Brinjal Kadayal Recipe in Tamil
தேவையான பொருட்கள்
சிறிய கத்திரிக்காய் – 1/4 கிலோ
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 3
புளி – பெரிய நெல்லிக்காயளவு
உப்பு – தேவைக்கு
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது
காய்ந்த மிளகாய் -1
செய்முறை
- கத்திரிக்காயை பொடியாகவும், வெங்காயம் + தக்காளியும் நறுக்கி வைக்கவும்.
- பாத்திரத்தில் அனைத்தும் சேர்த்து உப்பை தவிர நீர் ஊற்றி வேகவைக்கவும்.
- வெந்ததும் சட்டி அல்லது மிக்ஸியில் வேகவைத்த நீரை வடிகட்டி கடைந்து கொள்ளவும்.
- கெட்டியாக இருந்தால் தேவைக்கு வேகவைத்த நீரை சேர்த்து கலக்கவும்.
- பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் உப்பு சேர்த்து கலந்து இட்லி/தோசையுடன் பரிமாறவும்.