×
Wednesday 27th of November 2024

பரங்கிக்காய் பால் கூட்டு செய்வது எப்படி?


உள்ளடக்கம்

Parangikai Paal Kootu Recipe in Tamil

பரங்கிகாயில் சாம்பார், கூட்டு, பொரியல், சூப், குழம்பு என செய்யலாம்.

தேவையான பொருட்கள்

பரங்கிக்காய் துண்டுகள் – 2 கப்
அரிசி மாவு – 2 டீஸ்பூன்
தேங்காய் துறுவல் – 2 டேபிள்ஸ்பூன்
நாட்டு சர்க்கரை –  1டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு

தாளிக்க‌

எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
காய்ந்த மிளகாய் – 2

செய்முறை

  • தேங்காய் துறுவலை மைய அரைக்கவும். அரிசி மாவினை சிறிது நீரில் கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும்.
  • பாத்திரத்தில் பரங்கிகாய் துண்டுகளை போட்டு முழ்குமளவு நீர் ஊற்றி வேகவைக்கவும்.

  • காய் வெந்ததும் உப்பு, நாட்டு சர்க்கரை மற்றும் கரைத்து வைத்த அரிசி மாவினை சேர்த்து கிளறவும்.

  • பின் தேங்காய் விழுதினை சேர்த்து கிளறி, பின் 2 நிமிடங்களில் இறக்கவும்.

  • பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.

பின் குறிப்பு

  • கார குழம்புடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • மே 18, 2022
குல்கந்து செய்வது எப்படி?
  • மே 15, 2022
ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)
  • ஏப்ரல் 21, 2022
கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?