×
Friday 27th of December 2024

பிரதோஷ வழிபாடும் அதன் பலன்களும்


Pradosha Valipadu

பிரதோஷ வழிபாடு

ஆலகால விஷத்தை திரு ஆலவாயன் (சிவன்) உண்ட தருணமே பிரதோஷம். இது மாலை 04:30 மணியிலிருந்து 06:00 மணி வரை உள்ள தருணம். பிரதோஷம் = பிரதானம் + தோஷம். அதாவது பிரதான தோஷங்களை நீக்குவது என்பது பொருள்.

Types of Pradosham and Timings in Tamil

இந்த பிரதோஷம் 20 வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அவை,

  1. தினசரி பிரதோஷம்
  2. பட்சம் பிரதோஷம்
  3. மாசப் பிரதோஷம்
  4. நச்சத்திரப் பிரதோஷம்
  5. பூரண பிரதோஷம்
  6. திவ்யப் பிரதோஷம்
  7. தீபப் பிரதோஷம்
  8. அபயப் பிரதோஷம்
  9. மஹா பிரதோஷம்
  10. உத்தம மஹா பிரதோஷம்
  11. ஏகாட்சர பிரதோஷம்
  12. அர்த்தநாரி பிரதோஷம்
  13. திரிகரண பிரதோஷம்
  14. பிரம்ம பிரதோஷம்
  15. அட்சர பிரதோஷம்
  16. கந்த பிரதோஷம்
  17. சட்ஜ பிரபா பிரதோஷம்
  18. அஷ்டதிக் பிரதோஷம்
  19. நவக்கிரக பிரதோஷம்
  20. துத்த பிரதோஷம்.

தினசரி பிரதோஷம்

தினமும் காலையும் இரவும் சந்திக்கும் நேரம், அதாவது மாலை 4:30 – 6:00 மணி வரை உள்ள நேரம் தினசரி பிரதோஷ காலமாகும்.

பட்சம் பிரதோஷம்

அமாவாசைக்கு பிறகு சுக்லபட்ச வளர்பிறை காலத்தில் வருகின்ற திரியோதசி திதியே பட்சப் பிரதோஷமாகும்.

மாசப் பிரதோஷம்

பவுர்ணமிக்கு பிறகு கிருஷ்ணபட்ச தேய்பிறை காலத்தில் வருகின்ற திரியோதசி திதியே மாதப் பிரதோஷமாகும்.

நட்சத்திரப் பிரதோஷம்

திரயோதசி திதியில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை, பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷமாகும்.

பூரண பிரதோஷம்

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராமல் திரயோதசி திதி மட்டும் வந்தால் அது பூரண பிரதோஷமாகும்

திவ்யப் பிரதோஷம்

பிரதோஷ தினத்தன்று துவாதசி திதியும், திரயோதசி திதியும் சேர்ந்து வந்தால் அல்லது திரயோதசி திதியும், சதுர்த்தி திதியும் சேர்ந்து வந்தால் அது திவ்யப் பிரதோஷமாகும்.

தீபப் பிரதோஷம்

பிரதோஷ தினத்தில் சிவ ஆலயத்தில், தீப தானங்கள் அதாவது தீபம் ஏற்றி வழிபட்டால் அது பிரதோஷமாகும்.

சப்தரிஷி பிரதோஷம்

வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில், வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில், பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசிப்பதே் சப்தரிஷி பிரதோஷமாகும்.

மகா பிரதோஷம்

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும்.

உத்தம மகா பிரதோஷம்

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷமாகும்.

ஏகாட்சர பிரதோஷம்

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர்.

அர்த்தநாரி பிரதோஷம்

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர்.

திரிகரண பிரதோஷம்

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம்.

பிரம்மப் பிரதோஷம்

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம்.

அட்சரப் பிரதோஷம்

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம்..

கந்தப் பிரதோஷம்

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம்.

சட்ஜ பிரபா பிரதோஷம்

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, “சட்ஜ பிரபா பிரதோஷம்”.

அஷ்ட திக் பிரதோஷம்

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷம் வந்தால் அது, அஷ்ட திக் பிரதோஷம்.

நவக்கிரகப் பிரதோஷம்

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம்.

துத்தப் பிரதோஷம்

ஒரு வருடத்தில் பத்து மகா பிரதோஷம் வந்தால், அது துத்தப் பிரதோஷம்.

 

Read also,



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 22, 2024
ஸ்ரீ மாதா அறக்கட்டளை
  • டிசம்பர் 21, 2024
தில்லையம்பூர் முதியோர் இல்லம், கும்பகோணம்
  • டிசம்பர் 10, 2024
புனித யாத்திரை பாடல்கள்