×
Friday 3rd of January 2025

குரு பாதுகா ஸ்தோத்திரம் (Guru Paduka Stotram)


Guru Paduka Stotram Lyrics & Meaning Tamil

குரு பாதுகா பாடல் வரிகள் & விளக்கம்

குரு பாதுகா ஸ்தோத்திரம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் குருவின் முக்கியத்துவத்தை போற்றும் ஒரு பாடலாகும், மேலும் இந்த ஸ்தோத்திரத்தை உச்சரிப்பதன் மூலம் குருவின் அருளைப் பெற முடியும். இது ஒரு குருவின் பல குணங்களைப் போற்றுகிறது; அவரது வழிகாட்டுதலின் கீழ் வாழ்பவரின் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதை விளக்குகிறது. குரு பாதுகா ஸ்தோத்திரத்தை உச்சரித்து, உங்கள் குருவைக் கண்டு, அவருடைய அருளைப் பெற்று, உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்.

Guru Paduka Stotram Lyrics in Tamil

கு³ரு பாது³கா ஸ்தோத்ரம்

அனந்தஸம்ஸார ஸமுத்³ரதார நௌகாயிதாப்⁴யாம் கு³ருப⁴க்திதா³ப்⁴யாம் ।
வைராக்³யஸாம்ராஜ்யத³பூஜனாப்⁴யாஂ நமோ நம: ஶ்ரீகு³ருபாது³காப்⁴யாம் ॥ 1 ॥

விளக்கம்: முடிவற்ற வாழ்க்கை எனும் கடலை கடக்க உதவும் படகு இது; என் குருவின் மேல் பக்தியை என்னுள் கொண்டுவருவது; இதை வணங்கி பற்றற்ற வாழ்வின் சாம்ராஜ்யத்தை அடைவேன்; என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.

கவித்வவாராஶினிஶாகராப்⁴யாம் தௌ³ர்பா⁴க்³யதா³வாம் பு³த³மாலிகாப்⁴யாம் ।
தூ³ரிக்ருதானம்ர விபத்ததிப்⁴யாஂ நமோ நம: ஶ்ரீகு³ருபாது³காப்⁴யாம் ॥ 2 ॥

விளக்கம்: பரிபூரண பௌர்ணமி நிலா போன்றதும் அறிவுக்கடலுமாம் இது; துரதிருஷ்டத்தீயினை போக்கும் நீர் இந்த பாதுகை; சரணாகதி அடைந்தவர்களின் துயரங்களை அழிக்கவல்லது; என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.

நதா யயோ: ஶ்ரீபதிதாஂ ஸமீயு: கதா³சித³ப்யாஶு த³ரித்³ரவர்யா: ।
மூகாஶ்ர்ச வாசஸ்பதிதாஂ ஹி தாப்⁴யாஂ நமோ நம: ஶ்ரீகு³ருபாது³காப்⁴யாம் ॥ 3 ॥

விளக்கம்: தன்னை வணங்கி துதிப்பவர்களை; அவர்கள் ஏழைகள் என்றாலும் கூட, செல்வந்தர்களாக்கும்; ஊமைகளைக்கூட சிறந்த சொற்பொழிவாளராக்கும்; என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.

நாலீகனீகாஶ பதா³ஹ்ருதாப்⁴யாஂ நானாவிமோஹாதி³ நிவாரிகாப்⁴யாம் ।
நமஜ்ஜனாபீ⁴ஷ்டததிப்ரதா³ப்⁴யாஂ நமோ நம: ஶ்ரீகு³ருபாது³காப்⁴யாம் ॥ 4 ॥

விளக்கம்: தாமரை போன்ற குருவின் பாதங்களை நோக்கி நம்மை அழைத்து செல்வதும்; வீண் ஆசைகளை அழித்து நம்மை தூய்மைப்படுத்துவதும்; துதிப்பவரின் எண்ணங்களை நிறைவேற்றும்; என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.

ந்ருபாலி மௌலிவ்ரஜரத்னகான்தி ஸரித்³விராஜத் ஜ²ஷகன்யகாப்⁴யாம் ।
ந்ருபத்வதா³ப்⁴யாஂ நதலோகபங்கதே: நமோ நம: ஶ்ரீகு³ருபாது³காப்⁴யாம் ॥ 5 ॥

விளக்கம்: மன்னனின் மகுடத்தில் ஒளிரும் மாணிக்கக்கல் போன்றது; முதலைகள் சூழ்ந்த நதியில் பிரகாசிக்கும் பெண் போன்றது; தன் பக்தனை அரசனாகவே ஆக்கும் சக்தி கொண்டது; என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.

பாபான்த⁴காரார்க பரம்பராப்⁴யாஂ தாபத்ரயாஹீன்த்³ர க²கே³ஶ்ர்வராப்⁴யாம் ।
ஜாட்³யாப்³தி⁴ ஸம்ஶோஷண வாட³வாப்⁴யாஂ நமோ நம: ஶ்ரீகு³ருபாது³காப்⁴யாம் ॥ 6 ॥

விளக்கம்: இருண்ட பாவங்களை போக்கும் ஒளிரும் சூரியன் போன்றதும்; துன்பமெனும் நாகத்தை அழிக்கும் கருட ராஜனைப் போன்றதும்; கடல் போன்ற அஞ்ஞானத்தை எரித்து போக்கவல்ல தீ போன்றதுமான; என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.

ஶமாதி³ஷட்க ப்ரத³வைப⁴வாப்⁴யாஂ ஸமாதி⁴தா³ன வ்ரததீ³க்ஷிதாப்⁴யாம் ।
ரமாத⁴வான்த்⁴ரிஸ்தி²ரப⁴க்திதா³ப்⁴யாஂ நமோ நம: ஶ்ரீகு³ருபாது³காப்⁴யாம் ॥ 7 ॥

விளக்கம்: சமாதி போன்ற ஆறு உயர்ந்த தன்மைகளை வழங்கவல்லதும்; பேரானந்த நிலையை சீடர்களுக்குத் தரவல்லதும்; என்றும் இறைவனின் திருவடியை நிலையாக வணங்கும் பக்தியைத் தரவல்லதுமான; என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.

ஸ்வார்சாபராணாஂ அகி²லேஷ்டதா³ப்⁴யாஂ ஸ்வாஹாஸஹாயாக்ஷது⁴ரன்த⁴ராப்⁴யாம் ।
ஸ்வான்தாச்ச²பா⁴வப்ரத³பூஜனாப்⁴யாஂ நமோ நம: ஶ்ரீகு³ருபாது³காப்⁴யாம் ॥ 8 ॥

விளக்கம்: எப்பொழுதும் தம் பணியில் ஈடுபட்டு; தொண்டாற்றும் சீடர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதும்; நாடுபவர்களின் தன்னை உணர்தலுக்கு உதவி புரிவதுமான; என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.

காமாதி³ஸர்ப வ்ரஜகா³ருடா³ப்⁴யாஂ விவேகவைராக்³ய நிதி⁴ப்ரதா³ப்⁴யாம் ।
போ³த⁴ப்ரதா³ப்⁴யாம் த்³ருதமோக்ஷதா³ப்⁴யாஂ நமோ நம: ஶ்ரீகு³ருபாது³காப்⁴யாம் ॥ 9 ॥

விளக்கம்: மோகம் என்ற பாம்பினை விரட்டும் கருடனைப் போன்றதும்; விவேகம், பற்றற்ற தன்மை போன்ற செல்வங்களை ஒருவருக்கு வழங்கவல்லதும்; ஞான அறிவினை ஒருவருக்கு ஆசிர்வதிப்பதும், தன்னை நாடுபவர்களுக்கு விரைவாக முக்திநிலையை தருவதுமான; என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்!!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 22, 2024
மகா மிருத்யுஞ்சய மந்திரம்
  • டிசம்பர் 2, 2024
உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்
  • அக்டோபர் 23, 2024
சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக்: ஒரு முழுமையான விளக்கம்