- டிசம்பர் 22, 2024
உள்ளடக்கம்
சிவ சிவ
எத்தகைய பிரச்சனையையும் எளிதில் போக்கும் சிவ மந்திரம்:
🛕 மும்மூர்த்திகளில் சிவபெருமானிடம் இருந்து மட்டுமே வரங்களை எளிதில் பெற முடியும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். எவர் ஒருவர் சிவபெருமானை மனமுருகி பிராத்தனை செய்து வழிபட்டாலும் அவரது பிரச்சனைகளை சிவபெருமான் எளிதில் போக்குவார் என்று நம்பப்படுகிறது.
🛕 அந்த வகையில் சிவபெருமானை வணங்குகையில் அவருக்குரிய மூல மந்திரம் அதை ஜபிப்பது நமது பிராத்தனைக்கு வலிமை சேர்க்கும்.
சிவ சிவ என்கிலர் தீவினை யாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே!
🛕 திருமூலர் அருளிய இந்த மந்திரமானது சிவன் மூலமந்திரமாக போற்றப்படுகிறது. நீண்டகால துன்பம் உடையவர்கள், கட்டுக்கடங்காத பண பிரச்சனை உடையவர்கள், தீராத நோய் உடையவர்கள், மன நிம்மதி இன்றி தவிப்பவர்கள் இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வர தீராத பிரச்சனைகள் யாவும் விரைவில் தீரும். தினமும் மந்திரத்தை ஜபிக்க இயலாதவர்கள் திங்கட்கிழமையில் ஜபிப்பது அவசியம்.
🛕 “சிவாய நம என்கிறவர்களுக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை” என்பது தமிழ் சொல் வழக்காகும். தமிழர்களின் முழுமுதல் தெய்வம் சிவபெருமான் ஆவார். நம்மிடம் நிறைந்திருக்கும் அனைத்து வகையான துர்க்குணங்களையும், தீய எண்ணங்களையும், செயல்களையும் போக்கி வாழ்வில் கிடைக்க வேண்டிய நியாயமான இன்பங்கள் கிடைக்கச் செய்து, முக்தி நிலையை அருளச்செய்யும் தெய்வம் சிவன் ஆவார்.
🛕 அத்தகைய சிவபெருமானை தமிழ் சித்தர்கள் அனைவருமே முழுமுதற்கடவுளாக கொண்டு வழிபடுகின்றனர். அதில் அற்புதமான தத்துவம் மற்றும் ஞான கருத்துக்கள் நிறைந்த திருமந்திரம் எனும் நூலை இயற்றிய திருமூலர் தமிழ்மொழியில் சிவபெருமானுக்குரிய மூல மந்திரத்தை இயற்றியுள்ளார்.
🛕 சிவபெருமானை அனைத்து தினங்களிலும் வழிபடலாம் என்றாலும் சிவனுக்கு மிகவும் விருப்பமான திங்கட்கிழமைகள், மாத சிவராத்திரி, பிரதோஷ தினங்கள் போன்ற நாட்களில் காலை முதல் மாலை வரை சிவ மூலமந்திரத்தை உங்களால் எத்தனை எண்ணிக்கையில் துதித்து வழிபட முடிந்தாலும் அந்த அளவு சிவனின் முழுமையான அருள் உங்களுக்கு கிடைக்கப் பெறும்.
Also, read
ஓம் நமச்சிவாய என்றிருப்பின் அபாயம் ஒரு நாளும் இல்லை ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க
சிவனின் திருமந்திரங்கள் அனைத்தும் சிவனுக்கே உரியது ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க