×
Wednesday 27th of November 2024

உடம்பைப் படைத்த ஆன்மா ஓர் உளவாளி


சிந்து சமவெளி நாகரிகப் பகுதியில் மிகவும் முக்கிய நகரமான ஹரப்பாவில் இந்தியத் தொல்பொருள் துறையினர் மேற்கொண்ட அகழாய்வின் போது எச் – 410எ என்னும் முத்திரை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது தற்போது பாகிஸ்தானில் உள்ள ஒரு அருங்காட்சியத்தில் பாதுகாப்பாக உள்ளது. இதன்; நிழல்படம் சி.ஐ.எஸ்.ஐ 2, பக்கம் 267-லும், அதனைப் பற்றிய குறிப்புக்கள் பக்கம் 441 – லும் குறிப்பிடப்பட்டுள்ளன.

சதுர வடிவிலான இந்த முத்திரையின் மேல் பகுதியில் எட்டு புடைப்பு எழுத்துக்களும், கீழ் பகுதியில் எருது வகையைச் சேர்ந்த ஒத்தக்கொம்பன் என்னும் ஒத்தக்கோடு நந்தியின் புடைப்பு உருவமும், பரம்மஞானம் (பரத்தை அறிந்தவன்) என்பதை குறிக்கும் ஒரு புடைப்பு சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன. 1-வது, 2-வது எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்றும், 3-வது, 4-வது எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்றுமாக இணைந்துள்ளன.

இந்த முத்திரையில் உள்ள எழுத்துக்கள் புடைப்பு வகையைச் சார்ந்தவை யாதலால் அவை மிருதுவான துணி அல்லது மரப்பட்டை ஆகியவற்றில் அச்சிட்டு படித்தறியக் கூடியவையாகும்.  அவை ஊ + ன்+  (உ)ள் +  ளா + ள் +  (இ)ட் + ட + ஆ. ‘ஊன் (உ)ள்ளாள் (இ)ட்ட ஆ’ எனப் படிக்கப்படுகிறது.

இந்த எழுத்துக்களில் உள்ள,  ‘’ என்பது 6-வது உயிர் எழுத்து, ‘ன்’ என்பது 18-வது மெய் எழுத்து, ‘ள்’ என்பது 16-வது மெய் எழுத்து, ‘ளா’ என்பது 16-வது உயிர்மெய் எழுத்து, ‘ள்’ என்பது 16-வது மெய் எழுத்து, ‘(இ)ட்’ என்பது 5-வது மெய் எழுத்து, ‘’ என்பது 5-வது உயிர்மெய் எழுத்து, ‘’ என்பது 2-வது உயிர் எழுத்து.

ஊன் : உடம்பு
(உ)ள்ளாள் : உள்ளாகப் பயிலும் ஆள், உளவறிவோர், உளவாளி
(இ)ட்ட : படைத்த, கொடுத்த
 : ஆன்மா, இடபம் (ஏறு, நந்தி), முக்கியப்பொருள்

பொருள்: உடம்பைப் படைத்த ஆன்மா ஓர் உளவாளி

குறிப்பு: ஆன்மாவாகிய உயிருக்கு ரகசிய உளவாளி (துப்பறிபவன்) என்ற சிறப்புப் பெயருண்டு. அந்த ஆன்மாவானது பரமான்மாவின் ஒரு சிறு துளி என்பதனால், இவ்விடத்து ஆன்மா என்பது பரமான்மா (பரமாத்மா) என்பதைக் குறிப்பிடுவதாகக் கருதலாம்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஜூலை 6, 2022
சிந்து சமவெளி முத்திரையில் அதிசய அழிஞ்சில் மரத்தின் குறிப்பு
  • மே 23, 2022
திரு பாநாட்டான் படைத்தப் பாட்டு மங்களகரமானது
  • மே 7, 2022
போற்றுதலுக்குரிய நிலவு / வெந்தயம்