×
Wednesday 27th of November 2024

கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?


உள்ளடக்கம்

Brinjal Kadayal Recipe in Tamil

தேவையான பொருட்கள்

சிறிய கத்திரிக்காய் – 1/4 கிலோ
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 3
புளி – பெரிய நெல்லிக்காயளவு
உப்பு – தேவைக்கு
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்

தாளிக்க

எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது
காய்ந்த மிளகாய் -1

செய்முறை

  • கத்திரிக்காயை பொடியாகவும், வெங்காயம் + தக்காளியும் நறுக்கி வைக்கவும்.
  • பாத்திரத்தில் அனைத்தும் சேர்த்து உப்பை தவிர நீர் ஊற்றி வேகவைக்கவும்.

  • வெந்ததும் சட்டி அல்லது மிக்ஸியில் வேகவைத்த நீரை வடிகட்டி கடைந்து கொள்ளவும்.
  • கெட்டியாக இருந்தால் தேவைக்கு வேகவைத்த நீரை சேர்த்து கலக்கவும்.

  • பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் உப்பு சேர்த்து கலந்து இட்லி/தோசையுடன் பரிமாறவும்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • மே 18, 2022
குல்கந்து செய்வது எப்படி?
  • மே 15, 2022
ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)
  • ஏப்ரல் 7, 2022
உப்பு/அட மாங்கா செய்வது எப்படி?