×
Saturday 28th of December 2024

ஸ்ரீ கணேச புராணத்தின் சாராம்சம்


The Essence of Sri Ganesha Purana in Tamil

முன்னுரை

விநாயகர் புராணம் என்பது கணேசன், கணபதி, கஜானன் மற்றும் பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகரின் அம்சங்களை விவரிக்கும் ஒரு சமஸ்கிருத நூலாகும். இது ஒரு முக்கியமான புராணமாகும், மேலும் இது விநாயகர் நிகழ்த்திய அற்புதங்களை உள்ளடக்கியது.

வேத வியாசர் என்று அழைக்கப்படும் வியாசர் என்பவரால் எழுதப்பட்ட இந்த புகழ்பெற்ற நூல் முந்தைய துவாபர யுகத்தில் நிகழ்ந்தது. விநாயகர் புராணம், கணபதியை தங்கள் முக்கிய கடவுளாகக் கருதும் காணாபத்தியர்களால் மிகவும் புனிதமான நூலாகக் கருதப்படுகிறது, மேலும் விநாயகர் தனது அசாதாரண சக்திகளால் இந்த முழு பிரபஞ்சத்தையும் கட்டுப்படுத்துகிறார் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இந்துமதத்தில் மிக முக்கியமான கடவுளாகக் கருதப்படும் முதல் கடவுளான விநாயகருடன் தொடர்புடையது என்பதால் இந்த புராணம் மிகவும் பிரபலமானதாகக் கருதப்படுகிறது, அவர் தினந்தோறும், நாளின் தொடக்கத்தில் வணங்கப்படுகிறார், மேலும் எந்தவொரு புதிய முயற்சிகளையும் தொடங்குவதற்கு முன்பும் வணங்கப்படுகிறார்.

விநாயகப் பெருமானின் பிறப்பு

ஒரு காலத்தில் தெய்வீக தாயாக இருந்த பார்வதி தேவி, தனது வியர்வையால் ஒரு சிறுவனை உருவாக்கி, அவனுக்கு விநாயகர் என்று பெயரிட்டுள்ளார்.

தலையை இழத்தல் மற்றும் யானைத் தலையைப் பொருத்துதல்

ஒருமுறை அன்னை பார்வதி தேவி குளித்துக் கொண்டிருந்தபோது, விநாயகர் அவளைக் காத்தார், சிவபெருமான் உள்ளே நுழைய முயன்றபோதும், சிறுவன் விநாயகர் தனது தாய் பார்வதியின் இடத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தார். இதனால் சிவபெருமான் விநாயகர் மீது கோபம் கொண்டு திரிசூலத்தால் அவரது தலையை அறுத்து தலையை இழக்கச் செய்தார். இந்த சம்பவத்தைக் கேட்ட பார்வதி தேவிக்கு சிவபெருமான் மீது மிகுந்த கோபம் ஏற்பட்டது, அவளை மகிழ்விப்பதற்காக, சிவபெருமான் தனது தெய்வீக உதவியாளர்களுக்கு யானைத் தலையை விநாயகரின் உடலில் பொருத்துமாறு கட்டளையிட்டார்.

மகத்தான அதிகாரங்களைப் பெறுதல்

விநாயகப் பெருமான் உயிர்த்தெழுந்த பிறகு, சிவன், விஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட பல தேவர்கள் அவருக்கு மகத்தான வரங்களை அளித்தனர், மேலும் அவர் “முதல் கடவுள்” ஆனார்.

விநாயகரின் அவதாரங்கள்

கணபதி என்றும், கணேசர் என்றும் அழைக்கப்படும் விநாயகர், இந்து மதத்தின் முதல் கடவுள் என்பது நாம் அறிந்ததே. தீய சக்திகளை அழிக்க, பல அவதாரங்கள் எடுத்தார். இந்த அவதாரங்கள் அனைத்தும் அசுரர்களை அழிக்கவும், தேவர்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டவை. இவரது பல்வேறு அவதாரங்கள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:-

1. ஏக்தந்த் அவதாரம்

மாடாசுரனின் பிடியில் இருந்து தேவர்களை காப்பாற்றுவதற்காக மற்றும் மாடசுரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக கணபதி இந்த அவதாரம் எடுத்தார்.

2. வக்ரதுண்டா

மத்சாரசுரன் என்ற அரக்கனை அழிக்க கணேச பகவான் இந்த அவதாரம் எடுத்தார். இவ்வுலகில் எந்த ஜீவராசிகளாலும் அழிக்கப்படமாட்டேன் என்று சிவனிடம் வரம் பெற்ற அவன், அதன் பிறகு தேவர்களை துன்புறுத்தத் தொடங்கினான். அதனால் விநாயகரால் அழிக்கப்பட்டார்.

3. கஜானனா

லோபாசுரன் என்ற அரக்கனை தோற்கடிப்பதற்காக இந்த அவதாரம் எடுக்கப்பட்டது. கணேசனின் சக்தியை அறிந்த அசுரன் போர் புரியாமல் கணேசனிடம் சரணடைந்தான்.

4. லம்போதர்

கடல் கொந்தளிக்கும் போது மகாவிஷ்ணு மோகினி வடிவம் எடுத்தபோது, சிவபெருமான் அவர்மேல் ஈர்க்கப்பட்டு அவளைப் பின்தொடர்ந்தார், இதன் விளைவாக குரோதாசுரன் பிறந்தார். சூரிய பகவானின் அருளால், போதுமான சக்திகளைப் பெற்று, பின்னர் தேவர்களைத் தாக்கத் தொடங்கினான். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கணபதி லம்போதர் அவதாரம் எடுத்து அவனைத் தாக்கி, தேவர்களை சமாதானப்படுத்தினார்.

5. மஹோதர்

முருகப்பெருமான் தாரகாசுரனை வதம் செய்தபோது, சுக்ராச்சாரியார் மோகாசுரன் என்ற அரக்கனை உருவாக்கினார். அவன் தேவர்களைத் தாக்கி தேவர்களைக் கொல்ல முயன்றான். கணபதி மஹோதர் அவதாரம் எடுத்து மோகாசுரனை வதம் செய்தார்.

6. விகடன்

காமசுரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட அவதாரம் இது.

7. விக்னேஷ்

இந்த அவதாரத்தில் மலையிலிருந்து பிறந்த மம்காசுரன் என்ற அரக்கனை விநாயகப் பெருமான் தோற்கடித்தார்.

8. தும்ராவர்ணன்

அகராசுரன் என்ற அரக்கனை தோற்கடிக்க இந்த அவதாரம் எடுக்கப்பட்டது.

Listen Mooshika Vahana Modaka Hasta MP3:

சித்தி மற்றும் புத்தியுடன் திருமணம்

சித்தி மற்றும் புத்தி, விநாயகரின் இரண்டு மனைவிகளாக கருதப்படுகிறார்கள். விநாயகருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பிரம்மாவால் அவர்கள் படைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பண்டைய புராணங்களின்படி, விநாயகர் தனது தாய் பார்வதி தேவியின் குணங்களைக் கொண்ட ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறார்.

பார்வதிக்கு நிகரான பெண் யாரும் கிடைக்காததால், பிரம்மா தனது முழு சக்தியையும் பயன்படுத்தி, இரண்டு அழகான பெண்களை உருவாக்கி, அவர்களுக்கு ஞானம் தரும் சித்தி என்றும், புத்திசாலித்தனம் தரும் புத்தி என்றும் பெயரிட்டார். இவர்களது திருமணம் மிகச்சிறப்பாக நடந்து,  அவர்கள் விநாயகருடன் சேர்ந்து வழிபடப்படுகின்றனர்.

விநாயகரின் தொன்மையான பக்தர்கள்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில், ஒரு பக்திமான் தன் குடும்பத்துடன் வசித்து வந்தான். அவன் பெயர் வள்ளலன். இவர் விநாயகர் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார். விநாயகப் பெருமானின் தீவிர பக்தரான இவர், அவரது வீட்டிலும், கோவில்களிலும் தவறாமல் விநாயகரை வழிபட்டு வந்தார். அவர் நன்றாகப் படித்திருந்தாலும், படிப்பில் அவரது செயல்திறன் குறித்து அவரது தந்தை மகிழ்ச்சியடையவில்லை மேலும் அவரது படிப்பைப் பொறுத்தவரை அவருக்கு அதிக அழுத்தம் கொடுத்து வந்தார்.

இளம் வள்ளாளன் பள்ளிப் பாடப்படிப்பை முடித்ததும், தினமும் தன் நண்பர்களை ஒரு அத்திமரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகர் சிலைக்கு அழைத்துச் செல்வான். அருகில் உள்ள பூந்தோட்டங்களில் இருந்து பூக்களை சேகரித்து, மரங்களில் இருந்து உதிர்ந்த பழங்களை சேகரித்து, விநாயகர் சிலைக்கு பூஜை செய்ய பயன்படுத்துவார்.

அது அவரது தந்தைக்குத் தெரியாது. ஒரு நாள், அவரது தந்தை அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென தனது மகன் விநாயகர் சிலைக்கு பூஜை செய்வதைப் பார்த்தார். மகன் மீது கடும் கோபமடைந்த அவர், அவனைக்  கட்டையால் தாக்கினார். இதில் காயமடைந்த சிறுவன், மயக்கமடைந்து தரையில் விழுந்தான். அதன் பிறகும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவனது தந்தை அவனை மீண்டும் மீண்டும் கட்டையால் அடிக்கத் தொடங்கினார்.

இதனால் அவன் பலத்த காயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்தான். சிறிது நேரம் கழித்து, அவரது தந்தை, வீட்டிற்கு சென்று, நடந்த முழு சம்பவத்தையும் மனைவியிடம் கூறியுள்ளார். மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், விநாயகர் கோவிலுக்கு சென்று, தன் மகனுக்கு முதலுதவி அளித்து, கிராம மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு வல்லாளன்  வலியில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைக்கு வந்தான். ஆனால் அவனது தந்தையால் கைகளை உயர்த்த முடியவில்லை, மேலும் அவரது வலது கையின் எலும்புகள் தானாகவே உடைந்தன. தன் தவறை உணர்ந்த அவர், தன் மகனிடம் மன்னிப்பு கேட்டு, விநாயகரையும் வேண்டினார். இளம் வல்லாளனும் தன் தந்தையின் மீது இரக்கம் கொண்டு “ஓம் ஸ்ரீவிநாயகாய நமஹ” என்ற ஞான மந்திரத்தை ஜபிக்கச் சொன்னார், அவரது தந்தையும் அந்த மந்திரத்தை உச்சரித்துள்ளார், அதன் காரணமாக, அற்புதமாக அவரது எலும்பும் இணைக்கப்பட்டது, அவரது மகனான வள்ளலனின் உதவியால் அவர் பூரணமாக  குணமடைந்தார்.

பின்னர் குடும்பத்தினர் அனைவரும் விநாயகரின் தீவிர பக்தர்களாக மாறினர். வல்லாலனின் மரணத்திற்குப் பிறகு, அவர் விநாயகரின் தெய்வீக இருப்பிடமான ஸ்ரீ கணேசலோகத்தை அடைந்தார்.

புருச்சுண்டி

புருச்சுண்டி என்பவர் திரேதாயுகத்தில் வாழ்ந்த ஒரு பண்டைய முனிவர் ஆவார். இவரது இயற்பெயர் விப்ரதன், அவர் தெய்வீக முனிவர் அந்தஸ்தை அடைவதற்கு முன்பு ஒரு வேட்டைக்காரராக இருந்தார். வேட்டைக்காரன் விப்ரதன், விலங்குகளை வேட்டையாடி அதன் மூலம் சம்பாதித்து தன் பிழைப்பை  நடத்தி வந்துள்ளான். ஒரு முறை, அவரது இடத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டது, அவர் வறுமையால் அவதிப்பட்டார், எனவே அவர் கொள்ளையடிக்கத் தொடங்கினார். ஒருநாள், ஸ்ரீ முக்கால முனிவரின் உடைமைகளை எடுத்துச் செல்ல முயன்ற போது, அவரது கனிவான அணுகுமுறையாலும், அறிவுரையாலும் பாவச் செயல்களைச் செய்வதை நிறுத்திவிட்டு, விநாயகரை நோக்கிக் கடுமையான தவம் செய்யத் தொடங்கினார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, விநாயகர் அவர் முன் தோன்றி, வேண்டுதல் நிறைவேறும் மரத்தை(கற்பகவிருக்ஷம்) வழங்கி அருள்பாலித்தார். விநாயகரின் அருளால் புருச்சுண்டி முனிவரின் தோற்றம் விநாயகரின் தோற்றமாக மாறியது. ஒரு முறை புதுமணத் தம்பதிகள் அவரைப் பார்த்துச் சிரித்து, அவரது தோற்றத்தைக் பரிகாசித்தனர், அதன்காரணமாக, அவர் உடனடியாக, அவர்களை மரமாக மாறுமாறு சபித்தார். பின்னர், அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்கள் மீது இரக்கம் கொண்டு, அவர்கள் புனித விருட்சமாக மாறும் வரத்தை வழங்கினார், மேலும் விநாயகரும் அப்புனித மரங்களுக்கு இடையில் வசித்துவருகின்றார், மக்கள் விநாயகரை வணங்கும் போது அப்புனித மரங்களை யும் வணங்குவார்கள்.

ஒரு சமயம், தெய்வீக விருட்சத்தால் கவரப்பட்ட இந்திரன், புருச்சுண்டி முனிவரை அணுகி, தெய்வீக மரமான கல்பகவிருட்சத்தை சொர்க்கலோகத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதி கேட்டார்.

உடனே புருச்சுண்டி மாமுனிவர், தெய்வீக மரத்தை அவனுக்குக் கொடுத்துவிட்டு விநாயகப் பெருமானை நோக்கித் தவத்தைத் தொடர்ந்தார். இவரது உன்னதமான செயலைக் கண்ட விநாயகப் பெருமான் அவருக்கு முக்தி அளித்தார்.

காசிராஜன்

மஹோர்கடராக அவதாரம் எடுத்தபோது, அப்போதைய காசி மன்னராக இருந்த காசிராஜனுடன் நட்பு கொண்டார். அவரது அரண்மனையில், மகோற்கடர், நிறைய சுவையான உணவைச் சாப்பிடுவார், குறிப்பாக காசிராஜனின் மனைவி, ராணி தேவிபிரபாவால் தயாரிக்கப்பட்ட சுவையான கொழுக்கட்டைகளை, அவளே மஹோர்கட வடிவில் இருந்த விநாயகருக்கு அன்போடு பரிமாறுவார்.

காலப்போக்கில் மன்னர் காசிராஜன் மற்றும் அவரது ராணி தேவிபிரபா ஆகியோரின் செயலால் மகிழ்ந்த விநாயகர், அவர்களை அவர்களை அவர்களின் சரீரத்துடனேயே தனது கணேச லோகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஸ்ரீ விநாயகர் புராணத்தில் கூறப்பட்டுள்ள விநாயகரின் சிறப்பு

இந்து மரபில், முதல் கடவுள் விநாயகர் தான்! ஒவ்வொரு இந்துவும் விநாயகப் பெருமானை தடையை நீக்குபவராக வழிபடுகிறார்கள், மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளைச் செய்வதற்கு முன்பு அவரை தினமும் வணங்குவார்கள். ஞானம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக விநாயகர் திகழ்கிறார். இவர் தேவர்களின் கடவுளாக கருதப்படுகிறார். விநாயகர் கோவில்கள், இந்தியாவின் உள்ள அனைத்து பகுதிகளிலும் அமைந்துள்ளது. ஒரு மரத்தடியில் கூட விநாயகர் இருப்பார்.

தெய்வங்கள் கூட எந்த ஒரு புதிய செயலை செய்யும் முன் விநாயகரை வழிபடுவதாக நமது புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கணபதிக்கு அப்படி ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அவர் பார்வதி தேவியிடமிருந்து தோன்றியவர் என்பதால், அவரிடம் சக்தி அம்சம் உள்ளது. அதாவது, மக்களைப் பாதுகாத்து, அவர்களின் வாழ்க்கையில் உள்ள தீய சக்திகளை அகற்றுதல். எனவே விநாயகப் பெருமானின் அருள் நம் வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சி  கிடைக்க, நம் விநாயகப் பெருமானை தினந்தோறும் நாம் வழிபடுவோம்.

“ஓம் ஸ்ரீ விநாயக மூர்த்தி நமஹ”

எழுதியவர்: ரா.ஹரிசங்கர்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஜூன் 5, 2023
பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்வதின் பலன்கள்
  • ஏப்ரல் 30, 2023
விநாயகர் கவசம் [பிள்ளையார் கவசம்]
  • மார்ச் 19, 2022
கணபதி ஹோமம் செய்முறை & பலன்கள்