×
Saturday 28th of December 2024

ஸ்ரீ அரைக்காசு அம்மன் 108 போற்றி (புதுக்கோட்டை பிரகதாம்பாள்)


Araikasu Amman History in Tamil

ஸ்ரீ அரைக்காசு அம்மன்

சென்னை வண்டலூர் மிருகக்காட்சிசாலைக்கு ஒட்டியப்படி உள்ளது திருப்போரூர், கேளம்பாக்கம் செல்லும் சாலை. வண்டலூரிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ரத்னமங்களம் என்கிற அழகிய சிற்றூர். இத்திருத்தலத்தில் அமைந்துள்ளது அரைகாசு அம்மன். இக்கோவிலில் அருள்மிகு அரைகாசு அம்மனுக்கான சன்னதி ஒன்றும் உண்டு.

Araikasu Amman 108 Potri in Tamil

ஸ்ரீ அரைக்காசு அம்மன் 108 போற்றி

1. ஓம் அரைக்காசு அம்மனே போற்றி
2. ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
3. ஓம் அருள்தரும் நாயகியே போற்றி
4. ஓம் அருள்தனை கொடுத்திடுவாய் போற்றி
5. ஓம் அரைகாசில் தோன்றினாய் போற்றி
6. ஓம் அன்பிற்கினியவளே போற்றி
7. ஓம் அதிர்ஷ்ட தேவியே போற்றி
8. ஓம் அலங்கார நாயகியே போற்ற
9. ஓம் அற்புத தாயே போற்றி
10. ஓம் அற்பு அழகே போற்றி
11. ஓம் அபயவரம் அளிப்பாய் போற்றி
12. ஓம் அறிவுடை தேவியே போற்றி
13. ஓம் ஆனந்தம் தருவாய் போற்றி
14. ஓம் ஆடியில் உதித்தவளே போற்றி
15. ஓம் வெல்லப்பிரியையே போற்றி
16. ஓம் சக்தி சொரூபமே போற்றி
17. ஓம் சாந்த சொரூபமே போற்றி
18. ஓம் செளபாக்கிம் அளிப்பவளே போற்றி
19. ஓம் சமயத்தில் அருள்பவளே போற்றி
20. ஓம் சத்திய சொரூபமே போற்றி
21. ஓம் சுந்தர ரூபிணியே போற்றி
22. ஓம் சிந்தையில் உறைபவளே போற்றி
23. ஓம் சிந்திப்போருக்கு அருள்வாய் போற்றி
24. ஓம் சங்கடங்களை களைவாய் போற்றி
25. ஓம் சர்வ஧ஸ்வரியே போற்றி
26. ஓம் சர்வ வரம் தருவாய் போற்றி
27. ஓம் சந்தோஷ நாயகியே போற்றி
28. ஓம் செம்மையான வாழ்வு அளிப்பவளே போற்றி
29. ஓம் செவ்வரளி பிரியையே போற்றி
30. ஓம் கேட்ட வரம் அளிப்பவளே போற்றி
31. ஓம் கேட்டதனை நீக்கிடுவாய் போற்றி
32. ஓம் காரிய சித்தி தருபவளே போற்றி
33. ஓம் ரத்னமங்கலத்தில் அமர்ந்தவளே போற்றி
34. ஓம் மகாமேருவில் இருப்பவளே போற்றி
35. ஓம் பிரசன்ன நாயகியே போற்றி
36. ஓம் பெளர்ணமி நாயகியே போற்றி
37. ஓம் பொருள்தனை கொடுப்பவேள போற்றி
38. ஓம் ஞாபக சக்தி தருபவளே போற்றி
39. ஓம் ஓம்கார சக்தியே போற்றி
40. ஓம் வெல்லமாலை அணிபவளே போற்றி
41, ஓம் வெல்லத்தில் குடி கொண்டாய் போற்றி
42. ஓம் தேவி பிரியையே போற்றி
43. ஓம் திருவிளக்கில் உறைவாய் போற்றி
44. ஓம் தீயவை அகற்றுவாய் போற்றி
45. ஓம் தூயமனம் கொண்டவளே போற்றி
46. ஓம் எளியோனுக்கும் அருள்பவளே போற்றி
47. ஓம் நவமணி அரசியே போற்றி
48. ஓம் இன்பம் அளிப்பவளே போற்றி
49. ஓம் தூயமனம் படைத்தவளே போற்றி
50. ஓம் மங்கல வாரப் பிரியையே போற்றி
51. ஓம் உயர்வை தருவாய் போற்றி
52. ஓம் உலகெல்லாம் இருப்பாய் போற்றி
53. ஓம் உயிருக்கு உயிரானாய் போற்றி
54. ஓம் உயர்மணியே போற்றி
55. ஓம் உயர்வான வாழ்வு அளிப்பாய் போற்றி
56. ஓம் உடன் அருள்வாய் போற்றி
57. ஓம் சுகம் தருவாய் போற்றி
58. ஓம் வளமெல்லாம் அளிப்பாய் போற்றி
59. ஓம் வரம்பல தருபவளே போற்றி
60. ஓம் வாழ்வளிக்கும் உமையே போற்றி
61. ஓம் மங்களம் அளிப்பவளே போற்றி
62. ஓம் மாங்கல்யத்தில் உறைவாய் போற்றி
63. ஓம் விஜயம் தரும் வித்தகியே போற்றி
64. ஓம் கிழக்கில் அமர்ந்தவளே போற்றி
65. ஓம் யெளவன நாயகியே போற்றி
66. ஓம் வல்லமை பெற்றவளே போற்றி
67. ஓம் ஞான விளக்கே போற்றி
68. ஓம் பாவமெல்லாம் ஒழிப்பாய் போற்றி
69. ஓம் துயர் துடைப்பாய் போற்றி
70. ஓம் துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
71. ஓம் மன்னர் போற்றும் நாயகியே போற்றி
72. ஓம் இன்பத்தின் இடமே போற்றி
73. ஓம் நினைத்ததை நடத்திடுவாய் போற்றி
74. ஓம் நீங்காத இன்பம் தந்திடுவாய் போற்றி
75. ஓம் மகிழ்வான வாழ்வளிப்பாய் போற்றி
76. ஓம் மாங்கல் தாரிணியே போற்றி
77. ஓம் கிருபை தருவாய் போற்றி
78. ஓம் யோக நாயகியே போற்றி
79. ஓம் மோகன நாயகியே போற்றி
80. ஓம் மனிதருள் இருப்பாய் போற்றி
81. ஓம் மாதர்க்கு அரசியே போற்றி
82. ஓம் மாணிக்க நாயகியே போற்றி
83. ஓம் எண்ணம் வாழ்வாய் போற்றி
84. ஓம் மந்திர பொருளே போற்றி
85. ஓம் மரகத வடிவே போற்றி
86. ஓம் மாட்சி பொருளே போற்றி
87. ஓம் பொற்புடை நாயகியே போற்றி
88. ஓம் ஏழு உலகம் காப்பாய் போற்றி
89. ஓம் புவன நாயகியே போற்றி
90. ஓம் நலந்தரும் நாயகியே போற்றி
91. ஓம் சித்திரக் கொடியே போற்றி
92. ஓம் வெல்லும் திறமை உடையவளே போற்றி
93. ஓம் வியப்புடை நாயகியே போற்றி
94. ஓம் பக்குவம் தருவாய் போற்றி
95. ஓம் பண்பு தருவாய் போற்றி
96. ஓம் காக்கும் பொருளே போற்றி
97. ஓம் கருணை நிலவே போற்றி
98. ஓம் பொற்புடை சரணம் போற்றி
99. ஓம் பிறை வடிவே போற்றி
100. ஓம் கவலைகள் தீர்ப்பாய் போற்றி
101. ஓம் தயாபரியே போற்றி
102. ஓம் தைரியம் அளிப்பாய் போற்றி
103. ஓம் ஜன்னம் தருவாய் போற்றி
104. ஓம் மரணம் தடுப்பாய் போற்றி
105. ஓம் பாசாங்குசம் கொண்டவளே போற்றி
106. ஓம் தீபச் சுடரே போற்றி
107. ஓம் தீப நாயகியே போற்றி
108. ஓம் பிரகாதாம்பாளே போற்றி போற்றி!

Araikasu Amman Temple Pudukkottai

அரைகாசு அம்மன் என்றவுடனே நம் நினைவில் சட்டென்று வருவது புதுக்கோட்டை அருகே உள்ள திருகோகர்ணம் பிரகதாம்பாளே! இவரைத்தான் அரைக்காசு அம்மனாக பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

முன்பொரு காலத்தில் புதுக்கோட்டையை ஆண்ட ராஜாக்கள் தங்களின் நாணயங்களில் அம்மனின் உருவத்தை பதிவு செய்து வைத்திருப்பார்களாம். அப்படி பதிவு செய்த காசின் வடிவம் அரைவட்ட வடிவமாகும். இதன் காரணமாகவே புதுக்கோட்டை பிரகதாம்பாளை அரைக்காசு அம்மன் என்ற அழைக்க காரணமானார் என்று சொல்லப்படுகிறது.

ஏதாவது ஒரு பொருளை எங்கேயாவது வைத்துவிட்டு தேடும் பழக்கம் நம்மில் பலரிடம் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். வீடு முழுவதும் தேடியும் தொலைத்த பொருள் அகப்படாமல் போனால் சோர்ந்து போவதும் மனம் வருத்தம் அடைவதும் உண்டு. அப்படிப்பட்ட சமயங்களில் திருகோகர்ணம் பிரகதாம்பாள் என்ற அரைகாசு அம்மனை மனதில் நிறுத்தி உருகி வேண்டினால் தொலைந்த பொருள் திரும்ப கிடைக்கும் என்று ஐதீகமும் நம்பிக்கையும் பக்தர்களிடையே நிலவுகிறது. அம்மனை மனதில் நிறுத்தி வேண்டி பலன் அடைந்தவர்களும் ஏராளம்.

இந்நிலையில் புதுக்கோட்டை அரைக்காசு அம்மனுக்காக சென்னையில், ஸ்ரீ லட்சுமி குபேரர் கோவிலில் பீடம் ஒன்றினை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைத்திருக்கிக்கின்றனர் ரத்னமங்கள மக்கள். குபேரர் கோவிலில் அரைகாசு அம்மனுக்கான பீடம் அமைந்திருப்பதற்கு ஒரு சுவையான கதையும் உண்டு.

கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் குபேரரின் திருக்கல்யாண உற்சவம் நடைப்பெற்றது. அன்று மகாலட்சுமி டாலர் பதித்த தங்க செயின் ஒன்று காணாமல் போனதையடுத்த ஊர் மக்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர். எங்கு தேடியும் செயின் கிடைக்கவில்லை. அப்போது இவ்வூரைச் சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை அரைக்காசு அம்மனை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்தனர். அவர்கள் பிரார்த்தனை செய்த சிறிது நேரத்திற்குள்ளாகவே காணாமல் போன நகை, கூட்டிய குப்பையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அன்று அதே நேரத்தில் சிலை வடிவமைக்கும் ஸ்தபதியும் ஸ்ரீலட்சுமிகுபேரர் கோவிலுக்கு வர, இதனை தெய்வ அருளாகவே நினைத்து உடடினடியாக அரைக்காசு அம்மனுக்கான சிலை வடிவமைப்பு தொடங்கப்பட்டது. இரவு, பகலாக சிலை வடிவமைக்கப்பட்டு தண்ணீர், தான்யம், பொன், பொருள் வாசத்தில் வைக்கப்பட்டு கடந்த 2004 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 17ம் தேதி அரைக்காசு அம்மனுக்கு முறைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் விசேஷம் என்னவென்றால் அரைக்காசு அம்மன் சிலையும், பீடத்தின் கட்டிடமும் வெறும் 13 நாட்களிலே கட்டிமுடிக்கப்பட்டதுதான் என்றும், இத்தனை வேகத்தில் வடிவமைத்ததற்கு அம்மனின் அருளே முக்கிய காரணம் என்று கோவில் நிர்வாகத்தினர் அம்மனின் அருளை சிலாகித்து கூறுகின்றனர்.

அரைக்காசு அம்மனின் சிறப்புஞாபகமறதியாக எந்த பொருளை வைத்துவிட்டு தேடும் பொழுதும் தொலைந்து போன பொருட்கள் கிடைக்கவும் அரைக்காசு அம்மனை நினைத்து பிரார்த்தனை செய்துவிட்டு தேடினால் தொலைந்த பொருள் உடனடியாக கிடைக்கும். அப்படி பொருள் கிடைத்த உடன் அவரவர் வீட்டிலேயே வெல்லத்தை பிள்ளையார்போல் பிடித்து வைத்து அதை அம்மனாக நினைத்து பிரார்த்தனையை நிறைவேற்றி கொள்ளலாம் என்பது சிறப்பு.

பிறகு பிள்ளையார் பிடித்த வெல்லத்தை பிரசாதமாக அனைவரும் உட்கொள்ளலாம். இதுமட்டுமல்ல, களவு போன பொருட்கள் கிடைக்கவும் கொடுத்த பணம் திரும்பி வராமல் போனாலும், தங்களுடைய சொத்து தங்கள் கைக்கு வரவும் அரைக்காசு அம்மனை நினைத்து வழிப்பட்டால் நிச்சயம் அவர்களது பிரார்த்தனை நிறைவேறும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. பிராத்தனை கைக்கூடினால் அரைக்காசு அம்மனுக்கு வெல்லத்தால் பொங்கல் இட்டு நிவேதினம் செலுத்தலாம்.

Araikasu Amman Mantra in Tamil

ஸ்ரீ பிரகதாம்பாள் எனும் அரைக்காசு அம்மன் 108 மலர் வழிபாடு

அன்பின் உருவாம் பிரகதி போற்றி
நின்திரு மலரடி பணிந்தேன் போற்றி
நாவளர் நற்றமிழ் நங்காய் போற்றி
தூமலர் தூவித் துதித்தேன் போற்றி!.. {4}

கரிமா முகனைப் பயந்தாய் போற்றி
அரிபிர மாதியர்க் கரியாய் போற்றி
இளையவன் கந்தனை ஈந்தாய் போற்றி
விளைநலம் எங்கும் விதிப்பாய் போற்றி!..{8}

சுரும்பார் குழலுமை கௌரி போற்றி
வருந்தா வகையெனக் கருள்வாய் போற்றி
மங்கல நாயகி மாமணி போற்றி
எங்கும் நிறைந்திடும் இறைவி போற்றி!..{12}

யாழ்நிகர் மொழியாய் யாமளை போற்றி
சூழ்வினை தீர்க்கும் சூலினி போற்றி
பல்வளை நாயகி பார்ப்பதி போற்றி
நல்வழி அருளும் நாயகி போற்றி!..{16}

போகம் ஆர்த்த பொற்கொடி போற்றி
பாகம் பிரியாய் பராபரை போற்றி
ஐயாற மர்ந்த அறமே போற்றி
ஆனைக் காவின் அம்பிகை போற்றி!..{20}

உலகுயிர் வளர்க்கும் உமையே போற்றி
அலகில் புகழ்நிறை அம்பிகை போற்றி
சிவகாமி எனும் செல்வி போற்றி
நவமா மணியே நாரணி போற்றி!..{24}

கத்துங் கடல்தரு முத்தே போற்றி
நத்தும் நல்லவர் நட்பே போற்றி
கற்றவர்க் கின்பக் கதியே போற்றி
உற்றவர்க் குகந்த நிதியே போற்றி!..{28}

அற்றவர்க்கு ஆரமுது ஆனாய் போற்றி
செற்றவர் செருக்கு சிதைப்பாய் போற்றி
செண்டாடும் விடைச் சிவையே போற்றி
உண்ணா முலையெம் அன்னாய் போற்றி!..{32}

வடிவுடை நங்காய் வாழ்வே போற்றி
கொடியிடைக் கோமள வல்லி போற்றி
மங்கலம் அருளும் மங்கலி போற்றி
சஞ்சலம் தீர்த்திடும் சங்கரி போற்றி!..{36}

பாழ்மனம் பதைக்க எழுவாய் போற்றி
சூழ்பகை முடித்துத் தருவாய் போற்றி
யாழ்நகர் வளமுற வருவாய் போற்றி
யாழ்வளர் வளரென அருள்வாய் போற்றி!..{40}

கடம்பவ னத்துறை கயற்கண் போற்றி
கடவூர் வளரும் கற்பகம் போற்றி
அபிராமி எனும் அமுதே போற்றி
மயிலா புரியில் மயிலே போற்றி!..{44}

சிவகதி காட்டும் சுந்தரி போற்றி
பரகதி அருளும் தற்பரை போற்றி
தையல் நாயகித் தாயே போற்றி
வையம் காத்திட வருவாய் போற்றி!..{48}

இமவான் பெற்ற இளங்கிளி போற்றி!..
மலையத் துவசன் மகளே போற்றி
முப்புரம் எரித்த ஏந்திழை போற்றி
முத்தமிழ் வடிவே முதல்வி போற்றி!..{52}

ஒளிக்குள் ஒளியாய் ஒளிர்வாய் போற்றி
வெளிக்குள் வெளியாய் மிளிர்வாய் போற்றி
மண்முதல் ஐம்பெரும் வளமே போற்றி
கண்முதல் களிக்கும் நலமே போற்றி!..{56}

பஞ்சமி பைரவி ரஞ்சனி போற்றி
நஞ்சுமிழ் நாக பூஷணி போற்றி
சும்பநி சும்ப சூதனி போற்றி
சண்டன் முண்ட மர்த்தனி போற்றி!..{60}

சிம்ம வாகினி ஜனனி போற்றி
மகிஷ மர்த்தனி துர்கா போற்றி
நீலி பயங்கரி நின்மலி போற்றி
தாரக மர்த்தனி காளி போற்றி!..{64}

ஆரணி பூரணி காரணி போற்றி
மாலினி சூலினி மதாங்கினி போற்றி
சூளா மணியே சுடரொளி போற்றி
ஆளாம் அடியர்க் கருள்வாய் போற்றி!..{68}

மேலை வினைகடி விமலி போற்றி
வாலை வளந்தரு வராஹி போற்றி
திருவும் அருவும் திகம்பரி போற்றி
பருவரை மருந்தே பகவதி போற்றி!..{72}

வேற்கண் அம்மை மீனாள் போற்றி
நாற்பயன் நல்கும் நங்காய் போற்றி
மாதவர்க் கிளைய மடக்கொடி போற்றி
மாதவர் போற்றும் சிவக்கொடி போற்றி!..{76}

பவளவரை மேற்பசுங் கொடி போற்றி
தவளவெண் நீற்றோன் தலைவி போற்றி
தீபச் சுடரில் திகழ்வாய் போற்றி
பாவத் தீவினை தகர்ப்பாய் போற்றி!..{80}

குழையா அகத்தைக் குழைப்பாய் போற்றி
இழையாய் எம்மை இழைப்பாய் போற்றி
புவனப் பொருளிற் பொருந்தினை போற்றி
பவளக் கனிவாய்ப் பைங்கிளி போற்றி!..{84}

சந்த்ர சடாதரி சாம்பவி போற்றி
சுந்தரி சுலக்ஷண ரூபிணி போற்றி
கலைமகள் பணியும் மலைமகள் போற்றி
அலைமகள் அடிபணி நலமகள் போற்றி!..{88}

திருக்கோ கர்ணத் திருவே போற்றி
ஒருகோடி நலந்தரு வடிவே போற்றி
நான்முக ரூபிணி ப்ராம்ஹணி போற்றி
நாரண ரூபிணி வைஷ்ணவி போற்றி!..{92}

பண்ணின் நேர்மொழிப் பாவாய் போற்றி
கண்ணின் மணியாய்க் காவாய் போற்றி
குமிழ்தா மரைமலர் கொடியிடை போற்றி
தமிழினும் இனிமை திகழ்ந்தாய் போற்றி!..{96}

அற்றார் அழிபசி தீர்த்தருள் போற்றி
உற்றார் உவப்புற சேர்த்தருள் போற்றி
பெய்யும் வளங்களில் இந்திரை போற்றி
வையகம் காத்திடும் வைஷ்ணவி போற்றி!..{100}

புல்லர்கள் போயற புரிகுவை போற்றி
நல்லன நவின்றன நல்குவை போற்றி
குங்குமம் தந்தருள் திருவடி போற்றி
மங்கலம் தந்தருள் மலரடி போற்றி!..{104}

போற்றி நின்பொன்னடி புதுமலர் போற்றி
போற்றி நின்புகழ்நிறை திருவடி போற்றி
போற்றி நின்திருவடி பணிந்தேன் போற்றி
போற்றி பிரகதாம்பிகா போற்றி போற்றி!..{108}

Also, read



One thought on "ஸ்ரீ அரைக்காசு அம்மன் 108 போற்றி (புதுக்கோட்டை பிரகதாம்பாள்)"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 22, 2024
மகா மிருத்யுஞ்சய மந்திரம்
  • டிசம்பர் 2, 2024
உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்
  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்