×
Sunday 29th of December 2024

மேலுலகம் என்னும் வீடுபேறு


உள்ளடக்கம்

Mel Ulagam Enum Veedu Peru

எச்-1411எ என்னும் அடையாள எண் உடையதும் 3 எழுத்துக்கள் கீறப்பட்டுள்ளதுமான பானை ஓடு ஒன்று சிந்து சமவெளி நாகரிகப் பகுதியில் ஒன்றான அரப்பாவில் மேற்கொண்ட ஒரு தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் நிழல்படம் சி.எஸ்.ஐ.எஸ் தொகுப்பு 3.1, பக்கம் 186-லும், மற்றக் குறிப்புக்கள் பக்கம் 428-லும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் உள்ள 3 கீறல் எழுத்துக்களில் 2-ஆவது எழுத்து 3-ஆவது எழுத்திற்கு உள்ளே கீறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில் அமைந்துள்ள சாணூர் என்னும் ஊரில் தமிழகத் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட உடைந்த பானை ஓடு ஒன்றில் சிந்து சமவெளி முத்திரைகளில் காணப்படும் 3 எழுத்துக்கள் கீறப்பட்டுள்ளன. இந்த 3 எழுத்துக்களில் 3-ஆவது எழுத்தின் புள்ளியின் வடிவம் நீள்வட்டமாக உள்ளே கீறப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பானை ஓடு சென்னை, தமிழகத் தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இவற்றைப் பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ள செய்தியாவது,

இவ்விரு பானை ஓடுகளில் கீறப்பட்டுள்ள மூன்று எழுத்துக்கள் இடமிருந்து வலமாக,  ப +  ர + ம். பரம் என படிக்கப்படுகின்றன.

பரம் என்னும் சொல்லில் உள்ள ‘ப’ என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ர’ என்பது 12-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ம்’ என்பது 10-ஆவது மெய் எழுத்து.

பரம் : மேலானது, அன்பு, மேலுலகம், வீடுபேறு, பிறவி நீக்கம், நிறைவு, கடவுள்

பொருள்: மேலுலகம் என்னும் வீடுபேறு

மேற்கண்ட சாணூரில் தமிழகத் தொல்லியல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாய்வுகளில், அதிக அளவிலான பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரம் என்ற தமிழ்ச் சொல்  மேலுலகம் என்னும் வீடுபேறு அல்லது பரலோகம் அடைந்ததைக் குறிப்பிடுவதாகக் கருதலாம்.

மேலும் பழந்தமிழ் எழுத்துக்களை இடமிருந்து வலமாக எழுதும் மரபு சிந்து சமவெளியிலும், பழந்தமிழகத்திலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது என்பதும், பழந்தமிழகத்திற்கும், சிந்து சமவெளிக்கும் இடையிலான நாகரிகத் தொடர்பு இருந்துள்ளது என்பதும்  தெரியவருவதாகக் கருதலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஜூலை 6, 2022
சிந்து சமவெளி முத்திரையில் அதிசய அழிஞ்சில் மரத்தின் குறிப்பு
  • மே 23, 2022
திரு பாநாட்டான் படைத்தப் பாட்டு மங்களகரமானது
  • மே 7, 2022
போற்றுதலுக்குரிய நிலவு / வெந்தயம்