×
Saturday 28th of December 2024

முட்டையில்லாத அச்சு முறுக்கு செய்வது எப்படி?


Achu Murukku Recipe in Tamil Without Egg

அச்சு முறுக்கு கேரளாவில் மிக பிரபலமானது. சிறிது இனிப்பு சுவையுடன் இருக்கும். சிறுவயது முதலே எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அம்மா இதனை முட்டையில்லாமலும், மைதா சேர்க்காமலும் செய்வாங்க. ஒரு முறை ரெடிமேட் அரிசிமாவில் மைதா, முட்டையில்லாமால் செய்த போது சரியாக வரவில்லை, சுவையும் பிடிக்கவில்லை.

இந்த முறை செய்யும் போது அரிசிமாவை வீட்டிலேயே செய்து, முறுக்கு செய்ததில் நான் எதிர்பார்த்த சுவையில் இருந்தது.

இதற்கு அரிசி மாவு ஈரபதத்துடன் இருக்கவேண்டும்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 கப்
பொடித்த சர்க்கரை – 1/4 கப்
2 ஆம் தேங்காய் பால் – 1/4 கப்
உப்பு – 1 சிட்டிகை
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
கறுப்பு எள் – 1/2 டீஸ்பூன்
நீர் – 1/2 கப் + 1/8 கப்
எண்ணெய் – பொரிக்க

Eggless Achu Murukku Recipe in Tamil

செய்முறை

அரிசியை கழுவி 30 நிமிடங்கள் ஊறவைத்த பின் நீரினை வடிக்கவும். பின் துணியில் ஈரம் போக உலர்த்தவும்.

மிகஸியில் மாவினை நைசாக பொடித்து சலிக்கவும்.

பாத்திரத்தில் சலித்த மாவு மற்றும் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.

மாவின் பதம் மிக முக்கியம், கெட்டியாகவோ அல்லது நீர்க்கவோ இருக்ககூடாது.

கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைக்கவும். அதனுடன் அச்சினையும் சேர்த்து நன்கு காய வைக்கவும்.

அச்சு காய்ந்த பின் மாவினுள் 1/2 பகுதி வரை முழ்கி எடுத்து உடனே காயும் எண்ணெயில் வைக்கவும்.

அச்சினை லேசாக ஆட்டினால் முறுக்கு தனியாக வந்துவிடும்.

மறுபடியும் அச்சினை காயும் எண்ணெயிலேயே போட்டு வைக்கவும்.இப்போழுது முறுக்கினை திருப்பி விட்டு 1 நிமிடங்களில் எடுத்து விடவும்

எண்ணெயிலிருந்து முறுக்கு எடுக்கும் போது மிருதுவாக இருக்கும், ஆறியதும் மொறுமொறுப்பாக இருக்கும்.

நன்கு ஆறியதும் காற்று புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.

பின் குறிப்பு

  • இதற்கு ஈர அரிசி மாவினையே சேர்க்கவும். அரிசி மாவினை வறுக்க தேவையில்லை. தேங்காய் பால் 2 ஆம் பாலினை சேர்க்கவும்.
  • அதிக சர்க்கரை/கெட்டி தேங்காய் பால் சேர்த்து முறுக்கு சிவந்துவிடும்.
  • அச்சினை மாவினுல் வைக்கும் போது முழுதாக நனைத்து சுட்டால் முறுக்கு எடுக்க வராது.
  • அச்சி நன்றாக காய்ந்தால் தான் மாவு ஒட்டும்.
  • புது அச்சியாக இருந்தால் செய்வதற்கு 1 வாரம் முன்பு எண்ணெயில் அச்சினை ஊறவைத்து செய்தால் சுடுவதற்கு எளிது.
  • மாவு பதம் கெட்டியாக இருந்தால் முறுக்கு கடினமாகவும், நீர்க்க இருந்தால் அச்சினுள் மாவும் ஒட்டாது.
  • ஒவ்வொரு முறையும் அச்சினை நன்றாக காயவைத்த பின் மாவினுள் நனைத்து முறுக்கு சுடவும், அதேபோல் ஒவ்வொரு முறையும் மாவினை நன்கு கலக்கியபின் அச்சினை மாவில் வைக்கவும்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • மே 18, 2022
குல்கந்து செய்வது எப்படி?
  • மே 15, 2022
ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)
  • ஏப்ரல் 21, 2022
கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?