- மே 18, 2022
உள்ளடக்கம்
தேவையான பொருட்கள்
முருங்கைக்காய் – 4
உருளைக்கிழங்கு – 1
பெரிய வெங்காயம் – 1
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
எலுமிச்சம்பழச் சாறு – ஒரு மேஜைக்கரண்டி
கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி
வெண்ணெய் – 1 மேஜைக் கரண்டி
மல்லித் தூள் (தனியாதூள்) – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
பூண்டு – 2 பல்
மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
முருங்கைக்காய் சூப் செய்முறை
1. உருளைக்கிழங்கைத் தோல் சீவி வைத்துக் கொள்ளவும்.
2. வெங்காயம் முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3. குக்கரில் உருளைக்கிழங்கு, வெங்காயம், முருங்கைக்காய் ஆகியவற்றை 200 மில்லி தண்ணீருடன் சேர்த்து 3 விசில் வரை வேகவைக்கவும்.
4. குக்கரில் ஆவி அடங்கியதும், முருங்கைக்காயின் சதைப் பகுதியை தனியே வழித்தெடுக்கவும். உருளைக்கிழங்கு, வெங்காயத்தை தனியே எடுத்து அரைக்கவும்.
5. ஏற்கனவே குக்கரில் வேகவைத்த தண்ணீரில் முருங்கைக்காய் விழுது, உருளைக்கிழங்கு வெங்காய விழுதைச் சேர்த்து கலக்கவும்.
6. மல்லித்தூள், பச்சை மிளகாய், பூண்டு, மிளகுத்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
7. வெண்ணெயை உருக்கி அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
8. பின்னர், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம் கலந்த வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
9. கொதித்ததும் இறக்கி வைத்து எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்து பரிமாறவும்.