How to Prepare Pirandai Thuvaiyal Recipe in Tamil?
பிரண்டை துவையல் செய்வது எப்படி?
பாரம்பரிய பிரண்டை துவையல் எப்படி செய்வது என்பதை விரிவாக பார்ப்போம்.
தேவையான உணவு பொருட்கள்
பிரண்டை – 2 கட்டு
உளுத்தம் பருப்பு – 3 ஸ்பூன்
இஞ்சி – 2 இன்ச்
12 பல் பூண்டு
பச்சை மிளகாய் – காரதிற்கேற்ப
காய்ந்த மிளகாய் – காரதிற்கேற்ப
புளி 1 1 எலுமிச்சை அளவு
உப்பு சுவைகேற்ப
How to Clean Pirandai in Tamil?
பிரண்டை சுத்தம் செய்வது எப்படி?
- முதலில் பிரண்டையின் நரம்பை கத்தியால் நீக்கவும்.
- இளம் தண்டாக இருந்தால் கையாலேயே உரித்துவிடலாம்.
- பின்பு அதனை கொதிக்கும் வெந்நீரில் போட்டு பழுப்பு நிறம் வரும் வரை வைக்கவும்.
- நிறம் மாறியவுடன் அதனை வடி கட்டி எடுக்கவும்.
- பிறகு அதை சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வதக்கவும்.
- இவ்வாறு செய்தால் பிரண்டையால் வரும் அரிப்பு மற்றும் நமைச்சல் இருக்காது.
பிரண்டை துவையல் செய்முறை:
- முதலில் பிரண்டையை நன்கு சுத்தம் செய்யவும்.
- மேல் கூறிய அனைத்து பொருட்களையும் கடாயில் சிறுது எண்ணெய் ஊற்றி தனி தனியே வறுத்து எடுக்கவும் .
- பிறகு அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக மிக்ஸியில் அரைக்கவும்.
- முதலில் உளுத்தம் பருப்பையும் உப்பயும் அரைக்கவும்.
- மற்ற பொருட்களை போட்ட பிறகு கடைசியில் பிரண்டையை போட்டு மையாக அரைக்கவும்.
- அரைத்த பின் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிதம் செய்யவும்.
- சுவையான பிரண்டை துவையல் ரெடி.
குறிப்பு: இதனை சமையல் செய்தவுடன் உண்ணாமல் மறுநாள் உண்டால் சுவை நன்றாக இருக்கும் மேலும் இதனால் நாக்கில் நமைச்சல் ஏற்படாது.
Also, read: