×
Thursday 3rd of April 2025

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு


Ennai Kathirikai Puli Kulambu in Tamil

தேவையான உணவு பொருட்கள்
1. கத்தரிக்காய் – ‍‍1/4 கிலோ
2. சின்ன வெங்காயம் – 15
3. தக்காளி – 2
4. தேங்காய் – 1/2 மூடி (சிறியது)
5. பூண்டு – 10 பற்கள்
6. கடுகு – 1/2 தேக்கரண்டி
7. வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
8. புளிக்குழம்பு பொடி – 4 தேக்கரண்டி
9. புளி தண்ணீர் – 2 கப்
10. நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
11. கருவேப்பிலை – 1 கொத்து
12. உப்பு – தேவையான அளவு

How to Make Ennai Kathirikai Puli Kulambu in Tamil?

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி?

  1. பாதி வெங்காயத்தினை மட்டும் இரண்டாக வெட்டி கொள்ளவும். கத்தரிக்காய்களை மேலாக ஒரு கீறல் மற்றும் கீழ் பகுதியில் ஒரு கீறலாக கீறி கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெட்டாத வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கி கொள்ளவும். வதக்கியதை ஆறவிட்டு தேங்காயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
  3. கத்தரிக்காயில் லேசாக எண்ணெய் விட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து மைக்ரோவேவில் 4 நிமிடம் வைத்து எடுத்து கொள்ளவும். (பாத்திரத்தில் கூட வதக்கி கொள்ளவும்).
  4. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் தாளிக்கவும். அடுத்து வெட்டி வைத்த வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.வதங்கியதும் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும்.
  5. அடுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும். இதனுடன் குழம்பு பொடி சேர்த்து கிளறவும். புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்
  6. குழம்பு கொதித்ததும் கத்தரிக்காய்களை சேர்த்து கொதிக்க விடவும்.
  7. தேவைப்பட்டால் எண்ணெய் மேலாக தெளித்து வெந்ததும் இறக்கவும். சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெடி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • மார்ச் 29, 2025
குல்கந்து செய்வது எப்படி?
  • மார்ச் 28, 2025
ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)
  • மார்ச் 28, 2025
கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?