×
Saturday 28th of December 2024

விநாயகரின் யானை முகம்


Ganesha Symbolism

பிள்ளையாரின் யானை முகம்

🛕 அனைத்து தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, பிள்ளையாருக்கு (விநாயகர்) மட்டும் எதனால் யானையின் (களிறு) முகம் வந்தது எப்படி என்று தெரியுமா? தெரியாதெனில் இங்கு தெரிந்துகொள்வோம்:

🛕 தேவலோகத்தில் கஜமுகாசுரன் என்ற அசுரன், அங்குள்ளவர்களை மிகவும் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான். அவனை யாராலும் அழிக்க முடியாதபடி பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். அந்த வரம் “ஆண், பெண் சம்பந்தமில்லா” பிறந்த ஒருவனாலேயே தன்னை அழிக்க முடியும்! வரப்போகும் இன்னல்களை அறியாமல் பிரம்மாவும் கேட்ட வரம் அளித்தார்.

🛕 ஆண், பெண் சம்பந்தமில்லாமல், குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு. அவன் நினைத்தபடியே யாருமே உலகில் பிறக்கவில்லை. அதனால் அவனுக்கு எல்லோரையும் தனக்கு அடிமையாகிவிட நினைத்தான். எனவே, சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான். தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்து பிரம்மாவிடம் நடப்பதைக் கூறினார். ஆனால் அவனைப் படைத்த பிரம்மாவோ படைத்தல் மட்டுமே என்னால் முடியும்; அழித்தல் சிவபெருமானின் செயல் என்று கூறி, அனைவரும் சிவனிடம் சென்றனர்.

🛕 எல்லாவற்றையும் அறிந்த சிவனோ, பிரம்மாவின் அருளிய வரத்தின் காரணத்தால் என்னாலும் கஜமுகாசுரனை அழிக்க முடியாதென்றார். இருந்தும் அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்று. நம் மீது கொண்ட கருணையால், திருவிளையாடல் ஒன்றை பார்வதிதேவியின் மூலமாக நிகழ்த்தினார் சிவபெருமான்.

🛕 எல்லோருடைய துன்பத்தையும் தீர்க்க முடிவு செய்த பார்வதிதேவி, தன் திருமேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து ஒரு உருண்டையாக்கி; உடல் உறுப்புக்களையும் வடிவமைத்தாள். பின் அந்த உடலுக்குக்கு உயிரையும் கொடுத்து, “பிள்ளையார்” என பெயர் சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் பார்வதிதேவியின் அந்தப்புர காவலனாக இருந்தான்.

Elephant Face of Vinayagar

🛕 இந்த சமயத்தில் சிவபெருமான் அந்தப்புரத்திற்கு வந்தார். சிவனை யாரென்றறியாத சிறுவன் (விநாயகர்), பார்வதிதேவி குளித்துக் கொண்டிருப்பதால், உள்ளே போகக் கூடாது எனக்கூறி எம்பெருமானைத் தடுக்க, “என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா?’ எனக் கேட்டு, தன்னிடமிருந்த வாளாயுதத்தால் அந்தப் பிள்ளையின் தலையை வெட்டிவிட்டார்.

ganesha-elephant-face

🛕 அதே நேரத்தில் பார்வதிதேவியும் அங்கு வந்து, தன் மணாளனைக் (சிவன்) கண்டித்தாள். இவன் நம் பிள்ளை; இவனுக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும் என்றாள் வேண்டினாள். இந்த சமயத்தில், அந்த இடத்தில் வடக்கு திசை நோக்கி ஒரு யானை (களிறு) படுத்திருந்தது. வடக்குதிசை நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆபத்து என்பது சாஸ்திரம். இதைப் பார்த்த சிவன், உலக நலனுக்கு ஆபத்து விளைவித்த யானையின் தலையை துண்டித்து, பிள்ளையாருக்குப் பொருத்தி, உயிர்ப் பெறச் செய்தார். ஆண், பெண் கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை (பிள்ளையார்), கஜமுகாசுரனைப் போரிட்டு வென்று சர்வலோகத்தையும் பாதுகாத்தான்.

🛕 யானையின் தலையைப் பிள்ளையாருக்குக் கொடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குக் கூறப்படுகின்றது:

🛕 மனிதனுக்கு வாய் மற்றும் உதடு தெளிவாக வெளியே தெரிகிறது. ஏனைய மிருகங்களுக்கும் கூட அப்படித்தான் இருக்கிறது. ஆனால், யானையின் (களிறு) வாய் வெளியே தெரியாதபடி தும்பிக்கையால் மூடப்பட்டிருக்கிறது.இதற்கு அர்த்தம் தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் ஆகும். ஆகவே மாதர்களாகிய நாம் அனைவரும் தேவையற்ற வீண் பேச்சுகளைத் தவிர்ப்போம்!

Also, read



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஆகஸ்ட் 8, 2024
ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் அற்புதங்கள்
  • ஜூலை 14, 2024
ஸ்ரீ கணேச புராணத்தின் சாராம்சம்
  • ஜூலை 14, 2024
குரு ராகவேந்திர சுவாமி பிருந்தாவன தீர்த்த யாத்திரை