×
Saturday 28th of December 2024

ஸ்ரீ காயத்ரி மந்திரம்


Gayatri Mantra in Tamil

🛕 ஸ்ரீ காயத்ரி மந்திரமானது கிருஷ்ண யசுர் வேதத்திலும், சுக்கில யசுர் வேதத்திலும், சாம வேதத்திலும், பிருஹதாரண்யக உபநிடதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.

🛕 “வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரீயாக இருக்கிறேன்” என்று பகவத்கீதையில் கிருஷ்ணபகவான் கூறுகிறார்.

🛕 காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம். வேத மந்திரங்களின் சாரமாக விளங்குவது காயத்ரி மந்திரம். மந்திரங்களிலெல்லாம் ஒப்புயர்வற்றது காயத்ரியே.

🛕 காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும், சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலையில் சந்தியாவந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.

ஸ்ரீ காயத்ரி மந்திரம்

ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்

Gayatri Mantra Meaning in Tamil

🛕 காயத்ரி மந்திரம் என்பது சூரிய வழிபாட்டைத்தான் குறிக்கும். “யார் (சூரிய பகவான்) நம் அறிவைத் தூண்டுகிறாரோ, அந்தக் கடவுளின் மேலான ஒளியை தியானிப்போமாக” என்பது இதன் பொருள்.

🛕 நிமிர்ந்து உட்கார்ந்து, காலையில் கிழக்கு முகமாகவும், நண்பகலில் வடக்கு அல்லது கிழக்கு முகமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும் நோக்கி இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

ஸ்ரீ காயத்ரி மந்திரம் உச்சரிக்கும் முறை

🛕 இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களும் காயத்ரி மந்திரதில் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும், இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.

Gayatri Mantra in Tamil for All Gods

Vinayagar Gayatri Mantra in Tamil

வினாயகர் காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி : ப்ரசோதயாத்

Sri Subramanya Gayatri Mantra in Tamil

ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக: ப்ரசோதயாத்

Sri Rudra Gayatri Mantra in Tamil

ஸ்ரீ ருத்ரர் காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்

Sri Lakshmi Gayatri Mantra in Tamil

ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரி மந்திரம்

ஓம் மஹலக்ஷ்ம்யைச வித்மஹே
விஷ்ணு பத்ந்யைச தீமஹி
தந்நோ லக்ஷ்மி: ப்ரசோதயாத்

Sri Saraswati Gayatri Mantra in Tamil

ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி மந்திரம்

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
தந்நோ வாணி: ப்ரசோதயாத்

Sri Durga Gayatri Mantra in Tamil

ஸ்ரீ துர்க்கை காயத்ரி மந்திரம்

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமரீச தீமஹி
தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்

Sri Krishna Gayatri Mantra in Tamil

ஸ்ரீ கிருஷ்ணர் காயத்ரி மந்திரம்

ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹ
தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்

Sri Rama Gayatri Mantra in Tamil

ஸ்ரீ ராமர் காயத்ரி மந்திரம்

ஓம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம: ப்ரசோதயாத்

Sri Maha Vishnu Gayatri Mantra in Tamil

ஸ்ரீ மஹாவிஷ்ணு காயத்ரி மந்திரம்

ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்

Sri Narasimha Gayatri Mantra in Tamil

ஸ்ரீ நரசிம்மர் காயத்ரி மந்திரம்

ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரசிம்ஹப் ப்ரசோதயாத்

Sri Sastha Gayatri Mantra in Tamil

ஸ்ரீ சாஸ்தா காயத்ரி மந்திரம்

ஓம் பூத நாதாய வித்மஹே
பவ நந்தனாய தீமஹி
தந்நோ சாஸ்தா: ப்ரசோதயாத்

Sri Hanuman Gayatri Mantra in Tamil

ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி மந்திரம்

ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்

Sri Adhiseshan Gayatri Mantra in Tamil

ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி மந்திரம்

ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்

Sri Lakshmi Hayagriva Gayatri Mantra in Tamil

ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம்

ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்

Srinivasa Gayatri Mantra in Tamil

ஸ்ரீநிவாசர் காயத்ரி மந்திரம்

ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்

Sri Garuda Gayatri Mantra in Tamil

ஸ்ரீ கருட காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பட்சாய தீமஹ
தந்நோ கருட ப்ரசோதயாத்

Nandeeshwara Gayatri Mantra in Tamil

நந்தீஸ்வரர் காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்தி: ப்ரசோதயாத்

Sri Dakshinamurthy Gayatri Mantra in Tamil

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி காயத்ரி மந்திரம்

ஓம் தக்ஷிணாமூர்த்தியைச வித்மஹே
தியான ஹஸ்தாய தீமஹி
தந்நோ தீசப் ப்ரசோதயாத்

Sri Brahma Gayatri Mantra in Tamil

ஸ்ரீ பிரம்ம காயத்ரி மந்திரம்

ஓம் வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரம்ம: ப்ரசோதயாத்

Sri Kali Gayatri Mantra in Tamil

ஸ்ரீ காளி காயத்ரி மந்திரம்

ஓம் காளிகாயைச வித்மஹே
சமசான வாசின்யை தீமஹி
தந்நோ அகோர ப்ரசோதயாத்

Swarna Bhairava Gayatri Mantra in Tamil

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்ரி மந்திரம்

ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹர ப்ரமஹாத்மகாய தீமஹி
தந்நோ ஸ்வர்ணாகர்ஷ்னபைரவப் ப்ரசோதயாத்

Kala Bhairava Gayatri Mantra in Tamil

காலபைரவர் காயத்ரி மந்திரம்

ஓம் காலத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவப் ப்ரசோதயாத்

Surya Gayatri Mantra in Tamil

சூரிய காயத்ரி மந்திரம்

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹ
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

Chandra Gayatri Mantra in Tamil

சந்திர காயத்ரி மந்திரம்

ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்

Angaraka Gayatri Mantra in Tamil

அங்காரக காயத்ரி மந்திரம்

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்

Bhutan Gayatri Mantra in Tamil

புதன் காயத்ரி மந்திரம்

ஓம் கஜத் வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதப் ப்ரசோதயாத்

Guru Gayatri Mantra in Tamil

குரு காயத்ரி மந்திரம்

ஓம் விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருப் ப்ரசோதயாத்

Sukran Gayatri Mantra in Tamil

சுக்ர காயத்ரி மந்திரம்

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

Shani Gayatri Mantra in Tamil

சனி காயத்ரி மந்திரம்

ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனிப் ப்ரசோதயாத்

Rahu Gayatri Mantra in Tamil

ராகு காயத்ரி மந்திரம்

ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்

Ketu Gayatri Mantra in Tamil

கேது காயத்ரி மந்திரம்

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேதுப் ப்ரசோதயாத்

Varuna Gayatri Mantra in Tamil

வருண காயத்ரி மந்திரம்

ஓம் ஜலபிம்பாய வித்மஹி
நீல் புருஷாய தீமஹி
தன்னோ வருணப் ப்ரசோதயாத்

Sri Annapoorani Gayatri Mantra in Tamil

ஸ்ரீஅன்னபூரணி காயத்ரி மந்திரம்

ஓம் பகவத்யை வித்மஹே
மாஹேச்வர்யை தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்

Kubera Gayatri Mantra in Tamil

குபேரன் காயத்ரி மந்திரம்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

 

Also, read



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 22, 2024
மகா மிருத்யுஞ்சய மந்திரம்
  • டிசம்பர் 2, 2024
உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்
  • அக்டோபர் 23, 2024
சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக்: ஒரு முழுமையான விளக்கம்