- நவம்பர் 14, 2024
உள்ளடக்கம்
இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்பதிலே எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. அப்படியிருக்க நாம் கோவிலுக்குச் சென்று ஏன் இறைவனை தரிசிக்க வேண்டும் என்று நம் ஆன்மிகத்தின் விளக்கம்:
சூரியனுடைய ஒளிக்கதிர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து இருந்தாலும் வெய்யிலிலே ஒரு காகிதமோ அல்லது பஞ்சினையோ வைத்தால் அது நன்றாகக் காயுமேயன்றித் தீப்பற்றாது. ஆனால் அதே வெய்யிலிலே ஒரு சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வைக்கப்படும் காகிதமோ அல்லது பஞ்சோ தீப்பற்றி எரியும்.
அதாவது எங்கும் பரந்துள்ள சூரிய ஒளிக்கதிர்களை சூரியகாந்தக் கண்ணாடியானது சேர்த்து ஒன்றாக்கி அனுப்புவது போல எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள, இறையருளானது சேர்த்து ஒன்றாக திரட்டிக் கோவிலிலே வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு பசுவின் உடல் முழுவதும் குருதி வியாபித்திருந்தாலும், அந்தப் பசுவின் மடியில் தான் உதிரத்தத்தை பாலாக மாற்றித் தரும் சுரப்புகள் உள்ளன. அதேபோல இறைவன் எங்கும் வியாபித்திருந்தாலும்; ஆலயத்தில் அமையப் பெற்றுள்ள சக்திகளினாலே சுரக்கப் பெறும் இறைவனின் கருணையை முழுவதுமாக பெற முடிகின்றது.
இதற்காகவே நாம் அனைவரும் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுமாறு அறிவுறுத்தப்படுகிறோம்.
Also, read
It was very niece of you posting the vishnu sahasranamam in tamil thanks a lot