- மே 18, 2022
உள்ளடக்கம்
தை மாதத்தில் பொங்கல் திருநாளுக்கு கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு நிறைய கிடைக்கும். கரும்பினை அப்படியே ஜூஸ் செய்து குடித்தால் நாக்கு அரிக்கும்.
அதில் சிறிதளவு எலுமிச்சையும், இஞ்சியும் சேர்த்து செய்தால் மிக சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
கரும்பு – 2 அங்குலத்துண்டு
இஞ்சி – சிறிய துண்டு
எலுமிச்சை சாறு – 1 டேபிள்ஸ்பூன்
கரும்பு ஜூஸ் செய்முறை
கரும்பின் மேல் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
அதனுடன் தோல் சீவிய இஞ்சி மற்ரும் நீர் சேர்த்து அரைக்கவும்.
அதனை வடிகட்டு எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்!