருந்தவில்லையே…?
இப்படி அர்ச்சனை செய்வது சரியாகுமா? லக்ஷ்மிக்கே பிடிக்குமா?
1935ல் வெளிவந்த புத்தகங்களில் நாமா சரியாகவே பிரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வந்தவர்கள், யாரோ ஒருவர் அறியாமல் பதம் பிரித்து “க்ரோத ஸம்பவா” என அச்சிடப்போக, பின்னாளில் வந்தவர்கள் யாருமே அதை சரிபார்க்காமல் அப்படியே அச்சிடுகிறார்கள். இன்று கிட்டத்தட்ட எல்லா புத்த்கங்களிலும் இணையத்திலும் அப்படியே தான் இருக்கிறது.
லக்ஷ்மீ அஷ்டோத்தரம் கொண்டு அர்ச்சனை செய்பவர்க்கு லக்ஷ்மீ கடாக்ஷம் உண்டாகும், ஐச்வர்யம் பெருகும். ஆனால் மக்கள் பலரும் தாங்கள் கஷ்டப்படுவதாக புலம்புவதைப் பார்க்கும் போது – இது போன்று தவறுகள் இருப்பதைக் காண முடிகிறது. (குரு முகமாக படிக்காமல் புத்தகம் மூலமாக படிப்பதன் விளைவு)!
நம்மை யாராவது “சிடுமூஞ்சி” என்றால் நாம் சந்தோஷப்படுவோமா? ஆனால் மஹாலக்ஷ்மியை இப்படி தவறாக அழைத்தால் பூர்ணமாக அனுக்ரஹம் எப்படி கிட்டும் ?
இனி சரியான பாடத்துக்கு வருவோம்
ஓம் கமலாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமாயை நம:
ஓம் க்ஷீரோத ஸம்பவாயை நம:
காமாயை – ஆசையின் வடிவானவளே
க்ஷீரோத ஸம்பவாயை – பாற்கடலில் உதித்தவளே
இது அம்ருத மதன காலத்தில் பாற்கடலில் இருந்து மஹாலக்ஷ்மி உதித்தாள் எனும் புராணத்துக்கு இசைந்து அமைகிறது. வாசகர்கள் அனைவரும் இனிமேல் நாமாக்களை திருத்திக் கொண்டு மஹாலக்ஷ்மியின் பூர்ண கடாக்ஷத்துக்கு பாத்திரமாகுங்கள்.
Yes I am also telling everybody not to tell krodha sambavayai. Good thing
Good service. Using this for doing Archanai. ,????????
Immense respectful thanks. HariOm