×
Wednesday 2nd of April 2025

நீர் தோசை செய்வது எப்படி?


உள்ளடக்கம்

Neer Dosa Recipe in Tamil

நீர் தோசை மங்களூரில் மிக பிரபலமான காலை சிற்றுண்டி. அரைத்த உடனே சுட்டுவிடலாம். காலையில் சுடுவதாக இருந்தால் அரிசியை இரவே ஊறவைக்கவும். இதற்கு காரசட்னி/தேங்காய் சட்னி/ சிக்கன் குழம்பு ஏற்றது.

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 கப்
துருவிய தேங்காய் – 1/2 கப்
உப்பு – தேவைக்கு

செய்முறை

அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து தேங்காய் சேர்த்து மிக நைசாக உப்பு சேர்த்து அரைக்கவும்.

இதற்கு மாவு நீர்க்க இருக்க வேண்டும். அரைத்த மாவில் மேலும் 1 கப் நீர் ஊற்றி கரைக்கவும்.

இரும்பு தோசை கல்லை காயவைத்து எண்ணெய் ஊற்றி நன்கு தேய்த்த பின் மாவினை கல்லின் ஓரத்திலிருந்து ஊற்றி நடுவில் முடிக்கவும். ரவா தோசைக்கு சுடுவது போல் மாவினை ஊற்றவும்.

மூடி போட்டு வேகவைக்கவும். ஓரங்கள் வெந்து வரும் போது மடித்து எடுக்கவும்.

காரமான சட்னியுடன் பரிமாறவும்!

பின் குறிப்பு

  • மாவு நன்கு நீர்க்க இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு முறையும் ஊற்றும் போது மாவினை நன்கு கலக்கி ஊற்றவும்.
  • பச்சரிசி மட்டுமே உபயோகிக்கவும்.
  • அரைத்த உடனே மாவினை சுடவும்.

 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • மார்ச் 29, 2025
குல்கந்து செய்வது எப்படி?
  • மார்ச் 28, 2025
ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)
  • மார்ச் 28, 2025
கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?