×
Saturday 28th of December 2024

நேந்திரங்காய் சிப்ஸ் செய்வது எப்படி?


Nendran Chips Recipe in Tamil

இந்த சிப்ஸ் செய்ய நன்கு காயாக இருப்பதையே பயன்படுத்தவும். தோலினை தூக்கி எறியாமல் மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும். அடுத்த ரெசிபியில் எப்படி பொரியல் செய்வது என் பார்ப்போம்.

இப்போழுது சிப்ஸ் செய்வதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நேந்திரங்காய் – 3
உப்பு – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன் + 3/4 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – பொரிக்க

How to Prepare Nendran Chips in Tamil?

நேந்திரம் சிப்ஸ் செய்முறை

  • சிறிது நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் + 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
  • நேந்திரங்காயில் கத்தியால் ஆங்காங்கே கீறி தோலினை எடுக்கவும்.
  • 3/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் + நீர் கலந்து தோல் சீவிய காயினை நீரில் 15 நிமிடம் வைக்கவும். காய் மூழ்குமளவு நீர் இருக்க வேண்டும்.
  • பின் காயினை ஈரம் போக நன்கு துடைத்து வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய வைக்கவும்.
  • தீயினை குறைந்த அளவு வைத்து, சிப்ஸ் கட்டையால் நேரடியாக காயும் எண்ணெயில் சீவவும். பின் தீயினை அதிகபடுத்தி வேகவைக்கவும்.
  • கரண்டியால் ஒன்றோடு ஒன்று ஒட்டாதவாறு கிளறி விடவும்.
  • சிப்ஸ் வெந்து எண்ணெய் சத்தம் அடங்கும் போது 1 டீஸ்பூன் உப்பு கலந்து நீரினை ஊற்றவும்.
  • மீண்டும் எண்ணெயின் சத்தம் அடங்கியதும் சிப்ஸினை எடுத்து பேப்பர் டவலில் வைக்கவும்.

பின் குறிப்பு

  • சிப்ஸ்க்கு எண்ணெய் நன்றாகவே காய்ந்திருக்க வேண்டும்.
  • உப்பு கலந்த நீரினை சூடான எண்ணெயில் ஊற்றும் எண்ணெய் பொங்கும், கவனமாக செய்யவேண்டும்.
  • நன்கு ஆறியதும் காற்றுபுகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தவும்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • மே 18, 2022
குல்கந்து செய்வது எப்படி?
  • மே 15, 2022
ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)
  • ஏப்ரல் 21, 2022
கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?