×
Sunday 29th of December 2024

திருவாரூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் பிச்சாடனனாக ஆகியவன்


கா-22எ என்ற அடையாள எண்ணுடைய ஒரு முத்திரை சிந்து சமவெளி நாகரிகத்தைச் சார்ந்த காளிபங்கன் என்னும் நகரத்தில்  மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை தற்போது இந்தியாவில் புது டெல்லி அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது.

இந்த முத்திரையின் நிழல் படம் சி.ஐ.எஸ்.ஐ. தொகுப்பு-1, பக்கம் 303 – லும், மற்ற குறிப்புக்கள் பக்கம் 374 – லும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த முத்திரையைப் பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ள செய்தியாவது,

சதுர வடிவிலான இந்த முத்திரையின் மேல் பகுதியில், ‘சீ’ என்னும் 3-ஆவது உயிர்மெய் எழுத்தைக் குறிக்கும் சீப்பு வடிவிலான குறியீடும், பிச்சாடனன் உருவமும், 5 எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன.  சீப்பு வடிவிலான குறியீடும், 1-ஆவது, 2-ஆவது, 3- ஆவது எழுத்துக்கள் ஆகிய நான்கும்  இணைந்துள்ளன. 3-ஆவது, 4-ஆவது ஆகிய இரண்டு எழுத்துக்களுக்கு இடையே ஒரு பிச்சாடனன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கீழ் பகுதியில், எருது வகையைச் சார்ந்த ஒத்தக்கொம்பன் என்னும் ஒத்தக்கோடு நந்தியின் உருவமும், பரமஞானம் என்பதைக் குறிக்கும் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த முத்திரையில் உள்ள புடைப்பு வகையைச் சார்ந்த குறியீடு, உருவம், எழுத்துக்கள் ஆகியவை மிருதுவான துணி அல்லது மரப்பட்டை போன்றவற்றில் அச்சிட்டு படித்தறியக் கூடியவை. அவற்றை சீ + ஆ + ரூ +  ர் + பிச்சாடனன் + (ஆ) + ன + ன். சீ ஆரூ ர் பிச்சாடனனானன்.

இவற்றில், ‘ஆ’ என்பது 2-ஆவது உயிர் எழுத்து, ‘ரூ’ என்பது 12-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ர்’ என்பது 12-ஆவது மெய் எழுத்து,  ‘ன’ என்பது 18-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ன் ‘என்பது 18-ஆவது மெய் எழுத்து. இதில் ‘ன்’ என்னும் 18-ஆவது மெய் எழுத்தும் ‘ஆ’ என்னும் 2-ஆவது உயிர் எழுத்தும் இணையும்  போது ‘னா’ என்னும் உயிர்மெய் எழுத்து பிறக்கும்.

சீ ஆரூ ர் பிச்சாடனனானன்

சீ ஆரூ ர் : திரு ஆரூர் – திருவாரூர்

பிச்சாடனன் : சிவபெருமானின் 16 வெளிப்பாடுகளில் ஒன்று.

ஆனன் : ஆகியவன்

பொருள்: திருவாரூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் பிச்சாடனனாக ஆகியவன்.

குறிப்பு: சிந்து சமவெளி முத்திரைகளில், இரண்டு புறங்களிலும் பிச்சாபாத்திரங்கள் கொண்ட பைகள் கட்டித் தொங்கும் ஒரு தடியை தோளில் சுமந்தும், இரு கரங்களில் அந்தப் பைகளையோ அல்லது தடியை பிடித்தும், ஒரு காலை சற்று மடக்கியவாறு நிற்கும் நளின கோலத்தில் காட்சி தரும் ஒரு மனித உருவம், சிவபெருமானின் 16 வெளிப்பாடுகளில் ஒன்றான பிச்சாடனன் என்னும் பிச்சாண்டாரின் திருவுருவாகும். சில முத்திரைகளில் இந்தத் திருவுருவத்தின் தலையை ‘பி’ என்னும் 9-ஆவது உயிர்மெய் எழுத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஜூலை 6, 2022
சிந்து சமவெளி முத்திரையில் அதிசய அழிஞ்சில் மரத்தின் குறிப்பு
  • மே 23, 2022
திரு பாநாட்டான் படைத்தப் பாட்டு மங்களகரமானது
  • மே 7, 2022
போற்றுதலுக்குரிய நிலவு / வெந்தயம்