- டிசம்பர் 19, 2024
உள்ளடக்கம்
ஓம் முருகா
குமரன் ஒரு கையில் வில்லுடனும் மறு கையில் வேலுடனும் காட்சி தரும் இடம் திருவிடைக்கழி. மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலை தடத்தில் இருக்கிறது .
முருகப் பெருமான் கையில் மாம்பழத்தோடு காட்சி தரும் இடம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்.
ஸ்ரீ முருகப்பெருமானுக்கு இரண்டு முகங்களும் எட்டு கரங்களுடனும் சென்னிமலையில் காட்சி தருகிறார். இந்த சந்நதிக்கு எதிரில் காகங்கள் பறப்பதில்லை.
முருகன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க, நஞ்சன் கூடு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கிறார். இந்த கோவில் கர்நாடகா மாநிலத்தில் உள்ளது.
கும்பகோணத்தில் உள்ள “வியாழ சோமேஸ்வரர்” ஆலயத்தில் ஸ்ரீ முருகப் பெருமான் காலில் பாதரட்சை அணிந்தபடி காட்சி அளிக்கிறார்.
திருவையாறு ஐயாரப்பன் சன்னதி பின்புறம் கையில் வில் அம்போடு முருகன் அருள்பாலிக்கிறார் தனுசு சுப்ரம்மண்யர்
திருப்போரூரில் மூல விக்கிரமாக முத்துக்குமார சுவாமியாய் காட்சி தருகிறார் முருகப் பெருமான். கந்தன் இடது காலை தரையில் ஊன்றி வலது காலை மயில் மீது வைத்து இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் ஏந்தியபடி போருக்குப் புறப்படும் நிலையில் காட்சி தருகிறார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேளுக் குறிச்சி என்னுமிடத்தில் முருகன் வேடன் வடிவில் காட்சி தருகிறார். இந்த வேடர் வடிவ முருகன் சிலையில் வியர்வை வருவது வியப்பான ஒன்று.
மகாபலிபுரம் அருகே வளவன் தாங்கல் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள முருகன் தண்டாயுதபாணியாய் காட்சி தருகிறார். அவர் கண்களிலிருந்து நீர் வருவது வியப்பளிக்கிறது.
மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள நெய்குப்பை என்ற ஊரில் அம்மன் கையில் கைக்குழந்தையாக அமர்ந்தபடி காட்சி தருகிறார் பாலமுருகன்.
திருநனிப்பள்ளி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் உள்ள ஆலயங்களில் முருகப் பெருமான் மூன்று கண்களுடனும் எட்டு கரங்களுடனும் காட்சி தந்து அருள்புரிகிறார்.
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது ஒற்றைக் கண்ணனூர். இங்குள்ள மிகவும் பழமை வாய்ந்த முருகன் கோவிலில் முருகன் ஒரு கரத்தில் ஜெப மாலையுடனும் மறு கரத்தில் ‘சின்’ முத்திரையுடனும் காட்சி தருகிறார்.
கனககிரி எனும் இடத்தில் உள்ள முருகன் சந்நதியில் கந்த பெருமான் கரத்தில் கிளியை ஏந்தியபடி காட்சி தருகிறார்.
செம்பனார் கோவில் என்ற இடத்தில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் ஜடாமகுடம் தாங்கி இரண்டு கைகளிலும் அக்கமாலை கொண்டு தவக் கோலத்தில் காட்சி தருகிறார்.
தனது மாமன் திருமாலைப்போல் திருமுருகப் பெருமான் கரங்களில் சங்கு சக்கரம் ஏந்த காட்சி தரும் ஆலயம் கும்பகோணம் அருகில் அழகாபுத்தூர் என்ற இடத்தில் உள்ளது.
முருகப் பெருமான் பாம்பு வடிவில் காட்சியளிக்கும் கோவில் “காட்டி சுப்ரமணியா” எனும் குக்கே சுப்ரமண்யா தலம். இது கர்நாடகா மாநிலத்தில் உள்ளது. இப்பகுதியில் பாம்புகள் யாரையும் கடிப்பதில்லை. அதுபோல் பாம்பைக் காணும் யாரும் அதைத் துன்புறுத்துவதில்லை.
பூம்புகார் அருகே மேலையூரில் திருச்சாய்க்காடு (இலுப்பை வனம்) சாயாவனேஸ்வர்ர் கோவிலில் முருகன் வில் அம்பு ஏந்திய பஞ்சலோக சிலை வடிவில் உள்ளார்.
ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் ஜலகாம்பாறை எனுமிடத்தில் உள்ள முருகன் கோவிலில் விக்கிரகம் இல்லை. ஏழு அடி உயர வேல் மட்டும்தான் இருக்கிறது. வேல் வடிவில் வேலன் காட்சி தரும் வித்தியாசமான ஆலயமிது.
nice and interesting information
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் மணவாளநல்லூர் , அ/மி கொளஞ்சியப்பர் திருக்கோயில் இங்கு முருகன் சுயம்பு வடிவில் பலிபீடத்தில் ரூபத்தில் காட்சி தருகிறார்.
மிக்க நன்றி @ ஹரிஹரன்